முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
 
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தம் கவிதை உணர்வுகளால் தமிழை அலங்கரித்த காயல் பிறைக்கொடியான் கடந்த 09.02.2008 சனிக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காயல்பட்டணத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு துபாயில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
தேசியம், தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், கல்வி, சமூக விழிப்புணர்வு என அவர் பாடாத தலைப்புகளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
 
ஒருமைப்பாடு பேணுவோம்... நன்றியோடு தாயகத்தில் நன்மை சூழ வாழ்வோம் என்ற தேசிய
உணர்வூட்டும் உள்ளிட்ட பாடல்கள் பல கவிஞருக்கு பெருமை சேர்த்தவை! மரபுக் கவிதையிலும், இசைப்பாட்டிலும் தனித்து விளங்கியவர்.
 
அவர் பாடிய கடைசி இரங்கற்பா !
 
 
உன்னுடைய பொம்மை தான்
நானென்று நானறிவேன்
உன்னுடைய பலகோடி கோடி
அடியாரில் நானொருவன்
 
இன்னல் தரும் பிணிகளினால்
தாக்குண்டு தவிக்கின்றேன்
என்னை இவ்வாறு இங்கே
இடர்படுத்தல் சம்மதமோ!
 
என்னுடைய பணிகளிங்கே
இன்னும் இருக்குமெனில்
இன்னல் தரும் பிணிகளெனை
அணுகாது காப்பாயே!
 
இல்லை எனில் உடன்தூய
இனிய கலிமாவுடனே
வல்லோனே உன் சிறந்த
விண்ணுலகிற் கழைப்பாயே!!
 
அவரது மறைவுக்கு துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அய்மான் சங்க தலைவர் காதர் பக்‌ஷ் ஹுஸைன் சித்திக்கீ,  துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், காயல் நல மன்ற அங்கத்தினர்கள், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர் எஸ். சம்சுதீன், இனிய திசைகள் வாசகர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

 
காயல் பிறைக்கொடியான் - அவர்
இறைவனின் நல்லடியான் !
 
அவருடைய தொகுப்புகள் அனைத்தும்
சமுதாயத்திற்கு வகுப்புகள் !
 
அவருடைய வார்த்தைகள் அவற்றின்
வார்ப்புகள் !
 
அவர் சிந்தனையில் கருத்துக்கள்
கரு பிடிக்கும் ! அவைகள்
சமூகத்தின் துரு எடுக்கும் !
 
கவிஞர் மஹ்மூது ஹுசைன் - அவர்
இன்னும் ஒரு தோண்டப்படாத சுரங்கம்
நல்ல பல கவிதைகள் அதில் உறங்கும் !
 
அவருடைய ஆக்கங்கள் தனிவுடமை அல்ல
அவைகள் சமூகத்தின் பொதுவுடமை !
 
தமதாதாயக் கவிஞர்கள் வாழும் இவ்வுலகில்
சமுதாதாயக் கவிஞர் உம் போல் சிலரே !
 
உம் கவிதைகள் வெளிவுலகிற்கு வராத நிலையிலேயே
நீர் விண்ணுலகை அடைந்துவிட்டீர் !
 
சுமக்க முடியாத ஒரு கவிதைப் பெட்டகம் - இங்கு
இறக்கி வைக்கப்பட்டுள்ளது ! ( இன்னாலில்லாஹி .......... )
 
ஒரு கவிதை மரணம் அடைந்தும்
மரணமே கவிதையாய் வாழ்கிறது !
 
------------- காயல் யு. அஹமது சுலைமான் , துபாய்
 
காயல் பிறைக்கொடியான் மஹ்மூது ஹுசைன் மறைவையடுத்து எழுந்த கவிதை

தேவிபட்டினம் பள்ளி ஆண்டு விழா

தேவிபட்டினம் புகாரியா மெட்ரிக்., மேல்நிலைபள்ளி ஆண்டு விழா நடந்தது.புகாரியா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சீனிமுகம்மது மரைக்காயர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் ஜபருல்லா முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை சுமதி வரவேற்றார். பள்ளி முதல்வர் ரத்னகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். வக்கீல் அப்துல்லா மரைக்காயர் பரிசுகளை வழங்கினார். ஆசிரியர் கணேசகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக் ., பள்ளி முதல்வர் செல்லையா, சாப்தீன், சமூக சேவா சங்க தலைவர் தாதாஹயாத், ஊராட்சி தலைவர் சேகுஅபுல் உசேன் பேசினர். மேலாளர் இக்பால் மஜிஷா பள்ளி இயக்குனர்கள் முகைதீன்பாத்திமா நுஸ்ரத் ஷாஜிரா உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல் சிந்தியா நன்றி கூறினார்.

செய்யது அம்மாள் கல்லுõரியில் இன்டகிரண்ட்ஸ் 08

ராமநாதபுரம் :ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லுõரி மார்கன் மேத் கிளப் சார்பில் கல்லுõரிகளுக்கு இடையிலான இன்டகிரண்ட்ஸ் 08 நடந்தது. 12 கல்லுõரிகளிலிருந்து 160 மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். செயலாளர் சின்னதுரை துவக்கி வைத்தார். ஜெனரல் மோட்டார் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் டாக் டர் சீனிவாசன் பேசினார். சிவகாசி மெப்கோ ஷிலங்க் இன்ஜினியரிங் கல்லுõரிக்கு சுழற்கேடயம் அளிக்கப் பட்டது.

கீழக்கரையில் வளாக தேர்வு

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுõரியில் வளாக தேர்வு நடந்தது. ராமநாதபுரம் ஸ்டார் எச்.ஆர்.டிரெயினிங் சர்வீஸ் சார்பில்நடந்த வளாக தேர்வில் கல்லுõரி தலைவர் அப்துல்காதர், தாளாளர் கபீர்சாகிபு தலைமை வகித்தனர். பாலிடெக்னிக் முதல்வர் அலாவூதீன் வரவேற்றார். துபாய் இடிஏ அஸ்கான் குரூப் பொது மேலாளர் சலீம், திட்ட அலுவலர் அசோகன் பேசினர். முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுõரி மாணவர்கள் 82 பேர், முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுõரி மாணவர்கள் 32 பேர் பங்கேற்றனர். வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஷேக்தாவூது, சுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆண்டு விழா

ஏர்வாடி: ஏர்வாடி எலைட் மெட்ரிக்., பள்ளி ஆண்டு விழா நடந்தது. கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளி தாளாளர் ஜகுபர் சாதிக் தலைமை வகித்தார். ஆசி ரியை வசந்தி வரவேற்க தலைமை ஆசிரியர் சேக்மஜீது ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆலோசர் முஸ்த்தபா பேசினார். முகம்மது இஸ் மாயில் கல்விக்குழு பொரு ளாளர் செய்யது அப்பாஸ் இபுராகீம் பரிசுகள் வழங் கினார். ஆசிரியர் சிவ சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

 
தோப்புத்துறை அல் நூர் பள்ளி ஆண்டுவிழா எதிர்வரும் மார்ச் 1 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நடைபெற இருக்கிறது. ராஜகிரி தாவூத்பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளரும்,முதல்வருமான டாக்டர் எம்.ஏ. தாவுத் பாட்சா ஆண்டு விழா நிகழ்ச்சியின் சிறப்பு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரை நிகழ்த்த உள்ளார்.
 
மேலும் பல்வேறு தரப்பட்ட பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
 
பள்ளி மாணவ, மாணவியரின் திறனை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகளை பெற்றோர் - ஆசிரியை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
 
தகவல் : AJ NOOR noordeen@hotmail.com

பஹ்ரைன் காயல் நற்பணி மன்றம் (பக்வா)

பக்வா ஓராண்டு நிறைவு விழா!

பக்வா மலர் வெளியீட்டு விழா!!
வான்புகழ் காயல்பட்டணம் எல்லாத் துறையிலும் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் திகழவேண்டும் என்ற உயரிய என்னத்தில் உருவாக்கப்பட்டது பக்வா ஆகும். கல்வி சேவையும் வேலைவாய்ப்பையும் கண்களாக கருதி குறுகிய காலத்தில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தொழில் கல்வி பயிழ மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறோம். இச்சீறிய பணி சிறப்புறச் செயல்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவு கூற ஆண்டு விழாவின் மலர் வெளியீட்டு விழாவும், இன்ஷா அல்லாஹ் ரபியுல் அவ்வல் பிறை 12 (மீலாது நபி) 19-03-2008 அன்று விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்பதை பக்வா தலைவர் ஜனாப் அல்ஹாஜ் ஆர்.எஸ்.எம்.அபுல் ஹசன், ஜென்ட்ரல் மேனஜர் (அரேபியன் கல்ஃப் சிமெண்ட் கம்பெனி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் தகவல் பெற :-

எம்.ஐ.யூசுப் சாகிப்,காயல் உயர்கல்வி மேம்பாட்டு மையம், காயல்பட்டணம்.

உருது டிப்ளமோவில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப்.22: உருது மொழி மேம்பாட்டு தேசியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கோவை உருது கல்வி மையத்தில் ஏப்ரல் முதல் உருது டிப்ளமோ வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

பிப். 29-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள். தொடர்புக்கு உருது கல்வி மையம், 37/29, மானியத் தோட்டம், எண்.1, என்.ஹெச்.சாலை, கோவை-1. தொலைபேசி 2304658.

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்
 
அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள் குறித்த விபரமாவது :
 
பேச்சுப் போட்டி 1 ( ஆலிம் பெருமக்களுக்கு மட்டும் )
 
வெள்ளிக்கிழமை 29.02.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.
 
உலக வாழ்வில் பெருமானாரின் இறுதி நாட்கள், இன்றைக்கும் பொருந்துகிற இறுதித் தூதரின் சொற்கள், மஹ்ஷர் வெளியில் மாநபியின் ஷபாஅத், அரபகம் அண்ணலாரின் வருகைக்கு முன்னரும்,பின்னரும் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் பேசுவதற்கு தயார் நிலையில் வரவேண்டும். இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 20.02.2008
 
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.
 
புனித குர்ஆன் மனனப் போட்டி   07.03.2008 வெள்ளிக்கிழமை
 
வெள்ளிக்கிழமை 07.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற இருக்கிறது.
 
புனித குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான மனனப் போட்டியில் நாற்பது வயதிற்கு உட்பட்ட ஹாபிழ்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டி இவ்வருடம் முதல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 29.02.2008
 
 
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச புனித உம்ரா பயணம், துபாய் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக் கூப்பன், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.
 
பேச்சுப் போட்டி 2 ( பொதுமக்கள், மாணவ, மாணவியர் )
 
வெள்ளிக்கிழமை 14.03.2008 மாலை 4.00 மணிக்கு அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( அல்முதினா லூலூ செண்டர் பின்புறம் ) நடைபெற இருக்கிறது.
 
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் ( ஸல் ) அவர்கள், வேந்தர் நபிகளின் வருகை பற்றி வேதங்களின் முன்னறிவிப்பு, சான்றோர்கள் பார்வையில் ( ஸல் ), உத்தம நபியும், உண்மைத் தோழர்களும், பயணம் வகுத்த பாதை ( ஹிஜ்ரத் ) ஆகிய தலைப்புகளில் பொதுமக்கள் பேசலாம்.
 
இப்போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் ஜாதிம் மதம், இன வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
 
அண்ணலார் ( ஸல் ) ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒன்றில் மாணவ, மாணவியர் பேசலாம்.
 
இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் 10.03.2008
 
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் ஷார்ஜா திருச்சி ஷார்ஜா இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.
 
போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்ய்யத்தீன் 050 58 53 888, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712, ஈமான் அலுவலகம் 04 2661415 தொலைநகல் 04 2664142 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
MESSAGE FROM
 
Muduvai Hidayath
Media Co-ordinator
Indian Muslim Association ( IMAN )
Dubai
muduvaihidayath@gmail.com
00971 50 5196433
துபாயில் நூல் அறிமுக விழா
                                                       
வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின்  'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேசினார். நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மானும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலியும் பெற்றுக்கொண்டனர்.  இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com

முகைதின் .A
அலைபேசி-050 4689868        -055 8034874
 
 
 
துபாய் மற்றும் வளைகுடாவில் வாழ்ந்து வரும் இந்தியர் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை குறும்படமாக தயாரித்து வசந்தம் செண்டரல் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட இருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
 
மேற்கண்ட தகவலை குறும்பட நிகழ்ச்சியினை தயாரித்து வரும் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
 
தினத்தந்தி நாளிதழ் மற்றும் ராணிமுத்து வார இதழில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியம் வரைந்து வரும் ஓவியர் மாலி (என்ற) இ. முஹம்மது அலிக்கு நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் முதலியார்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஹாஜி கே. ஷேக் மைதீன் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்த்தார். ஊராட்சி மன்றத்தலைவர் மு.பஸ்லுர் ரஹ்மான் மற்றும் அதிமுக பிரமுகர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com