|
ரஹீக்
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)
அவர்களின் வாழ்க்கை வரலாறு
உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற
நூலின் ஆடியோ வடிவம்
ஆசிரியர் : இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர்
ரஹ்மான்
தமிழில்
: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
http://islamkalvi.com/history/raheeq_audio/index.htm |
பள்ளி ஆண்டு விழா
தேவிபட்டினம்: தேவிபட்டினம் புகாரியா
மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் 18வது
ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது.
விவசாய துறை மாவட்ட துணை
இயக்குனர் மணவாளன், பள்ளி நிர்வாக
இயக்குனர் சீனி மரைக்காயர், தலைவர்
காதர் மைதீன், நிர்வாகி ஜபருல்லா,
ஊராட்சி தலைவர் சேகு அபுல் உசேன், கல்விக்குழு
உறுப்பினர்கள் சாப்தீன், சுபைதா, மஜீத்
இக்பால் உட்பட பலர் பங்கேற்றனர் |
ஆசிரியர் பயிற்சி
நிறுவன இரண்டாமாண்டு நிறைவு விழா
ராமநாதபுரம்; ராமநாதபுரம் உச்சிப்புளி
அருகே கல்கிணற்றுவலசை எம்.ஜி.ஆர்.,
ஆசிரியர் பயிற்சி நிறுவன இரண்டாண்டு
ஆசிரியர் பயிற்சியின் நிறைவு விழா
கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி
.தல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை
வகித்தார். தாளாளர் அன்வர்ராஜா .முன்னிலை
வகித்தார். மதுரை தியாகராஜர் கல்லூரி
பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட பலர்
பங்கேற்றனர். மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி
நிறுவன .தலைவர் ஜீவானந்தம் மாணவ
மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ஈஸ்வரன்,
செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா,
பயோனியர் டாக்டர் கியாதுதீன், மாவட்ட
கல்வி அலுவலர் பத்மா, தொடக்க கல்வி
அலுவலர் ஜோதி ஜெயமாலா ஆகியோர் வாழ்த்தி
பேசினர். விரிவுரையாளர் தர்மராஜ் நன்றி
கூறினார்.விழாவில் மாணவ மாணவிகளின் கலை
நிகழ்ச்சி கட்டுரை போட்டி, விளையாட்டு
போட்டிகள் நடந்தன.ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்.,
கல்வியல் கல்லூரி .தல்வர் மங்கள்ராஜ்,
துணை .தலைவர் சதாசிவம், அலுவலக
கண்காணிப்பாளர்
நாகராஜ்,
சிவக்குமார் உட்பட பலர் செய்திருந்தனர் |
ஈமான் அமைப்பின் தமிழக
ஜமாஅத்கள் ஒருங்கிணைப்பாளர்
துபை ஈமான் அமைப்பின் சார்பில்
தமிழகத்தைச் சேர்ந்த அமீரகத்தில்
செயல்பட்டுவரும் ஜமாஅத்தார்கள் தங்களது
ஜமாஅத் மற்றும் அதன் நிர்வாகிகளைப் பற்றிய
விபரங்களையும் பதிவு செய்து வைத்துள்ளன.
அவ்வாறு பதிவு செய்து வைக்காதவர்கள்
தங்களது ஜமாஅத் பற்றிய விபரங்களைப் பதிவு
செய்து வைத்துக் கொள்ள கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பணிக்காக
கீழக்கரையைச் சேர்ந்த ஹமீது யாசின்
நியமிக்கப்பட்டுள்ளதாக ஈமான் அமைப்பின்
பொதுச்செயலாளர் அல்ஹாஜ் குத்தாலம் ஏ
லியாக்கத் அலி தெரிவித்தார்.
ஹமீது யாசினை 050 4753052 எனும் தொலைபேசி
இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும்
imanjamath@yahoo.com எனும் மின்னஞ்சல்
மூலமும் தொடர்பு கொள்ளலாம். இவரது தந்தை
அம்ஜத் இப்ராஹிம் கீழக்கரையில் தினகரன்
நாளிதழின் செய்தியாளராக செயல்பட்டு
வருகிறார்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )
|
முந்தைய பகுதிகள்
|