முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுரை

ராமநாதபுரம் :மேற்படிப்பு கல்வி உதவி தொகை பெற விரும்பும் சிறுபான்மையினர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புவரை அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லுõரிகளில் பயிலும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட் டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பயிலும் 372 முஸ்லிம்கள்,ஆயிரத்து 496 கிறிஸ்தவர்கள், 4 சீக்கியர்கள், 4 புத்தமதத்தினருக்கு இந் தாண்டு கல்வி தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இதற்காக விண் ணப்பிப்போர் முந்தைய ஆண்டின் பள்ளி இறுதி தேர்வில் 50 சதவீத மதிப் பெண்கள் குறையாமல் பெற் றிருக்க வேண்டும். பிற்படுத் தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 200708 ம் ஆண்டில் கல்வி உதவி தொகை பெற்றிருக்க கூடாது. ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மாணவிகளுக்கு வழங்கப்படும். போதுமான மாணவிகள் இல்லாதபட்சத்தில் அவர்களுக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.ஒரு குடும்பத்தில் இரண்டுபேருக்கு மட்டுமே வழங்கப்படும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்ஆண்டு வருமானம் ரூ.இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இது தொடர்பான வருமான சான்று ரூ.20 மதிப்புள்ள கோர்ட் சாரா முத்திரைதாளில் இணையதளத்தில் உள்ள மாதிரி படிவத்தின்படி உறுதி ஆவணம் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.சான்று விபரத்தில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.

ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம்.

இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரி
நெ 166 முடிச்சூர் ரோடு
( பதிவு அலுவலகம் எதிரில் )
மேற்கு தாம்பரம்
சென்னை 600 045
தொலைபேசி : 9382377788/044 32918452 / 9380586462

நன்றி : சமரசம் மாதமிருமுறை ஜனவரி 2008

துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது நேற்று சென்னையில் வழங்கப்பட்டது.

நீரிழிவு நோயை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி சாதனங்கள் வழங்கும் விழா, பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தங்கபதக்கம் வழங்கும் விழா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகியவை சென்னையில் நேற்று நடந்தது.

நீரிழிவு நோய்க்கான சிகிச்சை அளிக்கும் எம்.வி. ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த இந்த விழாவில் அந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் வரவேற்றார்.

டாக்டர் மீர் முஸ்தபாவுக்கு விருது

விழாவில் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத்தார். மேலும் அவர், நீரிழிவு நோயை வராமல் தடுக்க வழிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதற்கான விளம்பர சுவரொட்டியை மத்திய அரசின் உடல்நலத்துறை தலைமை இயக்குனரக துணை தலைமை இயக்குனர் டாக்டர் பி.எச்.அனந்த நாராயணன் வெளியிட்டார்.

டாக்டர் மீர் முஸ்தபா உசேனின் மருத்துவ சேவையையும், அவரது வாழ்நாள் சாதனைகளையும் பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை உலக சுகாதார அமைப்பின் ஜெனீவா பொறுப்பு அதிகாரி டாக்டர் கோக்ரா ராஜிலிக் வழங்கினார். டாக்டர் கோக்ரா ராஜிலிக்குக்கு பேராசிரியர் `எம்.விஸ்வநாதன் தங்க பதக்க விருது' வழங்கப்பட்டது. பேச்சு போட்டிக்கான விருது சென்னை மருத்துவ கல்லூரி மாணவிகள் இஸ்பிகா, சந்தியா மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவி சாரோன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டது.

விழாவில் டாக்டர் பி.எச்.அனந்த நாராயணன் பேசியதாவது:-

உடற்பயிற்சி அவசியம்

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் இந்தியர்களுக்கு தான் அதிகம் வருகிறது. 2015-ம் ஆண்டு உலகிலேயே நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா விளங்கும் என்று நம்பப்படுகிறது. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இருதய நோயும் எளிதில் வர வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோயை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீரிழிவு நோய் வந்தால் அதை சரியாக பராமரிக்காமல் விட்டால் சிறுநீரகம் கெட்டுப்போகும்.

எனவே நீரிழிவு நோய் வந்தவர்களும், வராதவர்களும் தினமும் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைந்தபட்சம் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும். கீரைகளையும், காய்கறிகளையும் அதிக அளவில் சாப்பாட்டில் சேர்க்கவேண்டும்.

மது அருந்துவதை கைவிடவேண்டும். புகையிலை போடுவதையும் புகையிலை பொருட்களான சிகரெட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு நடந்து கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசியதாவது:-

ஆராய்ச்சி

சர்க்கரை நோய் வராமல் தடுக்க தடுப்பு ஊசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகமும் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. அதற்கு அதிக நிதி தேவை இதற்கு உலக சுகாதார அமைப்பை நாடியுள்ளோம்.

இந்தியாவில் தான் பரம்பரை வழியாக சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இனி என்ன வாழ்க்கை என்று எண்ணி உடல்நலத்தை பேணாத காரணத்தால் தான் அதிக பேருக்கு சர்க்கரை நோய் வருகிறது. 1971-ம் ஆண்டு இருந்த சர்க்கரை நோயாளிகளின் சதவீதம் இன்று 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால் நகர்ப்புறத்தில் குறைந்துள்ளது. காரணம் விழிப்புணர்ச்சி. கிராமப்புற மக்களுக்கு நீரிழிவு நோய் எதனால் வருகிறது என்றும், வராமல் தடுக்க எப்படி நடக்கவேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

அதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. டாக்டர் விஜய் விஸ்வநாதனும் அந்த பணியில் உள்ளார். இது பாராட்டத்தக்கது.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியை அளிக்கவேண்டும். அதிக எடை போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொழுப்பு உள்ள உணவை தவிர்க்கவேண்டும்

இவ்வாறு டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசினார்.

8 மொழிகளில் விழிப்புணர்வு

விழாவில் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பேசுகையில், நீரிழவு நோயை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 8 மொழிகளில் கையேடுகள் அச்சடித்துள்ளோம். அதை இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகள் ஆரம்ப சுகாதார மனைகள் ஆகியவற்றுக்கு அனுப்பி சர்க்கரை நோயை தடுக்க உள்ளோம் என்றார்.

இஸ்லாமும் இந்தியாவும் நூல் வெளியீட்டு விழா

"இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூல் வெளியீட்டு விழா, ராமநாதபுரம் ரோசரி மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயோனியர் மருத்துவமனையும், மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகமும் இணைந்து நடத்திய இவ் விழாவிற்கு, ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மை. அப்துல்சலாம் தலைமை வகித்தார்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் செயலர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா, மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகத் தலைவர் அப்துல்வஹாப், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி காதிர் முகைதீன், திருப்பாலைக்குடி ஐக்கிய ஜமாஅத் தலைவர் உமர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐக்கிய சமூக நலக் கூட்டமைப்பின் செயலர் ஹாஜா முஹ்யித்தின் ஆலிம் வரவேற்றார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த டி. ஞானையா எழுதிய "இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூலின், முதல் பிரதியை பயோனியர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஏ. அஹமது அஷ்ரப் வெளியிட, அதை ஏ.ஆர். மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். பாத்திமா சின்னத்துரை பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது பிரதியை, தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

நிறைவாக, செய்யது ஜாபர்அலி நன்றி கூறினார்.

14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பதக்கங்களின் சாதனை

நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.

இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.

மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலை விரைவில் துவக்கும் ரேடியோ,டிவி சேவை

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் விரைவில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி,ஒளிபரப்புகளை துவக்க இருப்பதாக பலகலையின் துணைவேந்தர் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலையின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத்துறைக்காக பத்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஸ்டுடியோக்களை திறந்து வைத்துப் பேசியபோது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்புகள் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.
மாணவர் யூனியன் அமைப்பது தொடர்பான கேள்விக்கு அது தேவையில்லை என கருத்து தெரிவித்தார். மாணவர்களுக்கு ஏதேனும் குறைப்பாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக அணுகலாம் என அவர் கூறினார்.
அலிகர் பல்கலையில் சுமார் 28,000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அவர்கள் 70 விடுதிகளில் தங்கி வருவதாகவும் தெரிவித்தார். 1400 பேராசிரியர்களும், 6000 அலுவலக ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறன்றனர். வருடந்தோறும் சுமார் 500 வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி பயில வருகின்றனர்.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=10&Section=Asia

 

இறக்கத்துக்கு தமிழ் மென்புத்தகங்கள்


இணையத்தில் காணக்கிடைக்கும் சில தமிழ் மென் நூல்களின் தொகுப்பு இங்கே.சுட்டியை சொடுக்கி நீங்கள் இம்மென்நூல்களை இறக்கம் செய்து கொள்ளலாம். இப்புத்தகங்களை படிக்க அடோபி அக்ரோபாட் ரீடர் போன்ற pdf reader ஒன்று தேவைப்படும்.
இப்பக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.மேலும் பல நூல்கள் இந்த வரிசையில் வந்து சேரலாம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது
http://rapidshare.com/files/19316245/Inna_Naarpathu_Iniyavai_Naarpadhu.pdf

காளமேகப்புலவர் பாடல்கள்
http://rapidshare.com/files/19316246/Kalamega_Pulavar_Paadalgal.pdf

பட்டிணப்பாலை
http://rapidshare.com/files/19316247/Pattinappaalai.pdf

பழமொழி நானூறு
http://rapidshare.com/files/19316248/Pazhamozhi_Naanooru.pdf

பிரதாப முதலியார் சரித்திரம்
http://rapidshare.com/files/19316249/Prathaba-Mudaliyar-Charithiram.pdf

ஆங்கிலம் வழி தமிழ் இலக்கணம் கற்க
http://rapidshare.com/files/19316251/Tamil-Grammar-in-Easy-English.pdf

தொல்காப்பியம்
http://rapidshare.com/files/19316253/Tholkaapiyam.pdf

திருக்குறள் அதன் பொருளோடு
http://rapidshare.com/files/19316252/Thirukkural_with_Meanings.pdf

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்தேசம்
http://rapidshare.com/files/19316254/Thanneer_Desam.pdf

திருக்குறள் மென்பொருள்
http://rapidshare.com/files/8230465/ViralNuniyilKural.zip

சுஜாதாவின் எல்டோரடோ
http://www.esnips.com/nsdoc/baf7063f-589c-478b-9af0-82f676d4895d

சுஜாதாவின் எப்படியும் வாழலாம்
http://www.esnips.com/nsdoc/783f44a3-df2f-4c6d-ae58-1177d84733f2

சுஜாதாவின் காரணம்
http://www.esnips.com/nsdoc/77d4963c-80eb-4193-9f77-c35a95df1818

சுஜாதாவின் ஜன்னல்
http://www.esnips.com/nsdoc/aeb282fe-40f4-4ca2-acbf-fda726cbe1bf

சுஜாதாவின் கால்கள்
http://www.esnips.com/nsdoc/df054c73-b9d3-4f5c-893b-8740aa9fd09a

சுஜாதாவின் இளநீர்
http://www.esnips.com/nsdoc/08a6adaa-2ffd-49f6-9bcd-24826e2107c5

சுஜாதாவின் நகரம்
http://www.esnips.com/nsdoc/d3be0434-6d21-4b77-a479-78a3d959ac6d

சுஜாதாவின் அம்மா மண்டபம்
http://www.esnips.com/nsdoc/72f230b3-9144-4122-9574-53aece733d9d

சுஜாதாவின் அரங்கேற்றம்
http://www.esnips.com/nsdoc/48de5d17-4c5c-435d-9a17-83c4eb57535b

சுஜாதாவின் அரிசி
http://www.esnips.com/nsdoc/01f77bd4-7093-4e3c-a93a-4d74f8e21858

சுஜாதாவின் கர்பியூ
http://www.esnips.com/nsdoc/9246ae98-db4f-498d-9181-433017a8110d

சுஜாதாவின் எங்கே என் விஜய்
http://www.esnips.com/nsdoc/fdc23d03-a331-4d03-b0f5-a73ca6a822c7

சுஜாதாவின் பிலிம் உத்சவ்
http://www.esnips.com/nsdoc/c7e23176-c910-46b1-bb74-715fd06bd836

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1A
http://www.esnips.com/nsdoc/31e16bb3-26c0-447b-82d4-f93089549aeb

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1B
http://www.esnips.com/nsdoc/ad2fe93c-cd67-4a66-9693-2a71b0122517

கல்கியின் சிவகாமியின் சபதம்
http://www.esnips.com/nsdoc/af31a560-2e28-4641-89d3-60addd1541c0

கல்கியின் அலையோசை பாகம் 1
http://www.esnips.com/nsdoc/108b9d0a-da79-4cd4-8a8d-ee2958868e38

கல்கியின் அலையோசை பாகம் 2
http://www.esnips.com/nsdoc/7ec1fa64-28e5-4592-8a9c-f2012e48ecff

கல்கியின் அலையோசை பாகம் 3
http://www.esnips.com/nsdoc/184144e8-fe0d-4845-8cc4-02be84b9bfca

கல்கியின் அலையோசை பாகம் 4
http://www.esnips.com/nsdoc/88c3ab7b-9113-48eb-8481-0e94850c6015

சோலைமலை இளவரசி
http://www.esnips.com/nsdoc/e4f67db3-8c01-4565-9219-a37fdf9af117

ராம கிருட்டினணின் அயல் சினிமா
http://www.esnips.com/nsdoc/570ba27b-c03c-460c-b5fa-961ac0656937

மாணிக்கவாசகரின் திருவாசகம்
http://www.esnips.com/nsdoc/51154e63-565c-41f8-ad33-396650f35efd

திருமந்திரம்
http://www.esnips.com/nsdoc/999cd506-bb33-4554-b279-79084312b236

பாரதியின் பாஞ்சாலி சபதம்
http://www.esnips.com/nsdoc/86dcd3fe-d31b-4f22-8edc-a0e906ae7ddd

நம்பிக்கை
http://www.esnips.com/nsdoc/6d7a8f83-afde-42f9-affe-0eaad0e4b41e

பட்டிணத்தார் பாடல்கள்
http://www.esnips.com/nsdoc/023cc252-7b8e-4b02-8ed7-f28143155e05

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2
http://www.esnips.com/nsdoc/40cebc5f-5d41-482f-ae2f-1e1992717638

தமிழ் எண்கள்
http://www.esnips.com/nsdoc/0bbf8cce-7089-45e2-9060-e0d143d4d5c7

பத்திரகிரியார் பாடல்கள்
http://www.esnips.com/nsdoc/eaff2460-5dfa-42b4-a8c2-e127ade1a9b5

திருமந்திர சிந்தனைகள்
http://www.esnips.com/nsdoc/4e840d65-5f85-47c4-b635-d087ce548929

Updated
சீரகம்
http://www.esnips.com/nsdoc/113d3029-324b-46e8-b3df-9cd377d09df8

அலர்ஜி
http://www.esnips.com/nsdoc/3a9563c5-4bbe-4fa1-9483-c54ebb80acf9

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1
http://www.esnips.com/nsdoc/1c22a39c-bd85-4c45-aa35-9e17cd317376

அந்திமகாலம்
http://www.esnips.com/nsdoc/7dfee137-9d52-4c45-b6aa-6873d8b639ea

மணிமேகலை
http://www.esnips.com/nsdoc/b62039bc-ea44-4fe4-95c8-580db3d2067f

பாரதிதாசனின் தமிழச்சியின் கதை
http://www.esnips.com/nsdoc/b1778b3b-4660-4e76-a16d-b951f3eaeb6e

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு
http://www.esnips.com/nsdoc/a20ad3c3-b52a-41ba-9063-0bfecacdcc0d

பாரதியின் பாஞ்சாலி சபதம்
http://www.esnips.com/nsdoc/eeadf69b-ac00-4a01-b75b-1ef9beee6bf2

பா.ரா வின் மாயவலை
http://www.esnips.com/nsdoc/160152b9-829a-403c-86b9-73dc4d872ce4

சிலப்பதிகாரம் பாகம் 1
http://www.esnips.com/nsdoc/6130d462-65a5-481d-8f9e-3a6be19bda05

சிலப்பதிகாரம் பாகம் 2
http://www.esnips.com/nsdoc/ca62a41c-2938-4991-a616-d83f0b211475

சிலப்பதிகாரம் பாகம் 3
http://www.esnips.com/nsdoc/37590761-a6e3-4899-a2d3-79aab9df4d1c

பாரதியின் சந்திரிகையின் கதை
http://www.esnips.com/nsdoc/c6823330-5ed1-4211-9b15-786f8eda583a

கந்தர் சஷ்டி கவசம்
http://www.esnips.com/nsdoc/ff5f8f68-ad87-4c7c-81e1-a361b660f16a

வியர்வை
http://www.esnips.com/nsdoc/2221caf2-547a-4375-93d7-1add3dc54749

நெல்லிக்கனி
http://www.esnips.com/nsdoc/0f477670-1f6f-4c0c-8c01-557b15bd3c96

இந்திய மருத்துவம்
http://www.esnips.com/nsdoc/075d8d08-ea05-444c-8b62-3ebfbed3d9cb

ஆரோக்கியம்
http://www.esnips.com/nsdoc/1e753caf-929c-4bbf-92f1-c46dbe4491f5

பப்பாளி
http://www.esnips.com/nsdoc/27b5ab7e-c435-4946-b0ce-12e9174d3d6c

புறநானூறு
http://www.esnips.com/nsdoc/226bbb74-31f6-430a-9558-6a10fc91eff0

புணர்ச்சி
http://www.esnips.com/nsdoc/1e968807-73d4-47dc-93af-90eb9e443136

வைட்டமின்கள்
http://www.esnips.com/nsdoc/63644f43-a1dc-4876-ba13-33611a582ddb

மாதுளை
http://www.esnips.com/nsdoc/d448e769-a715-4181-8656-b3159a3a874b

வாழைப்பழம்
http://www.esnips.com/nsdoc/26df4ac9-2ccc-4a6e-870f-7369133c5d98

மனித உடலில் கடிகாரம்
http://www.esnips.com/nsdoc/6b376398-0dfb-47cf-b4ff-2576d546b272

எண்ணம்
http://www.esnips.com/nsdoc/05299ae4-4f88-4a32-ba39-40027f25b462

வெங்காயம்
http://www.esnips.com/nsdoc/f8bfd30f-aeaf-4924-9f94-1c1395a69dde

முதுகுவலி
http://www.esnips.com/nsdoc/7971b717-e9d6-42ca-8cc1-fd09c3e8b722

சுக்கு
http://www.esnips.com/nsdoc/6131d
--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் இணையம்,

தமிழர்களின் இணையத் தளங்களைப் பற்றியும், தமிழ் சார்ந்த இணையத் தளங்கள் பற்றியும் சுட்டிகளை அளித்து அதனை விமர்சிப்பதோடு, உபயோகமளிக்கும் பல சுட்டிகளை இக்குழுமம் மூலம் உறுப்பினர்களுக்கு அளிப்பதே இக்குழுமத்தின் நோக்கம்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.

இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.

மேலும் விபரங்களுக்கு

http://tamil.cri.cn/other/contest2008/

என்.எஸ்.எஸ்., முகாம்

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ்.,முகாம் நிறைவு விழா காஞ்சிரங்குடியில் நடந்தது. பள்ளி தாளாளர் ஜகுபர் சாதிக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா வரவேற்றார். திட்ட அலுவலர் செய்யது அபுதாகீர் அறிக்கை வாசித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிமாலா உட்பட பலர் பேசினர். ஊராட்சி தலைவர் அஜிதா நன்றி கூறினார். பனைக்குளம்: அழகன் குளம் ஊராட்சியில் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியின் 10 நாள் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி பழனிவேல்சாமி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் செய்யது அலி, தலைமை ஆசிரியர் சாகுல்ஹமீது, திட்ட அலுவலர் முகம் மது தாசின், ஹாஜா மைதீன் இந்து சமூக தலைவர் சோமசுந்தரம், ஜமாத் தலைவர் முகம்மது ஹனிபா, ஊராட்சி துணைத்தலைவர் இஸ்மாயில் முஸ்லிம் பொது ஜன சங்க தலைவர் பஹ்ருல் அமீன், செயலாளர் சாதிக்பாட்சா, சகுபர் சாதிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளி புதிய கட்டடம் திறப்பு

கீழக்கரை கைராத்துல் ஜாலியா மேல்நிலைப்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. கிழக்கு தெரு ஜமாத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். ஜகுபர் சாதிக் வரவேற்றார். முத்துசுலைகா அப்துர்ரகுமான் நினைவு கட்டடத்தை சீதக்காதி அறக் கட்டளை நிறுவனர் அப்துர் ரகுமான் திறந்து வைத்தார். ஹசன்அலி எம்.எல்.ஏ., தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி தாளாளர் ரஹமத்துன்னிஷா, இடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குனர் செய்யது முகம்மது சலாஹூதீன், பெண்கள் கல்லூரி முதல்வர் சித்திசுமையா, செயலாளர் காலித்புகாரி பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா நன்றி கூறினார்.
கீழக்கரை கல்லூரி கட்டடம் திறப்பு

கீழக்கரை தாசீம்பீவி அப் துல் காதர் பெண்கள் கல்லூரியில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள புதிய நிர்வாக அலுவலகம் மற்றும் அகடமிக் பிளாக் திறப்பு விழா நடந்தது.கல்லூரி தாளாளர் ரஹ்மத்துன்னிஸ்ஸா தலை மை வகித்தார். சென்னை சுலைமான் ஆலிம் டிரஸ்ட் சேர்மன் ஷாகுல் ஹமீது ஆலிம், அகில இந் தியா இஸ்லாமிக் பவுன்டேஷன் நிறுவனர் சேர்மன் அப்துர்ரகுமான் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். துபாய் இடிஏ அஸ்கான் நிறுவன தலைவர் செய்யது முகம்மது சலாஹூத்தீன், சென்னை கிரஸன்ட் பெண்கள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஷரீபா அஜிஸ், சென்னை சீதக்காதி அறக்கட்டளை மானேஜிங் டிரஸ்டி ஆரிப்புகாரி, பொருளாளர் சதக் அப்துல் காதர், சென்னை ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேஷன் தலைவர் முகம்மது ஹசன், சென்னை சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட் சேர்மன் அகமது உசேன்,ஹசன் அலி எம்.எல்.ஏ., உட்பட பலர் பேசினர்.புதிய கட்டடங்களை பி.எஸ்.,அப்துர் ரகுமான், ஷாகுல் ஹமீது திறந்து வைத்தனர். இடிஏ அஸ்கான் இயக்குனர் அஷ்ரப்புகாரி நன்றி கூறினார். பெண்கள் கல்லூரி செயலாளர் காலித்புகாரி, இடிஏ குரூப் மானேஜிங் டிரஸ்ட்டி அப்துல்காதர் ரகுமான், சென்னை இசிசிஐ கன்ஸ்ட் ரக்ஷன் மானேஜிங் டைரக்டர் அகமது முஸ்த்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

சவூதியில் இந்திய கல்வி நிறுவனங்கள் குறித்த கண்காட்சி

ரியாத்: இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்காக, முதல் முறையாக இந்தியக் கல்விக் கண்காட்சிக்கு சவூதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் எஜுகேஷன் எக்ஸ்போ -2008 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும்.

ரியாத், தம்மாம், ஜெட்டா ஆகிய நகரங்களில் இந்த கண்காட்சி நடக்கிறது.

ரியாத் நகரில் உள்ள மரியாட் ஹோட்டலில் ஜனவரி 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

தம்மாம் நகரில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கார்ல்டன் அல் மான் ஹோட்டலில் கண்காட்சி நடைபெறும்.

ஜெட்டாவில், ஜெட்டா மரியாட் ஹோட்டலில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

Thanks : ThatsTamil.com
துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் ஷரிஅத் அடிப்படையில் செயல்படும் ஆறாவது இஸ்லாமிய வங்கியான நூர் இஸ்லாமிய வங்கி" ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நூர் இஸ்லாமிய வங்கி ஒரு பில்லியன் டாலர் மூலதனத்துடன் துபாயில் ஆறு கிளைகள் உட்பட அமீரகத்தில் பத்து கிளைகளைக் கொண்டதாக துவங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குள் இந்த கிளைகள் இருபதாக விரிவடையும்.

நூர் இஸ்லாமிய வங்கி பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் தனது சேவையை துவங்க ஆவல் கொண்டுள்ளது.

துபாய் இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி,ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கி ஆகியவை ஏற்கனவே அமீரகத்தில் ஷரிஅத் அடிப்படையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய நோக்கத்தின் வெற்றிக்கு பயிற்சியும், திட்டமிடுதலும் உதவும்

திருச்சி: ""நம்முடைய நோக்கத்தின் வெற்றிக்கு கடும் பயிற்சியும், சரியான திட்டமிடுதலும் உதவியாக இருக்கும்,'' என்று என்.சி.சி., கம்பெனி கமாண்டர் ஜாகித்உசேன் பேசினார்.திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கான "தலைமைப்பண்பு மேம்படுத்தல்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது.இதில், சென்னை நியூகாலேஜ் என்.சி.சி., அலுவலர் ஜாகித்உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்.சி.சி., மாணவர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஷேக்முகம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கான, 'தலைமைப்பண்பு மேம்படுத்தல்' என்ற சிறப்பு சொற்பொழிவில் சென்னை நியூகாலேஜ் என்.சி.சி., அலுவலர் ஜாகித்உசேன் பேசியதாவது:இந்தியா எல்லாவிதத்திலும் வலிமையான நாடாக உள்ளது. அதை மேலும் வலிமைப்படுத்தும் தகுதி என்.சி.சி., மாணவர்களுக்கு நிறைய இருக்க வேண்டும். ஆகையால், அவர்களின் சிந்தனையும், கொள்கையும் அதை நோக்கியே இருக்க வேண்டும். எப்பவும் பயிற்சியும், திட்டமிடுதலும் நம்முடைய நோக்கத்தின் வெற்றிக்கு உதவும். ஒவ்வொருவரும் தங்களை தாங்களே சுய மதிப்பீடு செய்து ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.எதிலும் பங்கேற்பாளராக இருப்பதை விட, வெற்றியாளராக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான திறமை, தொடர்பு கொள்ளும் திறன், பழக்கவழக்கம் ஆகியவற்றை முறைப்படுத்திக் கொள்ளவேண்டும்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு என்.சி.சி., மாணவருக்கும் படிக்கும் போது, குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு, அங்கு நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற பதக்கம் பெற வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது.தற்போது டில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அணிக்கு தலைமை தாங்கிக் செல்லும் வாய்ப்பை ஜமால் கல்லூரி மாணவர் குரு என்பவர் பெற்றுள்ளதும், அவர் தவிர காஜாமொய்தீன், குமரேசன், நிஷாந்தி என மூன்றுபேர் பங்கேற்க சென்றிருப்பதும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

பரமக்குடி அருகே கீழமுஸ்லீம் பள்ளி 10 நாள் என்.எஸ்.எஸ். முகாம்

பரமக்குடி கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட பத்து நாள்கள் சிறப்பு முகாம் பார்திபனூர் அருகே உள்ள பரளை கிராமத்தில் நடைபெற்றது.


இம்முகாம் துவக்க விழா கீழமுஸ்லீம் ஜமாத்சபை தலைவர் முகம்மது யாக்கூப் தலைமையிலும், ஜாமாத்சபை செயலாளர் முகமது ஈசா, பள்ளித் தாளாளர் அப்துல் ரஹீம் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. பள்ளியின் துணை தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். என்.எஸ்.எஸ். முகாமை துவக்கி வைத்த பள்ளியின் தலைமையாசிரியர் நாகூர்மீரா, கிராசண்ட் உயர்நிலைப்ப ள்ளி தலைமையாசிரியர் மாடசாமி மற்றும் நகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் புரோஸ்கான் ஆகியோர் வாழ்த்த பேசினார்கள். முகாம் நிறைவு நாளில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கீழ முஸ்லீம் ஜமாத் சபை நிர்வாகிகள், கல்வி குழு உறுப்பினர்கள், தொடக்கப்பள்ளி , நர்சரி பள்ளி தாளாளர்கள் ஆசிரியர்கள் காஜாமுகைதீன், அல்லாபக்ஸ், கணேசமூர்த்தி, முகம்மது யாக்கூப், நெடுஞ்செழியன், சிவக்குமார், ஹியத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டார்கள். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ஜஹாங்கீர்உசேன் நன்றி தெரிவித்தார்

புது கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

புது கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

புது கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட 10 நாள் முகாமானது, சென்னை திருநின்றவூர் அருகில் உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தில், கடந்த 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில், 130 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இம்முகாமில், கசுவா கிராம மக்களுக்கு இலவச மருத்துவம், விளையாட்டுப் போட்டி, துப்புரவுப் பணி மற்றும் "ரங்கோலி' கோலப் போட்டி ஆகியன நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காதர் பாட்ஷா தலைமை தாங்கினார். திருவள்ளூர் ஒன்றிய பெருந்தலைவர் வி.எஸ்.சண்முகம், கல்லூரி முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகள் குறித்த பயனுள்ள நிகழ்ச்சிகள்

மக்கள் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை அமீரக ( U.A.E.) நேரப்படி இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை வெற்றிப்படிகள் எனும நிகழ்ச்சியில் போட்டித் தேர்வுகள் குறித்த பயனுள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பாகி
வருகிறது.

இன்று ( 12.01.2008 ) ஐ.ஏ.எஸ். ( இந்திய ஆட்சிப் பணி ) மற்றும் ஐ.பி.எஸ். ( இந்திய காவல் பணித் தேர்வுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றது.

இதில் தேர்வுக்கான தகுதிகள், தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய  பாடங்கள் குறித்து நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

இதுகுறித்து மேலதிக விபரம் தேவைப்படுவோர் 98 499 34176 / 98 402 41118 எனும் கைபேசியில் தொடர்பு கொண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

முதுவை ஹிதாயத்
துபாய்
முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகிகள் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் சந்தோஷ்பாபு வெளியிட்ட அறிக்கை: முஸ்லிம் பெண்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் அவர்களை அனைத்து துறைச் செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தவும் மாவட்டந்தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஏற்படுத்தப்பட்டு, சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. சங்கத்துக்கு, கலெக்டர் பதவி வழித் தலைவராகவும், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பதவி வழி உபத் தலைவராகவும், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொருளாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முபீனா கவுரவ தலைவராகவும், முனீராபானு, அப்துல் ரஹீம் ஆகியோர் கவுரவ இணைச்செயலாளர்களாகவும், குல்சார், அமானுல்லா, அக்பரி ஷெரிப் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இச்சங்கம் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு வருமானத்தை ஈட்ட வகை செய்யும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி அளித்து அவர்களது பொருளாதார நிலை உயர்த்திட பல வகையிலும் உதவி செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com