முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
ரியாத்தில் குழந்தைகளுக்கான் தமிழ் பாட வகுப்பு

குழந்தைகளுக்கான் தமிழ் பாட வகுப்பு வரும் வெள்ளிக்கிழமையன்று ( 21 July 2006 ) தொடங்குகிறது. 5 முதல் 12 வயது வரையுள்ள, தமிழ் மொழி கற்க ஆர்வமுள்ள சிறுவர்கள் இந்த வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்/மாணவி பெயர், பெற்றோர் பெயர், முகவரியை kalvikkoodam@riyadhtamilsangam.com -க்கு அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம். இணய அஞ்சல் வசதி இல்லாதவர்கள் 0503158935 எண்ணிற்கு மாலை 7.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக தொடர்பு கொள்ளவும்.

Regards

M.Vetrivel
Kalvikkoodam-Arts and Literary Committee
Riyadh Tamil Sangam.
kalvikkoodam@riaydhtamilsangam.com

இரத்த வங்கி:

நமக்கு தேவையான இரத்த வகையை எளிதாக பெற்றுக் கொள்ள www.bharatbloodbank.com ஐப் பார்க்கவும்.

பல சமயங்களில் குறிப்பிட்ட குரூப் இரத்தம் கிடைக்காமல் சில மரணங்கள் சம்பவித்துள்ளன.

அவசர காலங்களில் இது போன்ற டேடாபேஸ்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்

'சாதனை புரிய வயது தடையல்ல், விடாமுயற்சி இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துள்ளார் மாஷா நஸீம் எனும் இளம் விஞ்ஞானி. இவர் நாகர்கோவில் பள்ளியில் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
2004 - இல் மாஷா நஸீம் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, இரயிலவே அமைச்சர் லாலுபிரசாத் யாதவின் ஓர் அறிக்கையைப் பத்தரிகையில் படித்தார். 'தண்டபாளத்தில் குப்பை போட்டால் அபராதம்' என்று லாலு கூறியிருந்தார்.
இதுதான் மாஷாவை யோசிக்க வைத்தது.
'நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குப்பை போட்டால் அபராதம் என்கிறார்..! ஆனால் ரயிலுக்கு உள்ளே இருந்து வெளியாகும் திடக் கழிவுகள் எல்லாம் தண்டவாளத்தில் தானே விழுகின்றன. அதைத் தடுக்க என்ன செய்யலாம்?
இந்த வினாதான் மாஷாவைச் செயல்படத் தூண்டியது. தன் தந்தை காஜா நஜ்முதீனிடம் தன் எண்ணத்தைச் சொல்லி தேவையான பொருட்களை வாங்கி ஒரு புதிய இயந்திரத்தையே கண்டுபிடித்துவிட்டார்.
இவர் உருவாக்கியுள்ள இயந்திரத்தை இரயில் பெட்டிகளில் பொருத்திவிட்டால் தண்டவாளத்தில் அசுத்தங்களே விழாது.
தம்முடைய கண்டுபிடிப்பு பற்றி மாஷா கூறுகிறார்.
எனக்கு அறிவியலில் நிறைய ஆர்வம் இருக்கிறது. அறிவியல் தொடர்பான விஷயங்களை நுணுகி, நுணுகி ஆராயும் பழக்கம் உண்டு. தண்டவாளங்களைத் தூய்மையாக வைத்துக்க கொள்ள வேண்டும் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ரயிலில் உள்ள கழிப்பறையை நாம் பயன்படுத்துகிறோம். கழிவுகள் எல்லாம் தண்டவாளத்தில்தானே விழுகின்றன. இது பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது தான் 'ஹைஜீனிக் டிரைனேஜ் டிஸ்போஸல் சிஸ்டம்" பற்றி தெளிவு கிடைத்தது."
மாஷா வடிவமைத்திருக்கும் ஹை-டெக் டிரெயின் டாய்லட் (Hi-Tech Train Toilet) எப்படிச செயல்படுகிறது?
மாஷாவே கூறுகிறார்:
"அதாவது ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் கழிப்பறை உள்ளது. அதன் கீழே ஒரு பெட்டி வடிவ கழிவுத் தொட்டியை அமைக்க வேண்டும். பயணிகள் வெளியேற்றும் கழிவுகள் இந்த தொட்டியில் சேமிக்கப்படும். இதை இயக்கும் சுவிட்ச் ரயில் இஞ்ஜின் டிரைவரிடம் இருக்கும். ரயில் நிலையம் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போதே இதை டிரைவர் ஆஃப் செய்து தொட்டியை மூடி விடலாம். பிறகு நிலையத்திலிருந்து ரயில் கிளம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் போனதும் மறுபடி ஆன் செய்து கழிவுகளை வெளியேற்றி விடலாம். ஆள் நடமாட்டமில்லாத வனாந்திரக் காட்டில் கொட்டினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது.
இவருடைய கண்டுபிடிப்பு நாடு முழுவதிலும் இருந்து பரவலான பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இரயில்வே இணைஅமைச்சர் வேலு, தமிழக ஆளுநர் பர்னாலா எனப் பலரும் பாராட்டிப் பரிசளித்துள்ளனர்.
அணைத்துக்கும் மேலாக குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்து தான் உருவாக்கிய இயந்திரத்தை செயல்விளக்கம் செய்து காட்டியுள்ளார். 'This is an excellent idea' என்று அப்துல் கலாம் மனம் திறந்து மாஷாவைப் பாராட்டியுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அறிவயில் கண்காட்சியில் மாஷாவின் கண்டுபிடிப்பு பரிசு பெற்றதைத் தொடர்ந்து ஹைதராபாதில் நடந்த 93வது இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி மாஷா அழைக்கப்பட்டிருந்தார். இது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும்.
மாஷா நஸீமின் தந்தை காஜா நஜ்முதீன். தாய் சுமைய்யா பேகம். இவர்களின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிப் புதூர்க்கடை.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (எஸ். ஐ. ஓ) மாநிலச் செயலாளர் அஹ்மத் ஜலாலுத்தீனும் மருத்துவர் மொய்தீன் M.S. அவர்களும் மாஷாவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவருடைய சாதனையைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இன்னும் பல சிறப்புகளைப் பெற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தர இளம் விஞ்ஞானி மாஷாவை மனமார வாழ்த்துவோம்.
நன்றி:சமரசம் (1-15th July 2006)
 
துபாயில் போக்குவரத்து விதிமுறை மீறல் : ஒரே மாதத்தில் 13 மில்லியன் திர்ஹம் வசூல்


துபாயில் கடந்த ஜூன் மாதம் வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல் காரணமாக 13 மில்லியன் திர்ஹம் வசூலாகியுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. 65,689 வாகனங்கள் விதிமீறல் காரணமாக ராடார் காமிராவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே மாதத்தில் கடந்த வருடம் 51,000 பேர் இவ்விதிமுறை மீறலில் ஈடுபட்டனர். இவ்விதிமுறை மீறலுக்கு முக்கிய காரணமாக காவல்துறையினர் குறிப்பிடுவது இளம் ஓட்டுநர்களைத்தான், இதுமட்டுமல்ல அமீரகத்தின் வியத்தகு வளர்ச்சி காரணமாக சில பணக்கார வாகன ஓட்டிகள் இருநூறு திர்ஹம் அபராதத்தை ஒரு பொருட்டாகவே கொள்வது இல்லை.
 
World's first Online Book Fair

World's first Online Book Fair has started (4 th July 06). This book fair will be going on for a month. Website claims there are 1/3 million e-books available for free access / download. Those of you, who are interested in readership, can make use of the opportunity.
http://worldebookfair.com/
World eBook Library Catalogs and Collections
The World eBook Library Consortia Collection shelves more than 330,000 PDF eBooks in 100+ languages contained in 112 of the finest eBook and eDocument collections published on the Internet today. The mission of the World eBook Library's Acquisition Department is to add new eBooks 24/7 to our shelves.
For Technical E-Books, go to http://worldebookfair.com/Technical_eBook_Colleciton.htm
For Islamic E-Books, go to http://worldebookfair.com/Islamic_eBook_Library.htm
 

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com