முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
வளைகுடாவின் மிகச்சிறந்த தொழிலதிபர் போட்டி இறுதிச் சுற்றில் சையத் எம் ஸலாஹ¤த்தீன்

வளைகுடாவின் மிகச்சிறந்த தொழிலதிபரை தேர்வு செய்யும் போட்டி http://www.abameonline.com எனும் இணையத்தளம் மூலம் நடைபெற்று வருகிறது.

The ABA ME Outstanding Asian contribution to Middle East Development Award
The ABA ME Asian Business Leader of the Year


ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹ¤த்தீன் சிறப்பிடம் பெற ஆன்லைன் மூலம் வாக்களித்து தமிழரின் பெருமை உலகறியச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ETA அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தில் சுமார் 60,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் எண்பது சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயிலும், தமிழகத்திலும் பல்வேறு சமூக, கல்வி மேம்பாட்டுப்பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார்

மலேசியத் தமிழ் இலக்கண அறிஞர் சீனி நைனா முஹம்மதுக்கு தொல்காப்பியர் விருது

ஆண்டு தோறும் தமிழ்ச்சுரங்கம் தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமையும் பிற இலக்கண நூல்களில் சிறந்த பயிற்சியும் மிக்கவர்களுக்குத் தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை இவ்விருது தொல்காப்பியத்தில் சிறந்த அறிஞர்களான புலவர் வெற்றியழகன், பேரா. ஆ. சிவலிங்கனார், பாவலேறு பாலசுந்தரம், இலக்கணக்கடல் கோபாலய்யர், சிவத்திரு அடிகளாசிரியர் ஆகியோருக்கு அளிக்கப் பெற்றுள்ளது.

இவ்வாண்டு மலேசிய நாட்டில் தொல்காப்பிய இலக்கண அறிவைப் பரப்பி வரும் தமிழ்த்திரு சீனி நைனா முஹம்மது அவர்களுக்கு அளிப்பதெனத் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

அறிஞர் சீனி நைனா முஹம்மது அவர்கள் தொடர்ந்து இரண்டாண்டுகளாகத் தொல்காப்பிய வகுப்பை மலேசியத் தமிழர்களுக்கு நடத்தி வருகிறார். உங்கள் குரல் என்னும் மலேசிய தமிழ் இலக்கியத் திங்கள் இதழின் ஆசிரியரான இவர் தொடர்ந்து உங்கள் குரலில் தொல்காப்பிய மரபு தமிழ் யாப்பியல் தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வருகிறார். மலேசிய அரசின் கல்வித்துறையின் சார்பில் மலேசிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மலேசியாவின் பல பகுதிகளில் இலக்கண அறிவைப் புகட்டி வருகிறார். மேலும் பல பொது அமைப்புகளின் ஏற்பாட்டிலும் கவிதைப் பட்டறைகள், இலக்கணப் பயிலரங்குகள் இலக்கியச் சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறார்.

60 ஆண்டு அகவையுடைய இவ்வறிஞர் நல்லார்க்கினியர். இல்லார்க்கினியன், கரும்பன், அபுபரிதா, இபுனு செய்யிது ஆகிய புனைப்பெயர்களில் தமது படைப்புகளை அளித்து வருகிறார். பல நூல்களுக்கு ஆசிரியரான இவர் நம் நாட்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டவுடன் மலேசியாவில் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர் என்னும் அரிய தமிழ்த் தகவல் மலரை உங்கள் குரல் சார்பில் வெளியிட்டுள்ளார். இப்பணியைப் பாரத குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களும், மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்களும், சமுதாயச்சுடர் தஸ்லீம் முஹம்மது இப்ராஹிம் அல்ஹர் ( மலேசியா ) அவர்களும் பாராட்டியுள்ளனர்.

நன்றி : தமிழ்ப்பணி மாத இதழ்

சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழு

ரியாதின் லெ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற இவ்வரவேற்பினை இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தின் பன்னிரு உறுப்பினர்களும் அகமகிழ்வுடன் ஏற்றுச் சிறப்பித்தனர்.  இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்; பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர். இக்குழுமத்தின் தலைவராக இருந்து புதுவை மாநில அரசின் கல்வி-இளைஞர்நலத்துறை அமைச்சர் M.O.F.H ஷாஜஹான் வழிநடத்தினார்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இந்திய விஜயம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக அமைந்து இரு நாடுகளிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாயின. அவற்றுள் பண்பாட்டுப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இளைஞர் பிரதிநிதிகளின் வருடாந்திர வருகைப்பரிமாற்றமும் ஒன்று. அதன்படி ஜூலை 2007ல் இந்தியாவுக்கு சவூதி இளைஞர் குழுமம் வருகை அளித்திருந்தது. இப்போது இந்திய இளைஞர்களின் முறை.

விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு M.O.H ஃபரூக் மரைக்காயர் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தின், கலாச்சார அறிதல்களின் தேவையையும், இருநாட்டு இளைஞர்களும் அடையவேண்டிய ஆழிய புரிந்துணர்வையும் வலியுறுத்திப் பேசினார்.  ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினரின் சுய அறிமுகங்களுக்குப்பின் தலைவர் திரு. அ.சஜ்ஜாவுத்தீன் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி நவின்றார்.

இக்குழுமத்தின் சவூதி அரசாங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுலைமான் முஹம்மத் அல் ஸுவெஹைரி இந்தியர்களின் விருந்தோம்பலை; இரக்க மனப்பான்மையை சிலாகித்தார்.  இந்திய இளைஞர் பிரதிநிதி குழுமத்தில் ஒருவராக வந்திருந்த புதுவை தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் திரு ஆதவன்  அவர்கள் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இந்த வரவேற்பளிக்கும் ஆவலை புகழ்ந்து பேசினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு.ஜஃபர் சாதிக் இவ்விழாவின் ஒருங்கிணைப்பில் திறனாற்றிட, இணைச்செயலர் திரு. விஜய்சுந்தரம்  விழாவைத் தொகுத்தளித்துச் சிறப்பித்தார்.  இதே விழாவில் இந்திய பன்னாட்டு பள்ளியில் கடந்த
வருடத்தில் மேல் நிலை வகுப்பில் 93.8 மதிப்பெண்கள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி சீனி ஹுசைனா சாஹுல் ஹமீது அவர்களை பாராட்டும் வண்ணமாக வருகை தந்திருந்த அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று
வாழ்த்தினர்.

முன்னதாக, திரு.சஜ்ஜாவுத்தீன் அவர்களால் இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தலைவர் அமைச்சர் திரு. M.O.H.F. ஷாஜஹானுக்கு பூங்கொத்து அளிக்கப்பட்டது.

ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2008

சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம் ஆண்டு தோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2008 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/- பரிசு வழங்கப் பெறும். இப்பரிசுக்காக இவ்வாண்டு "வன்முறைக்கு எதிரானது இஸ்லாம்" என்னும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு ( Space ) 200 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒருபுறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.3.2008 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு அனுப்பப் பட வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு :

சீதக்காதி அறக்கட்டளை
எண் 688 ( புதிய எண் 272 ) அண்ணா சாலை
சென்னை 600 006

தொலைபேசி : 28297438 

பனைக்குளம் பகுதியிலிருந்து 20 பேர் ஹஜ் பயணம்

பனைக்குளம், நவ. 16: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 20 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்..
இஸ்லாமியர்களின் இறுதி கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் மெக்கா செல்வது வழக்கம். இந்த ஆண்டு வேதாளை, மரைக்காயர்பட்டினம், உச்சிப்புளி, பெருங்குளம், பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 200 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
முதல்கட்டமாக பனைக்குளத்தில் இருந்து ஜூம்ஆ பள்ளி பேஷ் இமாம் ஹாஜாமைதீன், அத்தியூத்து ஊராட்சி மன்ற தலைவர் உம்முல்பைலுனா உட்பட 20 பேர் மெக்கா சென்றனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி பனைக்குளம் நத்தர்வலியுல்லா தர்காவில் நடந்தது.
பேஷ் இமாம் ஹாஜாமைதீன் துஆ ஓதினார். நிகழ்ச்சியில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ரஹ்மத்ஆலம், நிர்வாக சபை தலைவர் ஹம்சத்அலி, ஒன்றிய ஆணையாளர் பஞ்சவர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் முப்பெரும் விழா

பனைக்குளம், நவ.16: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா, மரக்கன்று நடும் விழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பனைக்குளம் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமை அசிரியர் ஜவஹர்அலி தலைமை வகித்தார். தமிழக கலை பண்பாட்டு கழக தலைவர் வாசு இலக்கியம் பற்றி பேசினார். ஜமாத் தலைவர்கள் ஹம்சத்அலி, ஆலம் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் இல்லை: பயணிகள் சிரமம்

பரமக்குடி: அடிப்படை வசதிகளே இல்லாமல் செயல்பட்டு வரும் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மதுரைராமேஸ்வரம் அகல ரயில்போக்குவரத்து துவங்கி நாள் முதல் இன்று வரை அவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் பரமக்குடி குறிப்பிடத்தக்க ஸ்டேஷன் ஆகும். இங்குள்ள மக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்ல ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இங்கு அகல ரயில் பாதை அமைப்பின் போது கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் தான் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. ஆனால் குடிநீர், சாலை, கழிப்பறை, நடை பாதை என எந்த வசதியும் இல்லை. மின்விளக்குகள் இல்லாததால் சமூக விரோத அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சமும் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ரூ. பல கோடி மதிப்பீட்டில் நிறைவேற் றப்பட்ட அகல ரயில் திட்டத் தில் பரமக்குடி போன்ற நகர் பகுதியில் அடிப்படை வசதிகளே இல்லாமல் செயல்படும் ரயில்வே ஸ்டேஷன்களால் மக்களிடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வசதிகளை ஏற்படுத்த முன் வரவேண்டும்.

துபாயில் எம்.ஜே. அக்பர்

துபாய் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை எனும் தலைப்பில் பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் 18.11.2007 ஞாயிற்றுக்கிழமை மாலை உரை நிகழ்த்தினார்.

 
            குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 16-11-2007 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து குவைத் , சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப். எம் . முனீர் அஹ்மத்   அவர்களின் இல்லத்தில் மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவும், தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
            இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவரும் , குவைத், அப்பாஸிய்யா , மஸ்ஜித் உக்காஷாவின் இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையேற்க , சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் ஏ.ஆர் . முஹம்மது அலீ ரஷாதி அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத , சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப். எம். முனீர் அஹ்மத் அவர்கள் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
            சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர்கள்  மவ்லவீ ஹாஃபிழ் அஷ்ஷைக் முஹம்மது இப்ராஹீம் மன்பயீ அவர்கள் 'இஸ்லாமிய கடமைகள் ' என்ற தலைப்பிலும் , பேராசிரியர் மவ்லவீ அஷ்ஷைக் ஏ . அப்துஸ் ஸலாம் தாவூதி அவர்கள் 'ஹஜ் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பிலும்  சிறப்புரையாற்றினர்.
            சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஷ்ஷைக் அ .பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன், சென்னையிலிருந்து வெளியாகும் முற்போக்கு இதழான ' சமநிலைச் சமுதாயம்' மாத இதழை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி அவர்களுக்கு கடந்த மாதம் திருமண நடந்தையொட்டி புதுமண தம்பதிகளுக்கு சங்கத்தின் சார்பாக திருமண பரிசும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .
            நிகழ்ச்சித் தலைவர் ' முஸ்லிம் குடும்பங்கள் - தற்கால சூழலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்' என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய பின், சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைக் எம். எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் நன்றி கூறினார். சங்கத்தின் துணைத்தலைவர் ஜனாப் அல்ஹாஜ் என். ஏ . அப்துல் பாரீ அவர்கள் துஆ ஓத, இரவு உணவுடன் இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
            இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய , இலங்கையைச் சேர்ந்த உலமாக்கள், தொழிலதிபர்கள் , வியாபாரிகள், பணியாளர்கள் , பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்        
           

செய்தி :    

தகவல் தொடர்பு பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

மின்னஞ்சல் : q8tic@yahoo.com

இணையதளம் : www.k-tic.com
யாஹூ குழுமம் :
http://groups.yahoo.com/group/K-Tic-group

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com