|
முதுகுளத்தூரில் தவ்ஹீத்
ஜமாஅத் ஏற்பாட்டில் முதல் முறையாக ஒட்டக
குர்பானி முதுகுளத்தூரில் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியின் காரணமாக
21.12.2007 வெள்ளிக்கிழமையன்று தியாகத்
திருநாளையட்டி கூட்டுக்குர்பானி திட்டத்தின்
கீழ் முதல் முறையாக ஒட்டக குர்பானி
கொடுக்கப்பட இருக்கிறது.
இது நமதூரில் முதல் முயற்சி என்பதால்
பொதுமக்களும், சிறுவர்களும் ஆர்வமுடன் வந்து
ஒட்டகத்தை பார்த்துச் செல்கின்றனர்.
ஒட்டகத்தின் புகைப்படம் காண வலைத்தள முகவரி
:www.mudukulathur.blogspot.com
ஆதாரம் :நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன்
பயணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள்
வந்தது. அப்போது நாங்கள் ஒரு மாட்டில் ஏழு
நபர்களும், ஒரு ஒட்டகத்தில் பத்து நபர்களும்
கூட்டாகிக் கொண்டோம்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ( ரலி )
நூல் : திர்மிதி
தகவல் : யாசின், சாலிஹா ஸ்டோர், பலசரக்கு
வியாபாரம், முதுகுளத்தூர். |
Qur'anic Ringtones Haram
The Islamic Jurisprudence Council banned the
use of the verses of the Holy Qur'an as
ringtones for mobile phones because it
impinges on the sacred character of the
Muslim Holy Book, according to the Saudi
Press Agency.
"It is demeaning to the verses of the Holy
Book to stop abruptly at the middle of a
recitation or neglecting the recitation, as
happens when they are used as ringtones in
mobile phones. On the other hand, recording
the verses from the Holy Qur'an in phone
sets with the intention of recitation and
listening is a virtuous act," the scholars
attending the council said in a statement.
During the 6-day meeting of the Council in
Makkah, which began on November 3 under the
chairmanship of Grand Mufti Abdul Aziz
Al-Asheikh, 70 Muslim dignitaries and
scholars tackled a number of important
issues.
The council decided that Muslims are
permitted to determine the sex of a foetus
provided it was a medical necessity, such as
ascertaining diseases that are suspected to
affect boys and not girls, and vice versa.
The council said three doctors would be
required to confirm the medical necessity of
the procedure.
The council also encouraged Muslims in the
West to participate in elections in
non-Muslim countries and play an effective
political role, especially if elections
brought about public good or prevented
social evils.
It said this was the only way for Muslims
abroad to secure their rights.
It also encouraged Muslims in the West to
integrate into Western societies but
cautioned them against adopting any Western
habits that are contrary to the principles
of Islam.
Islamic scholars from various parts of the
world, who attended the conference, also
called for the upholding of Islamic unity
and adherence to the Holy Qur'an and Sunnah
(Tradition of the Prophet), while tackling
issues affecting Muslim countries such as
Iraq, Somalia. |
துபாய் ஈமான்
அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்
துபாய்
ஈமான் அமைப்பு மத்திய கிழக்கு ஆசிய
வளர்ச்சிக்கு உதவிய சிறந்த ஆசியருக்கான
விருது பெற்ற ETA அஸ்கான் ஸ்டார்
குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செய்யது
எம் ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கு
வாழ்த்தரங்கம் 15.12.2007 சனிக்கிழமை
மேரியாட் ஹோட்டலில் நடைபெற்றது.
துவக்கமாக ஈமான் அமைப்பின் விழாக்குழு
செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தின் இறை
வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர்
குத்தாலம் ஏ லியாகத் அலி வரவேற்புரை
நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் விழா
அறிமுகவுரை நிகழ்த்தினார். அவர் தனது
உரையில் விழா நடத்துவதன் நோக்கம், ஈமான்
அமைப்பு மேற்கொண்டுவரும் சமூக
மேம்பாட்டுப் பணிகள் குறித்து
விவரித்தார்.
துபாய் இந்திய கன்சல் பி.எஸ். முபாரக்
தனது உரையில் சலாஹ¤த்தீன் அவர்கள்
பரபரப்பு மிகுந்த துபாயில் அமைதியான
மனதுடன் ஒரு இளைஞரைப் போன்று தொழில்
மற்றும் சமூக சேவையில் சாதனை படைத்து
வருகிறார் என்றார்.
ஈமான்
அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் P.S.M.
ஹபிபுல்லார், அபுதாபி அய்மான் சங்கத்தின்
ஹமீதுர் ரஹ்மான், உலக தமிழ்ப்
பண்பாட்டுக்கழக் நிர்வாகி முனைவர்
ரபியுத்தீன், நம்ம ஊரு செய்தி ஆசிரியர்
முனைவர் அ அய்யூப், சங்கமம் தொலைக்காட்சி
இயக்குநர் கலையன்பன், ஷார்ஜா தமிழ்நாடு
பண்பாட்டுக் கழகம், துபாய் தமிழ்ச்
சங்கம், தமிழ்ப் பெண்கள் சங்கம், அமீரகத்
தமிழ் கவிஞர்கள் பேரவை, தாய்மண் சர்வதேச
அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர்
வாழ்த்துரை வழங்கினர்.
ஏற்புரை நிகழ்த்திய சையது எம்
ஸலாஹ¤த்தீன் தனக்கு இத்தகைய விருது
கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும்
நன்றி தெரித்தார். புகழ் அனைத்தும்
இறைவனுக்கே என்றார். ETA அஸ்கான் ஸ்டார்
நிறுவனம் குடும்ப கலாச்சாரத்தைக்
கொண்டிருப்பதால் தான் இத்தகைய சாதனை
படைக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
ஊழியர்களுடன் உள்ள இடைவெளியைக் குறைத்து
அவர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை
ஏற்படுத்தி திட்டம் தீட்டி வருவதும்
இந்நிறுவனத்தின் வெற்றிக்கு மற்றுமொரு
காரணம் என்றார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர்
முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். விழா
நிகழ்ச்சியினை ஈமான் அமைப்பின்
கல்விக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா
தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்
அப்துல் கத்தீம், அஷ்ரப் அலி, மதுக்கூர்
ஹிதாயத்துல்லாஹ், இஸ்மாயில்
ஹாஜியார்,ரமேஷ், பிரசன்னா உள்ளிட்டோர்
செய்திருந்தனர்.
|
கீழக்கரை மேலத்தெருவில்
அமைந்துள்ள உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க பவள
விழா
ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரை
மேலத்தெருவில் உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம்
சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாத் உள்ளது.
கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வாழும்
இந்தியர்களில் சிறந்த தொழில் அதிபர் என்று
ஜனாதிபதியிடம் விருது பெற்றவரும்,
இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு சிறந்த சேவையாற்றியதற்கான
விருதினை துபாய் நாட்டு அரசிடம பெற்றவருமான
அல்ஹாஜ் செய்யது எம்.சலாகுதீன் இந்த
சங்கத்தின் தலைவராக உள்ளார். பழம்பெருமை
வாய்ந்த உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தின்
பவள விழா வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)
மாலை நடைபெறுகிறது.
கீழக்கரை இமாம் சதக்கத்துல்லா அப்பா (ரஹ்)
வளாகத்தில் மாலை 4 மணி முதல் நடைபெறும் இந்த
சிறப்பு மிகு பவளவிழாவுக்கு சீதக்காதி
அறக்கட்டளை மற்றும் அகில இந்திய இஸ்லாமிய
நிறுவனத்தின் நிறுவனர் அல்ஹாஜ்.பி.எஸ்.அப்துர்
ரஹ்மான் முன்னிலை வகிக்கிறார். உஸ்வத்துன்
ஹசனா முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் செய்யது
எம்.சலாகுதீன் தலைமை தாங்குகிறார். துணை
தலைவரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற
உறுப்பினருமான அல்ஹாஜ் அசன் அலி வரவேற்று
பேசுகிறார்.
விழாவில் சங்க பவள விழா மலரை சுலைமான் ஆலிம்
அறக்கட்டளை டிரஸ்டி அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம்.அகமது
உசேன் வெளியிட முதல் மலரை தமிழக வணிகவரித்துறை
அமைச்சர் எஸ்.என்.எம்.உபையதுல்லா
பெற்றுக்கொண்டு வாழ்த்தி பேசுகிறார். விழாவில்
சங்கத்தில் சிறப்பாக பணியாற்றி
சேவையாற்றியவர்களுக்கு தமிழக குடிசை மாற்று
வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் பரிசுகள்
வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.
விழாவில் சுலைமான் ஆலிம் அறக்கட்டளை தலைவர்
அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் ஜமாலி,
அரூஸியா தைக்கா மானேஜிங் டிரஸ்டி அல்ஹாஜ்
தைக்கா சுஐபு ஆலிம்,
மெஜஸ்டிக் பவுண்டேசன் தலைவர் அல்ஹாஜ்
கே.வி.எம்.அப்துல் கரீம்,
முகமது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ்
எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர்,
சீதக்காதி அறக்கட்டளை பொருளாளர் அல்ஹாஜ்
எம்.கே.சதக் அப்துல் காதர், உஸ்வத்துன் ஹசனா
முஸ்லிம் சங்க துணை தலைவர் அல்ஹாஜ்
என்.டி.எம். முஸ்தபா கமால், அகில இந்திய
இஸ்லாமிக் பவுண்டேசன் செயலாளர் அல்ஹாஜ்
பி.எஸ்.எம்.செய்யது அப்துல் காதர், முகமது
சதக் அறக்கட்டளை டிரஸ்டி அல்ஹாஜ்
எஸ்.எம்.பி.சித்திக், ஆலிம் முகமது சாலிகு
அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் எஸ்.என்.எம்.சேகு
நூர்தீன், கிரசண்ட் பொறியியல் கல்லூரி தாளாளர்
அல்ஹாஜ் அப்துல் காதிர் அப்துர் ரகுமான்
புகாரி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
விழாவில் இந்திய ஞ்னியன் முஸ்லிம் லீக் தலைவர்
பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், கவிஞர்
வைரமுத்து,
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி முதல்வர்
டாக்டர் மேஜர் செய்யது சகாபுதீன், கீழக்கரை
நகரசபை தலைவர் எஸ்.ஏ.எச்.பசீர் அகமது, அரூஸியா
தைக்க பேராசிரியர் மவுலவி முகைதீன் அப்துல்
காதர் மன்பஈ ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றுகின்றனர். விழா முடிவில் சங்க
இணைச்செயலாளர் அல்ஹாஜ் டி.ஏ.தமீம் அன்சாரி
நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிகளை அல்ஹாஜ்
ஏ.ஜி.அகமது ரிபாய், எம்.கே.இ.உமர் அப்துல்
காதர் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
விழாவுக்கான சிறப்பு மேடை,
பந்தல் அமைப்பு ஆகிய பணிகளை சங்கத்தை சேர்ந்த
கே.வி.எம்.கஞ்ம், எஸ்.எம்.பி.ஜவுனைது,
சர்க்கார் ஆஷிக் ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் அல்ஹாஜ் செய்யது
எம்.சலாகுதீன்,
செயலாளர் அல்ஹாஜ் முகமது ஹசன் ஆகியோர் செய்து
வருகின்றனர். கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த
அனைவரும் உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தை
சேர்ந்தவர்கள். இவர்கள் அமெரிக்கா, ஜப்பான்,
சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகளில் வாழ்ந்து பெரும் தொழில்
வணிகர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் சங்க
பவள விழாவையொட்டி வெளிநாடுகளில் இருந்து
குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக விமானத்தில்
பறந்து வந்து கீழக்கரையை அடைந்துள்ளனர். பவள
விழாவையொட்டி கீழக்கரை திருவிழா கோலம்
பூண்டுள்ளது.
|
|
அமீரகத்தில் மழை வேண்டி
பிரார்த்தனை அமீரகத்தில் மழை வேண்டி
நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றி
அல்லாஹ்விடம்
சிறப்புப் பிரார்த்தனை செய்ய அமீரக அதிபர்
ஷேக் கலீபா பின் ஸையித் அல் நஹ்யான் அழைப்பு
விடுத்தார்.
அதனையட்டி இன்று ( திங்கட்கிழமை ) காலை
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள
பள்ளிவாசல்களில் சிறப்புப் பிரார்த்தனை
செய்யப்பட்டது. |
|
துபாய் பிட்ஸ் பிலானி புதிய கட்டிடம் திறப்பு
விழா துபாயில் இயங்கி வரும்
இந்தியாவின் பிரபல கல்வி நிறுவனமான பிர்லா
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயன்ஸஸ் (
பிட்ஸ் பிலானி ) புதிய கட்டிட திறப்பு விழா
கல்வி நகரில் ( Academic City ) நடைபெற்றது.
இப்புதிய கட்டிடத்தில் வகுப்பறைகள்,
நூலகம், பயிற்சி அறைகள், மாணவர் விடுதி,
விளையாட்டு வசதி மற்றும் கூட்ட அரங்கு ஆகியவை
அமைக்கப்பட்டுள்ளன. இவை 15 ஏக்கர் பரப்பளவில்
அமைக்கப்பட்டுள்ளன.
டாக்டர் பிர்லா இப்புதிய இடத்தில் இக்கல்வி
நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைக்கும். இங்கு
பயிலும் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள்
பிரகாசமாக விளங்குவர் என்றார்.
அமீரகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து
பேர்களூக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என
அதன் இயக்குநர் முஹம்மது ரியாசுதீன்
தெரிவித்தார்.
தற்பொழுது 1450 ஆசிய மாணவர்கள் இங்கு பயின்று
வருகின்றனர். 2008 க்குள் இந்த எண்ணிக்கை 2500
ஆகும்.
இந்நிகழ்ச்சியில் ETA அஸ்கான் ஸ்டார்
நிர்வாக இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤த்தீன்,
இயக்குநர் ஈஸா அல் குரைர், டாக்டர் அயூப்
காசிம் உள்ளிட்டோர் பங்கேற்றுச்
சிறப்பித்தனர். |
|
திறனாய்வு போட்டியில் ஊட்டி மாணவிகள் சாதனை
ஆஸ்திரேலியா பல்கலைக் கழகம் நடத்திய திறனாய்வு
போட்டியில் கலந்து கொண்டு சாதித்த, ஊட்டி
கிரசன்ட் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.ஆஸ்திரேலியா சவுத் வேல்ஸ்
பல்கலைக்கழகம், மெக்மில்லன் இந்தியா லிட்.,
நிறுவனத்துடன் இணைந்து இந்திய அளவில் உள்ள
பள்ளிகளுக்கு இடையே கடந்த 2004ம் ஆண்டு முதல்
மதிப்பீடு செய்து வருகிறது.
இதற்காக, பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்,
கணிதம், அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர்
பாடங்களில் திறனாய்வு போட்டிகள்
நடத்தப்படுகின்றன. நடப்பாண்டுக்கான திறனாய்வு
போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி
நடந்தன. இதில், இந்தியா, வங்கதேசம், நேபாளம்,
பூட்டான், இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவுகள்,
ஐக்கிய அரபு நாடுகள், ஓமான், குவைத், கத்தார்,
ஈரான் மற்றும் ஈராக்கிலிருந்து 2 ஆயிரத்து 243
பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து
527 மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில்
கலந்து கொண்டனர். தமிழக அளவில் நடத்தப்பட்ட
போட்டியில் வெற்றி பெற்ற ஆயிரத்து 787
மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஆங்கிலப் பிரிவில், ஊட்டி கிரசன்ட்
பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவிகள்
நிஹாரிகா அன்னா ஜான் மற்றும் ஆயிஷா ஆஷிகா
ஆகியோர் 45 மதிப்பெண் பெற்று மாநிலத்தில்
முதலிடம் பிடித்து சாதித்துள்ளனர்.
இவர்களுக்கு கிரசன்ட் பள்ளி முதல்வர் பாரூக்
மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு
தெரிவித்துள்ளனர். |
அமீரகத்தில் அல்லலுற்ற
கிர்ஜிஸ்தான் ஹஜ் பயணிகள்
புனித மெக்கா
அனுப்பிவைக்கப்பட்டனர்
கிர்ஜிஸ்தானைச் சேர்ந்த 600 க்கும்
மேற்பட்ட ஹஜ் பயணிகள் அந்நாட்டைச் சேர்ந்த
பயண ஏற்பாட்டாளரால் ஏமாற்றப்பட்டு
சுற்றுலா விசாவில் புஜைராவில் இறக்கி
விடப்பட்டனர்.
புஜைராவில் இறக்கி விடப்பட்ட அவர்கள்
தாங்கள் வந்திருப்பது புனித மக்கா என
நினைத்து அல்லாஹ¤ அக்பர் எனும்
முழக்கத்துடன் வெளியே வந்தவர்களுக்கு
ஏமாற்றம்.
பின்னர் இதனையறிந்த செம்பிறைச்சங்கம்
அவர்களை பல்வேறு இடங்களில் தங்க வைத்து
உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளித்தது.
மேலும் சவுதி அரேபியா செல்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தது. இதற்கு ஷேக் கலீபா
பவுண்டேஷன் மற்றும் சில தனவந்தர்கள் உதவி
புரிந்தனர்.
தாங்கள் அமீரக அரசுக்கு நன்றி
தெரிவிப்பதாக தெரிவித்த பயணிகள் தாங்கள்
நாடு திரும்பியதும் தங்களை ஏமாற்றியவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க புகார்
அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
|
முந்தைய பகுதிகள்
|