முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

 

துபாயில் மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சித் தலைவருக்குப் பாராட்டு


துபாயில் மத்திய அரசின் "புரோஸ்கார்" விருது பெற்ற பொதக்குடி ஊராட்சித் தலைவர் எஸ்.எஸ். காஜா நஜுபுதீனுக்கு பாராட்டு விழா 14.06.2007 வியாழக்கிழமை மாலை துபாய் கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற்றது.

பாராட்டு விழாவிற்கு அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் மூர்த்தி தலைமை வகித்தார். தேரிழந்தூர் இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். அமுதரசன் முன்னிலை வகித்தார்.

திருவாரூர் மாவட்டம் பொதக்குடி பகுதியில் அனைத்து இல்லங்களிலும் கழிவறைகள் ஏற்படுத்தி நூறு சதவீதம் சுகாதாரான பகுதியாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்ததன் காரணமாக எஸ்.எஸ். காஜா நஜுபுதீன் மத்திய அரசின் "புரோஸ்கார்" விருது பெறத் தேர்வு செய்யப்பட்டார்.

விருது பெற்ற ஊராட்சித் தலைவரை வாழ்த்தி வானலை வளர்தமிழ் அமைப்பின் காவேரி மைந்தன், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரே. பட்டணம் மணி, பொதக்குடி ஜமாஅத்தைச் சேர்ந்த நைனா முஹம்மது, குத்தாலம் ஏ அஷ்ரப் அலி, சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜன், பரத், ஆசி•ப் மீரான் உள்ளிட்ட பலர் பேசினர்.

மதுக்கூர் அன்வர்தீன் நினைவுப் பரிசு வழங்கினார்.

விருது பெற்ற பொதக்குடி ஊராட்சித் தலைவர் எஸ்.எஸ். காஜா நஜுபுதீன் ஏற்புரை நிகழ்த்தினார்.

அமீரகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஸைபுதீன் நன்றி கூறினார்.
 
ஹஜ் பயணம் செல்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஜூன் 30க்குள் அனுப்ப வேண்டும


சென்னை, மே 31: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில், ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஹஜ் 2007ம் ஆண்டுக்கான புனித யாத்திரை செல்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட நெறிமுறைகள் ஆகியவற்றை ÔÔரோஸி டவர், மூன்றாவது தளம், புதிய எண் 13 (பழைய எண் 7), மகாத்மா காந்தி சாலை, சென்னை - 34ÕÕ என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
முன்பணமாக, சென்னையில் மாற்றக்கூடிய ரூ.100க்கான டிடியை Ôதமிழ்நாடு மாநில ஹஜ் குழுÕ என்ற பெயரில் எடுத்து, மேற்சொன்ன முகவரியில் உள்ள ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் கொடுத்து ஜுன் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது செலுத்தப்படும் அன்னிய செலாவணித் தொகையில், ஏற்கனவே காசோலையாக கொடுத்த முன்பணம் ரூ.100ஐ கழித்துக் கொடுக்கலாம். ஒரு உறையில் 6 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், நபர் ஒருவருக்கு அந்நியச் செலாவணி முன்பணம் ரூ.10 ஆயிரத்து 600க்கு டிடி எடுத்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஜுன் 30 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் 14 தொகுதிகளில் புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னையில் உள்ள 14 தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது.

சென்னையில் ராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், தி.நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 14 தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி லதா கூறியதாவது:
சென்னையில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில் வரையறுக்கப்பட்ட 756 மையங்கள், 10 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் சரிபார்ப்பதற்காவும் திருத்தங்கள் ஏதும் இருந்தால் சொல்வதற்காகவும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஜூன் 26-ம் தேதி வரை பார்க்கலாம்.

பெயர், முகவரியில் திருத்தம் இருந்தாலோ, போட்டோ மாறியிருந்தாலோ படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர, தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வீட்டு முகவரிக்கான தகுந்த ஆதாரத்துடன் படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.

ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் 8 ஏ மூலமாகவும் பெயர்களை நீக்குவதற்கு படிவம் 7 மூலமும் விண்ணப்பிக்கலாம். திருத்தம் தொடர்பான படிவங்களை ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்டவரது கையெழுத்து, அல்லது குடும்பத் தலைவரின் கையெழுத்து இருக்க வேண்டும்.
 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு 30 நாளில் அவசரச் சட்டம் - ஆந்திர முதல்வர் அறிவிப்பு


ஐதராபாத், ஜூன் 10: கல்வி மற்றும் அரசு வேலையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 30 நாளில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்.
ஐதராபாத்தில் மதரசாக்களுக்கு உருது அகாடமி சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பேசியதாவது:

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள சட்டப்பூர்வமான தடைகளை எதிர்கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்னும் 30 நாட்களில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். சிறுபான்மையினர் நலனில் மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மதரசாக்களில் நவீன கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மாநிலத்தில் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்தபோது, தீவிரவாத பயிற்சி முகாம்களாக மதரசாக்கள் சித்தரிக்கப்பட்டன. ஆனால், அவை அறிவு மையங்கள் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறது. மதரசாக்களை நவீனப்படுத்த அரசு எல்லா உதவிகளையும் செய்யும். இவ்வாறு ராஜசேகர ரெட்டி பேசினார்.
 

துபை ஈமான் அமைப்பு நடத்திய உணர்வாய் உன்னை ! நிகழ்ச்சி


 

 

துபை ஈமான் அமைப்பு 08-06-2007 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை உணர்வாய் உன்னை ! எனும் இஸ்லாமிய தன்னம்பிக்கை பயிற்சி முகாமினை துபை அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள செண்ட்ரல் பள்ளியில் ( School ) நடத்தியது.

துவக்கமாக அறந்தாங்கி முஹம்மது சாலிஹ் இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

துபை இந்திய துணைத் தூதரக அதிகாரி திருமிகு முபாரக் I.F.S, தன்னம்பிக்கை பயிற்சி முகாமினை துவக்கி வைத்துப் பேசினார். ஈமான் எடுத்துள்ள இத்தகைய முயற்சியினைப் பெரிதும் பாராட்டினார்.

தன்னம்பிக்கைப் பயிற்சியினை துபை ரஷித் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸலாஹிதீன், ஹ¤ஸைன் பாஷா, ஜலால் உள்ளிட்டோர் அளித்தனர்.

பயிற்சி வகுப்பில் சமுதாய ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கு பெற்றோருக்கு சான்றிதழை ஈமான் அமைப்பின் பொதுசெயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, டாக்டர் ஸலாஹ¤தீன், ஈமான் அமைப்பின் கல்வித் துறைச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா உள்ளிட்டோர் வழங்கினர்.

பயிற்சியாளர்களுக்கு நினைவுப் பரிசை துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் வழங்கினார்.

இயந்திர மயமான வாழ்க்கையில் வாழ்ந்து வரும் சூழலில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் தங்களுக்கு புத்துணர்வு அளிப்பதாக பயிற்சியில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர். இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடத்தப் பட வேண்டும் என்ற தங்களது அவாவையும் வெளியிட்டனர்.

பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
 

அமீரகத்தில் இந்திய முட்டைகள் இறக்குமதிக்கான தடை நீக்கம்



ஐக்கிய அரபு அமீரகம் ( United Arab Emirates ) பறவைக் காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய முட்டைகள் உள்ளிட்ட சில நாடுகளின் முட்டைகளை இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.

தற்பொழுது உலக விலங்கின நல அமைப்பு இந்திய முட்டைகளால் எவ்வித பாதிப்பும் இல்லை என சான்று வழங்கியதன் காரணமாக அமீரக சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்த்துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது சயீத் அல் கிண்டி இந்திய முட்டைகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டுள்ளார்.
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com