|
சிங்கப்பூர்
திருக்குறள் விழாவில்
ஹிமானா
|
 |
|
திரு ஹரிகிருஷ்ணன் ஹிமானா
சையதுக்கு சிறப்புச் செய்த
போது... |
சிங்கப்பூரில் தமிழ் மொழி இரு வார
கொண்டாட்டங்களின் ஒரு கூறாக தமிழ் மொழி
பண்பாட்டுக் கழகமும் வளர்தமிழ் இயக்கமும்
இணைந்து 8-4-2007 -அன்று கொண்டாடிய 20-வது
திருக்குறள் விழா தமிழ் மணம் வீசும் விழாவாக
அமைந்தது. சிங்கப்பூர் நாடாளுமன்ற துணை
சபாநாயகர் குமாரி இந்திராணி ராஜா சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொண்ட விழாவில், தமிழ்
மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு
ஹரிகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழா
ஏற்பாட்டுத்தலைவர் சங்கம் எம்.இலியாஸ்
விளக்கவுரையாற்றினார். "நிற்க அதற்குத் தக "
என்ற தலைப்பில் டாக்டர் ஹிமானாசையத்
அவர்களும், "திருக்குறள் விருந்து என்ற
தலைப்பில் மலேசியாவின் வழக்கறிஞர் திரு
பாண்டிதுரையும் சிறப்புரை வழங்கினர். 6
பேருக்கு 'திருவள்ளுவர்' விருது
வழங்கப்பட்டது.
நன்றி : எம்.கே. வள்ளுவன், தமிழ் நேசன்
நாழிதழ், மலேசியா
|
|
திருப்பாலைக்குடியில் மாநில கைப்பந்து
போட்டி
தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பாலைக்குடியில் அன்வாருல் இளைஞர்
விளையாட்டு கழகம் சார்பில் பக்கீர்
மஸ்தான் சாகிப்வலி நினைவு மாநில அளவிலான
மின் ஒளி ஆண்கள், பெண்கள் தனியாக பங்கேற்ற
கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடந்தது.
ஜமாத் தலைவர் அன்சார் போட்டியை துவக்கி
வைத்தார். ஊராட்சி துணைத்தலைவர் முகம்மது
இக்பால் வரவேற்றார். மதுரை,
திருப்பாலைக்குடி, சென்னை, நாகர்கோவில்,
கோயம்புத்துõர், அதிராம்பட்டினம்,
கீழக்கரை உட்பட ஆண்கள் பிரிவில் 16 அணிகள்
விளையாடின. பெண்கள் பிரிவில் சென்னை,
கோயம்புத்துõர், நாகர்கோவில் ஆகிய ஊர்களை
சேர்ந்த மூன்று அணிகள் மோதின. இறுதி
சுற்றில் கோயமுத்துõர் மகளிர் அணி முதல்
பரிசு பெற்றது. இரண்டாம் பரிசை சென்னை
போலீஸ் அணியும், மூன்றாம் பரிசை
நாகர்கோவில் அணியும் பெற்றன. ஆண்களுக்கான
போட்டியில் அதிராம்பட்டினம் அணி 27க்கு 25
புள்ளி எடுத்து முதல் பரிசை பெற்றது.
இரண்டாம் பரிசை மதுரை யாதவா கல்லுõரி
அணியும் மூன்றாம் பரிசை திருப்பாலைக்குடி
அன்வாருல் அணியும் பெற்றன. வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் விழா
மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ரவிசந்திர
ராமவன்னி தலைமையில் நடந்தது. ராமநாதபுரம்
எஸ்.பி.,திருஞானம் வெற்றி பெற்ற
அணிகளுக்கு பரிசு வழங்கினார். தெற்கு
ஜமாத் தலைவர் முகம்மது அன்சாரி, ஊராட்சி
தலைவர் செல்வமணி, கீழக்கரை பேரூராட்சி
துணைத்தலைவர் ஜெய்னுதீன், ஆர்.எஸ்.மங்கலம்
ஒன்றிய துணைத்தலைவர் சக்திவேல், மாவட்ட
கைப்பந்து கழக துணைத்தலைவர் செழியன்,
மாவட்ட காங்கிரஸ் சேவாதள அமைப்பாளர்
தினேஷ்பாபு, வக்கீல் பிரிவு தலைவர்
முனியசாமி, உட்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
|