முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

சித்தார் கோட்டை பள்ளி ஆண்டு விழா


தேவிபட்டினம் ; சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் முகம்மது தாவூது தலைமை வகித்தார். தஸ்தகீர் முன்னிலை வகித்தார். தாளாளர் அகமது கபீர் வரவேற்றார். அயிசாஜமினா கிரா அத் ஓதினார். தேசிய கொடியை துணைத் தலைவர் அல்தாப் உசேன், ஒலிம்பிக் கொடியை இபுராகீம், ஒலிம்பிக் தீபத்தை செய்யது அப்பாஸ் அலியும் ஏற்றினர்.பருத்தி வீரன் திரைப்பட இயக்குனர் அமீர் பேசினார்.மாவட்டக் கல்வி அலுவலர் ஜவகர் அலி, புரவலர் ஆரிபுகான், கல்விக்குழு உறுப்பினர் அகமது இபுராகீம், தலைமை ஆசிரியர் முகம்மது இபுராமுசா, செயலாளர் முஸ்தபா, ஆஸ்திரேலியா தமிழ்ச்சங்க தலைவர் உபைதுல்லா, ஒன்றிய கவுன்சிலர் ஜமீர்ஹசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் மைமுனாராணி நன்றி கூறினார்.

புதியநிலா பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா


சிங்கப்பூர்: புதியநிலா மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டுவிழா சுல்தான் பள்ளிவாசல் இணைமண்டபத்தில் 19-08-2007 மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவுக்கு மா.அன்பழகன் மற்றும் எம்.ஒய்.முஹம்மது ர•பீக் முன்னிலை வகிக்க , திரு எம். இலியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மூத்த கவிஞர் திரு இக்குவனம் தொகுப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் அவர்களைப் பாராட்டி அந்தாதி வெண்பா பாடி மகிழ்ந்தார்.
தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு அ.முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் வாழ்த்துரை வழங்கினர்.
புதியநிலா பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சுமார் ஒரு மணி நேரம் நூலின் நயங்களைச் சுவையுடன் விரித்துரைத்தார்.
சிங்கப்பூர் எம்.இ.எஸ். உரிமையாளர் ஹாஜி அப்துல் ஜலீல், ஜமால் கஜூரா உரிமையாளர் ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
புதியநிலா இதழின் நிறுவனரும் சிறப்பாசிரியரும் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியருமான திரு மு.ஜஹாங்கீர் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தினார்.
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சிகளை கவித்துவமாய்த் தொகுத்து வழங்கிய அவ்விழாவில் சிங்கப்பூர் கவிச்சோலை/ கவிமாலைக் கவிஞர்கள் ஆறுபேர் 'புதியநிலா' என்ற தலைப்பில் கவிதை பாடியமைக்காக நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

சிங்கப்பூரின் முன்னணி பத்திரிகையாளர்கள்/ படைப்பிலக்கியவாதிகள்/தமிழறிஞர்கள்/வணிகர்கள்/பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட அவ்விழா ஓர் இலக்கியச் சங்கமமாகத் திகழ்ந்தது.

செய்தி: 'ஐனுல் மாஹிரா' , சிங்கப்பூர்

இந்தியாவிலேயே முதல் முறையாக விண்ணப்பித்த 30 நாள்களில் பாஸ்போர்ட் அளிப்பு


திருச்சி, ஆக. 24: இந்தியாவில் உள்ள 32 பாஸ்போர்ட் அலுவலகங்களிலேயே முதல்முறையாக சாதாரண முறையில், விண்ணப்பித்த 30 நாள்களில் திருச்சி மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன என்றார் மண்டல அலுவலர் எஸ். பாலச்சந்திரன்.

திருச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜூலை 25 ஆம் தேதி விண்ணப்பம் அளித்த 3 பேருக்கு பாஸ்போர்ட்டுகளை வழங்கினார் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஐ. ராஜா.

முன்னதாக எஸ். பாலச்சந்திரன் பேசியது, விண்ணப்பித்த 30 நாள்களில் பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கான காலக்கெடுவை அக். 31, 2007 என நாங்களே நிர்ணயித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இக் கெடுவுக்கு 2 மாதங்கள் 8 நாள்களுக்கு முன்னதாகவே வியாழக்கிழமை வழங்குகிறோம்.

புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரித்த போது இந்தியாவில் உள்ள 32 அலுவலகங்களில் 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கிய முதல் அலுவலகம் திருச்சி என்பது தெரிய வந்துள்ளது.

பாஸ்போர்ட் வழங்க காலதாமதமாவதற்கு இரு காரணங்கள். ஒன்று விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமை. மற்றொன்று காவல்துறை விசாரணை அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதம். தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னணு அஞ்சல் வழியாக காவல்துறை விசாரணை அறிக்கையை அனுப்பினால் 30 நாள்களுக்குள் பாஸ்போர்ட் வழங்குவது என்ற பணியைத் தொடர முடியும்.

காவல்துறையும் இந்த யோசனையை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் என்றார் பாலச்சந்திரன்.

 

கல்வி கற்க திறமை, நம்பிக்கை போதும்' இணை இயக்குனர் சையத் உஸ்மான் பேச்சு


புதுக்கோட்டை: ""கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்பு எதுவும் தேவையில்லை. திறமை மற்றும் தன்னம்பிக்கை இருந்தாலே போதுமானது,'' என மாணவிகளுக்கு திருச்சி மண்டல கல்லுõரிக் கல்வி இணை இயக்குனர் சையத் உஸ்மான் அறிவுரை வழங்கியுள்ளார்.புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லுõரியில் மாணவிகள் பேரவை துவக்கவிழா நடந்தது. கல்லுõரி முதல்வர் பூமா தலைமை வகித்தார். பேராசிரியை உமாராணி வரவேற்றார். பேரவையை துவக்கிவைத்து திருச்சி மண்டல கல்லுõரிக் கல்வி இணை இயக்குனர் சையத் உஸ்மான் பேசியதாவது:மாணவர்களிடையே கல்வித் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 7 சதவீதமாக உள்ளது. இதை 15 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பது தான் மத்திய, மாநில அரசுகளின் குறிக்கோளாக உள்ளது.இதனடிப்படையில் தான் அனைத்து கல்லுõரிகளிலும் சுழற்சிமுறையிலான வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த திட்டம் பாராட்டுக்குரியது என்றாலும் இவை முழு அளவில் வெற்றிபெற வேண்டுமானால் கல்லுõரிகளில் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசும், கல்வித்துறையும் முன்வரவேண்டும்.கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்புகள் எதுவும் தேவையில்லை. திறமை மற்றும் தன்னம்பிக்கை இருந்தாலே போதுமானது. இதிலும் மாணவிகள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்காது. நமது நாட்டின் மனிதவளம் என்பது இளைஞர்களாகிய மாணவ, மாணவிகளிடம் தான் உள்ளது.இவர்களை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் 2020ம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியா வல்லரசாகும் வாய்ப்புள்ளது. இதை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும். இதுவும் ஒழுக்கத்துடன் பயிலும் கல்விதான் ஒருவரை மேன்மையடையச் செய்யும். ஒழுக்கமற்ற கல்வி என்பது தன்னை மட்டுமின்றி தனது வாரிசுகளையும் அழித்துவிடும் ஆற்றல் பெற்றதாகும்.

எனவே, மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் கல்வி கற்பதை குறிக்கோளாக கொள்ளவேண்டும். கல்வி என்பது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பிறரிடமிருந்து அதாவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்வது, தன்னைத்தானே அதாவது ஆய்வுகள் மற்றும் அரிய கண்டுபிடிப்புகள் மூலம் கற்றுக்கொள்வது என்பதாகும். இதில், இரண்டாவது வகையான கல்விதான் ஒளிமயமான வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தது. கணிதமேதை ராமானுஜம், ஆராய்ச்சியாளர் தாமஸ் ஆல்வா எடிஸன் போன்ற மேதைகள் எல்லாம் இதற்கு எடுத்துக்காட்டாகும்."நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி' என்பது ஒன்பது சதவீதமாக உள்ளது. இதை 10 சதவீதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தாராளமயமாக்கல் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் தடையாக உள்ளது.தேவையான பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தி பாதித்துள்ளது. வெளிநாட்டவர்களை செல்வந்தர்களாக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றால் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டுமே வாங்கவேண்டும். இதை மாணவர் சமுதாயம் கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அரசு மாமன்னர் கல்லுõரி முதல்வர் நாராயணசாமி, கல்லுõரி பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் ராஜா முகம்மது மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.பேரவைத் தலைவி பத்மா நன்றி கூறினார்.

ரத்த தானம்: தமுமுகவுக்கு அமைச்சர் தங்கவேலன் பாராட்டு


ராமநாதபுரம், ஆக. 22: அதிகமாக ரத்த தான முகாம்களை நடத்திய தமுமுகவினருக்கு, அமைச்சர் சுப. தங்கவேலன் பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கினார்.

ராமநாதபுரம் ஜெனார்த்தணன் மாளிகையில், திங்கள்கிழமை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தினவிழா நடைபெற்றது.

விழாவில், ஏராளமான ரத்த தான முகாம்களை நடத்திய தமுமுகவினர், இதுவரை 637 பேருக்கு ரத்த தானம் செய்துள்ளதாக, வீட்டுவசதித் துறை அமைச்சர் சுப. தங்கவேலன் பாராட்டினார்.

மேலும் அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் சலிமுல்லாகானுக்கு அமைச்சர் கேடயம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார், மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட மருத்துவ அணிச் செயலர் அன்வர் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தீண்டாமையை ஒழிப்பதில் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருது 2007


தீண்டாமையை ஒழிப்பதில் தீவிர களப்பணி புரிந்தது மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கப் பணிபுரிந்தவர்களுக்கான தேசிய விருதை இந்திய அரசு நிறுவியுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ( என்.ஜி.ஓ ) அல்லது மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோர் சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பணிபுரிந்த்திருக்க வேண்டும்.

ஆண்டுக்கு நான்கு விருதுகள் வழங்கப்படும். போராளிக்கு வழங்கப்படும் விருத்துதொகை இரண்டு இலட்சம். நிறுவனத்துக்கு வழங்கப்படும் தொகை ஐந்து இலட்சம்.

மேற்கண்ட துறைகளில் தீவிரமாக சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளி என யாராவது ஒருவருக்கு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதிகளை கணக்கில் கொண்டு மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்படலாம்.

இந்த விருது 2007 ஆம் ஆண்டு நிறுவப்படுகிறது. தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும். இனம், பால், ஜாதி, மத அடிப்படையில் ஒடுக்குதல், வேறுபாடுகளைக் கடந்து இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை போராளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும். சம்பந்தப்பட்ட அமைப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது மனித உரிமைப் போராளிகளின் முக்கிய பணிகளை ஒரு தேர்வுக் குழுவும், நீதிபதிகள் குழுவும் தீவிரமாக பரிசீலனை செய்யும்.

கூடுதல் விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்

Shri R K Meena
Under Secretary
Room No 721 A
Shastry Bhawan
New Delhi
Tel : 011 23386981 / 23384918
www.socialjustice.nic.in

கடைசி தேதி : அக்டோபர் 31, 2007

துபாயில் ஏழு ஆசிய நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்


துபாய் : துபாயில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் இஸ்லாத்தைத் தழுவினர். இவர்களில் ஐந்து பேர் இலங்கையையும், ஒருவர் இந்தியாவையும், ஒருவர் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள்.

சிறையில் இஸ்லாமிய அமைச்சகத்தின் மேற்பார்வையில் அளிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய சொற்பொழிவைத் தொடர்ந்து இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இஸ்லாத்தை தாங்கள் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாத்தை ஏற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டி.என்.பி.எஸ்.ஸி நடத்தும் குரூப் 1 பதவிக்கான தேர்வு


தமிழக அரசுப் பணிகளில் முதன்மையான பணியான குரூப் 1 பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

பதவியின் பெயர் ( காலி இடங்கள் )

டெபுடி கலெக்டர் ( 30 )
டி.எஸ்.பி. ( 32 )
கமர்ஷியல் டேக்ஸ் ஆபிசர் ( 45 )
டெபுடி ரிஜிஸ்டிரர் - கூட்டுறவு சங்கம் ( 24 )
மாவட்ட பதிவாளர் ( 2 )
ஊரக வளர்ச்சித் துறையில் துணை ஆணையர் ( 29 )
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ( 7 )
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் டிவிஷனல் ஆபிசர் ( 3 )

சம்பள விகிதம் : ரூ 8000 - ரூ. 13,500

வயது வரம்பு : 1.7.2007 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் விபரங்களுக்கு

Controller of Examinations
Tamilnadu Public Service Commission
Omanthoorar Government Estate
Anna Salai
Chennai 600 002
www.tnpsc.gov.in


கடைசி தேதி : 30 ஆகஸ்ட் 2007

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368


பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள்.
இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் ஆங்காங்கே பார்க்கலாம். குதிரை வண்டிகள் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.

வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நீண்ட நெடியது. 2007 ஆகஸ்ட் 22-ந்தேதி (புதன்கிழமை) சென்னைக்கு 368 வயது ஆகிறது.

சென்னையை உருவாக்கியவர்கள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், குட்டி குட்டி நகரங்களாகவும் சென்னைப்பட்டினம் காட்சி அளித்தது. புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.

ஆங்கிலேயர்கள் வருகை

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.

ஜார்ஜ் கோட்டை

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக காரணமாக அமைந்தது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புபட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.

கைமாறியது

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.

1653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பெயர் மாற்றம்

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

சென்னை மாகாணம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

செய்தி: எம். ஹூஸைன்கனி

KACST Dismisses '2 Full Moons' Story'


RIYADH, 22 August 2007 - The King Abdul Aziz City for Science and Technology (KACST) has warned against a hoax e-mail claiming that Mars will look as large as the moon to the naked eye on Aug. 27 and that it will be as if there are "two full moons in the sky."

"It is misleading news... There is no astronomical event to occur as claimed. Rather, a full lunar eclipse will take place on Aug. 28," said Dr. Zaki Mustafa, head of KACST's Astronomy Department.

"A lunar eclipse is next on the menu for astronomers when on Aug. 28, the moon will pass through Earth's shadow," he said, adding that information disseminated on the Internet about the visibility of the moon in two distinct parts is totally untrue and misleading.

Arab News contacted astronomers at KACST when it received some 17 similar e-mails on the subject this week.

Speaking about the authenticity of the e-mail, Dr. Mustafa said: "This is not true and people should not believe it. Back in 2003, Mars did have a close encounter with Earth when it came within 35 million miles. It was much brighter, and appeared about six times larger than it normally does, but it was still just a dot in the sky to the naked eye."

He added, "Recently, several scientists, astronomers and newsmen in Saudi Arabia received thousands of e-mails containing incorrect information about Mars... We have already issued a statement and asked the general public to refrain from such false propaganda."

Dr. Mustafa said that Mars and Earth pass by one another every 26 months. On Aug. 27, 2003, the distance between the two planets was near a historic minimum - 34,646,418 miles. Because of the elliptical nature of the orbits of both planets, "close encounters" between the two planets are never quite the same. For example, the most recent Martian close approach took place on Oct. 30, 2005. At that time the minimum separation was just over 43 million miles.

Mars is a small rocky body once thought to be very earth-like. Like other terrestrial planets - Mercury, Venus and Earth - volcanism, impacts from other bodies, movement of its crust and atmospheric effects such as dust storms have changed its surface. It has polar ice caps that grow and recede with the change of seasons. Areas of layered soils near the Martian poles suggest that the planet's climate has changed more than once, perhaps caused by a regular change in the orbit.

by:Hussain Ghani

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com