முதுவை ஹிதாயத் பக்கம்

கடந்த வாரச் செய்திகள்

இன்டர்நெட்டில் வேலை வாய்ப்பு வெப்சைட்கள்

அண்மைகாலங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அனேகமாக அனைத்து தொழில்நுட்ப துறைகளிலும் நவீன யுக்திகள் கையாளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முன்பு செய்யவே இயலாது, கடினம், அதிகநேரம் தேவை என்பன போன்று இருந்த பல தடைகற்கள் நீக்கப்பட்டு இன்று எந்த செயலும் முடியும் அதுவும் மிககுறைந்த நேரத்தில் விரைவாக முடிக்க முடியும் என்பது சாத்தியமாகி வருகிறது.

குறிப்பாக கணிப்பொறி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற உயரிய தொழில் துறைகளில் இன்று உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்க அளவில் உள்ளது. இதன் பயனாக தகவல் பறிமாற்றம் என்பது மன்னர் காலங்களில் புறாதூது என் பதில் தொடங்கி கடிதங்கள், தொலைபேசி என்று பல்வேறு கால கட்டங்களைக் கடந்து இன்று நொடிப் பொழுதில் உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் எளிதில், குறைந்த கட்டணத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இதற்கு வீடியோ கான்பரென்சிங் மற்றும் இன்டர்நெட் போன்றவைகள் மிகவும் பெரும்பங்கு வகிக்கிறது.

இன்றைய அளவில் அணு முதல் அண்டம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எந்த புதிய தொழில் நுட்பத்தைப் பற்றியும் அனைத்து தகவல்களையும் பெற இன்டர்நெட் வசதி உறுதுணையாக உள்ளது. அதுவும் மிகவும் குறைந்த கட்டணத்தில் பல அரிய தகவல்களை பெற, தகவல்களை பரிமாற இது உதவுகிறது.

இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு

படிப்பை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு ஆண்டு கணக்கில் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் எனும் நிலை இப்பொழுது மாறி வருகிறது. அப்படியே பதிவு செய்தாலும் ஓர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வேலைவாய்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உள்ளது. ஆனால் இன்று நம் நாட்டில் மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் உள்ள வேலை வாய்ப்பை பற்றி அறிந்து கொள்ளவும், அதற்கு தேவையான கல்விதகுதி, அலுவலகம் மற்றும் அதற்கு விண்ணப் பிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகிய அனைத்து தகவல் களையும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ளும் வசதி இணைய வலை வசதி (இன்டர்நெட் -Internet) மூலம் கிடைத்துள்ளது.

வேலை வாய்ப்பை பற்றி தகவல்களை தருவதற்காகவே நூற்றுக்கணக்கான இணைய தளங்கள் பலராலும் உருவாக்கப்பட்டு, அது இன்டர் நெட்டில் தரப்பட்டுள்ளது. இதில் இணைய தளத்தை தேர்ந்து எடுத்து அதில் ஓர் குறிப்பிட்ட நபரின் கல்வித்தகுதி, அனுபவம் தனித்திறமை ஆகியவற்றிற்கு ஏற்ப உள்ள வேலைக்கு இன்டர்நெட் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.நமது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு அதற்கு உண்டான பதிலை திரும்ப பெறவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஓர் இனையதளத்தை உதாரணமாக www.naukri.com (இது போன்று பல இணைய தளங்கள் உள்ளன அதைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்) என்பது ஓர் வேலை வாய்ப்பு இணையதளம். இன்டர்நெட்டில் இணைய தளத்தை தேடுதல் எனும் பகுதியில் இதை டைப் செய்து எண்டர் செய்தால் இந்த இணையதளத்திற்குள் சென்று விடலாம். இதில் பல் வேறு பிரிவுகள் தனித்தனியாக தரப்பட்டிருக்கும். இதில் செல்வதற்கு முன்னர் இந்த இணையதளத்தில் நாம் ஒர் உறுப்பினராக சேர்வது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இதனை செய் தால் நமக்கு என்று ஓர் தனி பகுதி இதில் ஒதுக்கப்பட்டு, நாம் தரும் தகவல்கள் திரும்ப பெறும் தகவல்கள் போன்றவைகளை மற்றவர்கள் பார்க்க இயலாத வகையில் செய்து விடலாம்.

உறுப்பினர் ஆவதற்கு இந்த இணைய தளத்தில் சென்று ரெஜிஸ்டர் என்று இருக்கும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து தோன்றும் மெனுவில் உபயோகிப்பாளர் பெயர் மற்றவர்கள் நம்பகுதிக்கு செல்லாவண்ணம் செய்ய குறியீட்டு எண் மற்றும் இ-மெயில் முகவரி போன்ற தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும், அதை அதற்கு உண்டான இடத்தில் டைப் செய்ய வேண்டும். முக்கியமாக உபயோகிப்பாளர் பெயர், பாஸ்வேர்ட் போன்றவைகள் நாம் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ள கூடியவைகளாக தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் நாம் இந்த இணைய தளத்திற்குள் செல்லும் பொழுதும் இந்த இரண்டையும் நாம் சரியாக பதிவு செய்தால்தான் நம் பகுதிகுள்ளே நுழைய முடியும்.

மேற்கூறியது அனேகமாக அனைத்து வேலைவாய்ப்பு இணையதளத்திற்கும் பொருந்தும். ஒருவேலை இதே இணைய தளத்தில் நாம் நிறைவு செய்த அதே உபயோகிப்பாளர் பெயரை முன்னரே வேறு யாராவது பதிவு செய்து இருந்தால் வேறு உபயோகிப்பாளர் பெயரை பதிவு செய்யுங்கள் என்ற தகவல் வரும். இப்பொழுது மீண்டும் வேறு ஒர் பெயரை நாம் தரவேண்டியிருக்கும்.

கொலஸ்ட்ரால

குறும்பு பண்றவங்கள , தெனாவட்டா திரியரவங்கள பார்த்து உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு என்று சொல்வது உண்டு. ரொம்ப குறும்பு பண்ணுனா ( ரொம்ப கொழுப்பு) குறும்பு பண்ற ஆளுக்கு நல்லதில்லை. அது போலவே ரொம்ப கொழுப்பு இருந்ததென்றால் உடம்புக்கு நல்லதில்லை.

கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு. நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருந்தா தான் உடலுக்கு நல்லது.

நல்ல கொழுப்பை HDL என்றும் கெட்ட கொழுப்பை LDL என்றும் சொல்வார்கள்.

ஏன் LDL ஐ கெட்டதுன்னு சொல்றாங்க?

நிறைய LDL கொழுப்பு இரத்தத்தில் கலந்து இருந்தா அது இரத்தக் குழாய்களின் உள் சுவரில் படிந்து இரத்ததின் போக்கை தடை செய்யும். இந்த படிமனானது எளிதில் கரையாதது. இது குறுகிய இரத்தக்குழாயில் உருவானால் ஆபத்து அதிகம். மாரடைப்பு, பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்துக்கும் செல்லும் இரத்தம் தடைபட்டா மாரடைப்பு, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டா பக்க வாதம். LDL அதிகமா இருந்தா ஆபத்து.

உப்பு தண்ணி குழாயில் எப்படி உப்பானது கத்தியால வெட்டகூட முடியாத அளவுக்கு படியுதோ அது மாதிரி கெட்ட கொழுப்பு இரத்தக்குழாயில் படியும்.

HDL ஐ ஏன் நல்ல கொழுப்புன்னு சொல்றாங்க?

இது இரத்தக்குழாயில் படியும் கொழுப்பு படிமனை நீக்குகிறது/கரைகிறது, அவ்வாறு கரைத்த கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கிறது. அதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிமம் உருவாவது மட்டுபடுத்தப்படுகிறது. அதனால் இதயத்திலிருந்து வெளி செல்லும் இரத்தம் தடைபடாமல் செல்ல வழி செய்து மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாக்கிறது. HDL குறைவா இருந்தா ஆபத்து.

Triglycerides - ட்ரைகிளிசரைட்

இது இன்னொருவகையான கொழுப்பு. இது அதிகமானால் நல்ல கொழுப்பின் அளவு குறைந்துவிடும். இந்த வகையில் இது நமக்கு கெடுதல் செய்கிறது. இந்த வகை கொழுப்பை நாம் உணவு மூலமாகவும் பெறுகிறோம் நம் உடலும் உற்பத்தி செய்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இது அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

நம் உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்?

1. கொழுப்பெடுத்த குடும்பத்தில் பிறந்தால் கொழுப்பு இல்லாம என்ன செய்யும்? ( சும்மா கிண்டலு ). அதாவது மரபு வழி காரணமாக சிலருக்கு அதிக கொழுப்பு இருக்கும்.
2. குண்டாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
3. சோம்பேறியாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்
4. வயது ஆக ஆக கொழுப்பு அதிகரிக்கும். (20 வயதிலிருந்து -- கல்லை தின்னாலும் செறிக்கிற வயசு முடிஞ்சிபோச் :-( )
5. உணவு பழக்கங்கள் - கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதினால் கொழுப்பு அதிகரிக்கும். (சுவையா இருக்கேன்னு பஜ்ஜி, வடை, பூரி போன்ற எண்ணெய் பலகாராங்களை உட்கொள்ளாதீர்கள்)
6. பால் - மாதவிலக்கு சுழற்சி முடிந்த பெண்களுக்கு அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு அதிகமாகவும், மாதவிலக்கு சுழற்சி முடியாவிட்டால் அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு குறைவாகவும் இருக்கும். அதாவது வயதான பெண்கள் & எல்லா ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
7. Type 2 சர்க்கரை நோய் (diabetes) HDL அளவை குறைக்கும்.

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க சில வழிகள்.

1. சரியான உணவு பழக்கங்கள்.
2. உடற்பயிற்சி.
3. மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்.

எந்தவகையான உணவு நல்லது?

1. சோயாவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. முட்டையின் கருவை முற்றாக தவிர்த்துவிடுங்கள்.
3. மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கர்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மீனை தவிர்க்கவும்.
4. சர்க்கரையை சேர்த்துக்கொள்வதை குறைத்துக் கொள்ளவும். இது ட்ரைகிளிசரைடை (Triglycerides) குறைக்க உதவும்.
5. நிறைய காய் கறிகளும் பழங்களும் உட்கொள்ளுங்கள்.
6. கொழுப்புள்ள உணவு பக்கம் தலை வைத்து கூட படுக்காதீர்கள்.
7. கார்போஹைட்ரேட் உள்ள உணவை அதிகம் உட்கொள்ளாதீர்கள். அதாவது அரிசியை குறைவாகவும் காய் கறிகளை அதிகமாகவும் சாப்பிடுங்கள்.
8. புரத சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
9. நிறைய ஆரஞ்சு (சாத்துக்குடி) பழ சாறு உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
10. வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
11. பாதாம், நிலக்கடலை, காளான் உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும். பாதாம் மிகச் சிறந்தது.

எவ்வகையான உடற்பயிற்சி செய்யலாம்?

வேக நடை, நடை ஓட்டம் (jogging), சைக்கிள் ஓட்டுவது. வாரத்திற்கு 3 நாட்கள் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியினை தவறாமல் செய்யுங்கள் அது மிக முக்கியம்.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை அடியோடு விட்டு விடுங்கள். புகையானது இரத்த நாளங்களின் சுவர்களை பாதித்து கெட்ட கொழுப்பு படிவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. புகை பழக்கத்தை நிறுத்தினால் நல்ல கொழுப்பு நிறைய சேரும்.

குடியை விட முடியாமல் தவிக்கிறீங்கள சரி ரெட் வைன் அளவோட குடியுங்கள், மற்றவைக்கு தடா & பொடா தான்.

சமிக்கைகள் & அறிகுறிகள்:-

கொழுப்பு அதிகமா இல்லையா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை ஒன்றே வழி. அதனால் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொழுப்பின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.


கீழுள்ள இந்த அட்டவணை எந்த கொழுப்பு எவ்வளவு இருந்தா நல்லது கெட்டது என்ற குறிப்பை தருகிறது.

மொத்த கொழுப்பு (HDL + LDL)

சிறந்த அளவு

>200 mg/dL க்கும் கீழே

எச்சரிக்கை அளவு

200-239 mg/dL

அபாயகரமான அளவு

240 mg/dL க்கும் மேலே

 

நல்ல கொழுப்பு

சிறந்த அளவு

>60mg/dL க்கும் மேலே

நல்ல அளவு

40-59 mg/dL

அபாயகரமான அளவு

Condolence

With deep regret, we would like to inform all employees that Mrs. Muthu
Zulaiha, wife of our Executive Vice Chairman Mr. B.S. Abdul Rahman, passed
away this afternoon at about 2:30 pm in Madurai, India.  The funeral will be
held at Chennai, India on 19.06.2006

We pray the Almighty to rest the departed soul in peace and to give strength
to the family members to bear the irreparable loss. Employees can offer
their condolences to the family members at our VC's house.

HRM DIVISION.

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com