டாக்டர்
கலைஞர் அவர்களால்
நாடறிந்த நாவலர் என்று
போற்றப்பட்டவரும், தமிழ்
இஸ்லாமிய முற்போக்கு வார
இதழான மறுமலர்ச்சி வார
இதழை ஏறத்தாழ 40 ஆண்டு
காலத்திற்கும் மேலாக
கடும்
போராட்டங்களுக்கிடையே
நடத்தி இஸ்லாமிய
சமுதாயத்திற்காக குரல்
கொடுத்தவரும், இந்திய
யூனியன் முஸ்லிம்
லீக்கின் மாநிலப்
பொதுச்செயலாளராய்
பல்லாண்டுகாலம்
பணிபுரிந்தவரும்,
காயிதேமில்லத், சிராஜுல்
மில்லத், சுலைமான் சேட்,
பனாத்வாலா, இ.அஹமது,
தந்தை பெரியார், பேரறிஞர்
அண்ணா, டாக்டர் கலைஞர்,
புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர்., முனிருல்
மில்லத் பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன்
எம்.பி என்று எல்லா
தலைவர்களிடமும் நட்பு
கொண்டிருந்தவரும்,
பல்வேறு நாவல்கள்,
சிறுகதைகள், கட்டுரைகள்
என படைத்தளித்த சிறந்த
எழுத்தாளரும், மிகச்
சிறந்த பேச்சாளருமாகிய
நாடறிந்த நாவலர்
மறுமலர்ச்சி
ஆசிரியர் ஏ.எம். யூசுப்
சாஹிப் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றை
சமுதாயக் கவிஞர்
எழுச்சிப்பாவலர்
விழுப்புரம் ஷாஜி எம்.எ.,
பி.எட். அவர்கள் எழுத
முனைந்துள்ளார்கள்.
இது தனிப்பட்ட ஒருவரின்
வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய
சமுதாயத்தின் நலனுக்காக
அயராது போராடியவரின்
எழுச்சிமிகு வீரச்
சரிதம். தமிழ் இஸ்லாமிய
சமூகம் தன்
நன்றியறிதலுக்குரிய
ஒருவரை, அவரின்
தியாகங்களை நினைவு
கூர்ந்து வருங்கால
சந்ததிக்காக ஏற்றிப்
போற்றவேண்டிய அற்புத
ஆவணம்.
நாவலர் அவர்களைப் பற்றிய
வாழ்க்கை நிகழ்வுகளோ,
அவர் பற்றிய குறிப்புகளோ,
துணுக்குகளோ,
புகைப்படங்களோ
தங்களிடமிருப்பின் தயவு
செய்து அவற்றை கீழ்க்கண்ட
முகவரிக்கு அனுப்பி
வைக்கவும்.
A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
- TRICHY
620 008
Tel : 0431 2714338
|
|
அரபு நாட்டில்
பணிபுரியும் தமிழர் நிலை: தமிழக அரசுடன் தூதர்
ஆலோசனை
ஐக்கிய
அரபு அமீரகத்தின் இந்தியத் தூதர் தல்மிஸ்
அகமது தமிழக முதல்வர் கருணாநிதியை தலைமைச்
செயலகத்தில் திங்கள்கிழமை மாலை
சந்தித்தார்.
அரபு
நாட்டில் வாழும் தமிழர்கள் நிலைமை
குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாகத்
தெரிகிறது.
முன்னதாக காலையில் அவர் தமிழக
அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, அரபு
நாடுகளில் வேலைக்காகச் செல்லும்
தமிழர்களின் நிலை குறித்தும், அதைத்
தவிர்ப்பது குறித்தும் அவர் ஆலோசித்தார்.
இந்திய
தொழிலாளர்கள், குறிப்பாகத் தமிழக
தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்
குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன்,
பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண
இந்திய தூதர் எடுக்கும் நடவடிக்கை
குறித்து பேசப்பட்டது. குடிபெயர்வோருக்கான
சான்றிதழ் பெற கடைப்பிடிக்க வேண்டிய
ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும், அந்த
நாடுகளில் வேலை அளிப்போருடன்
ஒப்பந்தத்தின் போது எடுக்க வேண்டிய
முன்னெச்சரிக்கை ஆகியவை குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.
தமிழக
பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்
துறைச் செயலர், தொழில் துறை சிறப்புச்
செயலர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன
அதிகாரிகள், குடிபெயர்ந்தோர் அமைப்புகளைச்
சேர்ந்தவர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
|
துபாயில்
பெண்களுக்காக ஆளுமைத் திறன் மேம்பாட்டு
பயிற்சி முகாம்
துபாயில் பெண்களுக்காக பெண்
பயிற்சியாளரால் நடத்தப்படும் ஆளுமைத்
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
எதிர்வரும் டிசம்பர் 2
ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல்
மாலை ஐந்து மணி வரை பர்துபாய் விஸ்டம்
இன்ஸ்டிடியூட்டில் நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சி முகாம் கோபம், தாழ்வு
மனப்பான்மையிலிருந்து விடுபடுதல்,
நம்மில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி
செய்து கொள்ளுதல், எண்ணத்தை
தூய்மைப்படுத்தி செயல்களை
வளப்படுத்துதல், இறைவன் நம்மைப்
படைத்த நோக்கத்தை அடைவது உள்ளிட்ட
பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக்
கொண்டு நடத்தப்படுகிறது.
முதலில் பதிவு செய்யும் ஐம்பது
நபர்களுக்கு மட்டுமே பயிற்சி முகாமில்
பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு 050 2557237 /
050 5196433 / 050 3851929 எனும்
தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
டிசம்பர் 2 ஆம் நாள் அமீரக தேசிய
தினம் என்பதால் அன்றைய தினம் அரசு
விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
|
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு
பகுதி ராசல் கைமா. இங்கு ராசல்
கைமா ஏர்லைன்ஸ் (RAK Airways)
எனும் விமான சேவை இம்மாத
இறுதியில் துவங்க உள்ளது.
நவம்பர் 29 ஆம் தேதி துவங்கும்
இவ்விமான சேவை ஆரம்பத்தில்
பெய்ரூட்டிற்கு வாரத்திற்கு
மூன்று முறை செல்லும். பின்னர்
பங்களாதேஷ், இலங்கை, பல்கேரியா
உள்ளிட்ட நாடுகளுக்கு
விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப்
பகுதிக்கும் இவ்விமானம் தனது
சிறகை விரிக்கும் எண்ணமும்
உள்ளது.
|
கணினி மென்பொருள் பயிற்சி
முகாம் நிறைவு
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல்
கல்லூரியில் சென்னை ஐ.பி.எம்.
நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான
கணிப்பொறி மென்பொருள் பயிற்சி முகாமின்
நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதன்கிழமை (நவ.21) தொடங்கிய இப் பயிற்சி
முகாம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று
வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
கல்லூரி
முதல்வர் டாக்டர்.முகம்மது செரீப் தலைமை
வகித்தார். கல்லூரியின் தகவல்
தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பி.
தனபால், கணிப்பொறி பிரிவுத் தலைவர் ஆர்.
நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
52
ஆசிரியர்கள் கலந்துகொண்ட இப்பயிற்சியில்
சென்னையைச் சேர்ந்த ஐ.பி.எம்.
நிறுவனத்தின் பயிற்சியாளர் சரவண சேகர்
பயிற்சியளித்தார்.
கல்லூரி
முதல்வர் டாக்டர் முகம்மது செரீப்,
அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு
கல்லூரியின் செயலாளர் டாக்டர் சின்னத்துரை
அப்துல்லா சான்றிதழ்கள் வழங்கி
பயிற்சியின் முக்கியத்துவம் குறித்துப்
பேசினார்.
ராமநாதபுரம் பொறியியல்
கல்லூரியில் மாணவர் அமைப்புக்
கருத்தரங்கம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல்
கல்லூரியில் தானியங்கிப் பொறியாளர்கள்
சங்க மாணவர் அமைப்பின் சார்பில்
வேலைவாய்ப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை
நடைபெற்றது.
சிறந்த
பொறியியல் வல்லுநர்களை அழைத்து வந்து
கருத்தரங்குகள் மற்றும் விவாதங்கள்
நடத்துதல், அனைத்து பொறியியல் துறைகளிலும்
உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி அறிந்து
கொள்ளச் செய்தல் போன்றவற்றை அறிந்து
கொள்ளச் செய்து சிறந்த பொறியியல்
மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்தக்
கருத்தரங்குக்கு கல்லூரியின் செயலர்
டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை
வகித்தார். முதல்வர் டாக்டர் முகம்மது
செரீப் முன்னிலை வகித்தார். மெக்கானிக்கல்
துறையின் தலைவர் எஸ்.கார்த்திகேயன்
வரவேற்றுப் பேசினார்.
கருத்தரங்கில் பெங்களூரூ ஜி.எம்.ஆராய்ச்சி
நிறுவனத்தின் அறிவியல் வல்லுநர் டாக்டர்
ஆர்.சீனிவாசன் மாணவர்களுக்கு அடையாள
அட்டைகளை வழங்கினார்.
பின்னர்
ஆட்டோமேடிவ் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள்
குறித்து அவர் பேசினார். ஆராய்ச்சி
மாணவர்களாக பணியாற்றும் ஏழு
பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பணி
குறித்தும் விவாதிக்கப்பட்டது.
|
|
தமிழ் அஞ்சல்
www.tamilanjal.com தமிழ் மின்னஞ்சல்
இணையதளம். தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புவதில்
இருக்கும் ஒரே பிரச்சனை, பெறுபவரிடமும்
குறிப்பிட்ட எழுத்து வடிவம் ( பாண்ட் ) இருக்க
வேண்டும் என்பது தான். இல்லையென்றால் நாம் ஆசை
ஆசையாகத் தேர்ந்தெடுத்து எழுதிய வார்த்தைகள்
கம்ப்யூட்டர் மொழியில் உருமாறி, படிக்கவே
முடியாதபடி அவர்களிடம் போய்ச் சேரும். தமிழில்
மின்னஞ்சல் அனுப்ப முயன்றவர்கள் அனைவரும்
ஒருமுறையாவது இந்த அனுபவத்தை எதிர்கொண்டு
இருப்பார்கள்.
தமிழ் அஞ்சலில் இந்தப் பிரச்சனை இல்லை
என்பது தான் இந்த இணையத்தளத்தின் விசேஷம்.
இதில் தமிழ் மின்னஞ்சல் வாழ்த்துக்களும்
அனுப்பலாம். தமிழிலேயே தேடவும், தமிழிலேயே
அரட்டை அடிக்கவும் லிங்க் உள்ளது.
தகவல் உதவி : ஆனந்த விகடன் 31.10.2007 |
|
பெண்களுக்காக பெண்களால்
நடத்தபெறும் இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி
சென்னையில் புரசைவாக்கம் ஹோட்டல்
சில்வர்ஸ்டாரில் பெண்களுக்காக பெண்களால்
நடத்தப்படுகிற இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி
24.11.2007 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு
துவங்குகிறது.
இக்கண்காட்சியை தமிழக அரசின் ஆதிதிராவிடர்
நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி ரவிக்குமார்
துவக்கி வைக்கிறார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கிரா தலைமை
தாங்குகிறார். மத்திய சென்னை மகளிர் அணி
அமைப்பாளர் பாத்திமா ஜலால் முன்னிலை
வகிக்கிறார்.
புத்தகக் கண்காட்சி சனி மற்றும் ஞாயிறு
ஆகிய இரு தினங்கள் காலை பத்து மணி முதல் இரவு
எட்டு மணி வரை நடைபெறும்.
புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய சென்னை மகளிர்
அணியினர் ஏற்பாடுசெய்துள்ளனர். மேலதிக
விபரங்களுக்கு 26651031 எனும் தொலைபேசி
இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். |
|
தமிழ்ப்பணி மாத இதழ்
சென்னையில் இருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ்
தமிழ்ப்பணி. என்னை நன்றாய் எந்தை படைத்தனன்,
அன்னைத் தமிழை அகிலம் உயர்த்தவே எனும்
மொழியுடன் தமிழ்ப்பணி மாத இதழ் 36 ஆண்டுகளாக
வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதன் சிறப்பாசிரியராக பெருங்கவிக்கோ வா.மு.
சேதுராமனும், ஆசிரியராக வா.மு.சே.
திருவள்ளுவரும் இருந்து வருகின்றனர்.
தமிழ்ப்பணி மாத இதழ் பெற ஆண்டுக்கட்டணம்
ரூ. 100, ஐந்தாண்டுக் கட்டணம் ரூ. 350,
பத்தாண்டுக்கு ரூ. 600 ஆயுள் உறுப்பினர் ரூ.
1000 புரவலர் நன்கொடை ரூ. 5000.
தமிழ்ப்பணியின் தொடர்பு முகவரி :
தமிழ்ப்பணி
எண் 12 சாயிநகர் இணைப்பு -
சென்னை 600 092
தொலைபேசி : 24798375 / 28552237
மின்னஞ்சல் :
va_mu_sethuraman@yahoo.com |
கடந்த வெள்ளிக்கிழமை (16.11.2007)
அன்று தம்மாம் ஹோட்டலில் ''நீதிபதி
சச்சார் அவர்களுடன் ஓர் சந்திப்பு''
என்ற நிகழ்ச்சி தமிழகத்தை சார்ந்த
ரர்ழ்ப்க் தங்ல். காஜா, நாஞ்சில்
கபீர் மற்றும் இந்தியாவின் பிற மாநில
பிரமுகர்களால் (
உண்ஹள்ல்ர்ழ்ஹ) ஏற்பாடு
செய்யப் பட்டிருந்தது.
அழைப்பின் பெயரில் தமுமுகவின்
பிரதிநிதிகளாக சகோ.காயல் இஸ்மாயில்,
சகோ.அதிரை நஸ்ருத்தீன், பொறியாளர்
ஜக்கரிய்யா மற்றும் சகோ.காயல் சதக்கத்
துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருந்திரளாக கூடிய வெளிநாடுகளில்
வாழும் முஸ்லிம்களிடம், இந்திய
முஸ்லிம்களின் அவல நிலையை நீதிபதி சச்சார்
அவர்கள் விவரிக்கும் போது அனைவரும்
கவலையுடன் கவனித்தனர்.
இந்தியாவில் முஸ்லிம்கள் பிற
சமுதாயத்தை விட பின்தங்கி இருப்பதற்கு
காரணம் இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியை
கைவிட்டதனால் தான் என்று கூறினார். தமுமுக
சகோதரர்களின் இந்திய அளவில் முஸ்லிம்
களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, சச்சார்
கமிட்டியின் அறிக்கை அமலாக்கம் பற்றிய இரு
கேள்விகளுக்கும், தமிழகத்தை சார்ந்த
சகோ.அனீஸ் அவர்கள் கேட்ட தமிழகத்தின் 3.5
சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான கேள்
விக்கும் விரிவான விளக்கம் அளித்தார்.
கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகள் சச்சார்
கமிட்டி பரிந்துரைகளின் அமலாக்கத்தை
பற்றியே அமைந்திருந்தது. அங்கு
கூடியிருந்த முஸ்லிம்களின்
எதிர்பார்ப்பினை வெளிப் படுத்தியது.
முத்தாய்ப்பாக சச்சார் கமிட்டியின்
பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தும்
என்று நம்புவதாகவும், ஆனால் முஸ்லிம்
சமுதாய முன்னேற்றத்திற்கும், முஸ்லிம்
சமுதாயத்தின் பிரமுகர்களே முன் முயற்சி
செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முஸ்லிம் சமுதாயம் முயற்சி செய்யுமா?
இப்னு சாகிப் -
தம்மாம்
|
|
இளைய
தலைமுறையினரைக் கவரும் ஷேக் முஹம்மத்
இணையத்தளம் ஐக்கிய அரபு
அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், துபாய்
ஆட்சியாளர் என முப்பெரும் பொறுப்புகளை வகித்து
வருபவர் மேன்மை மிகு ஷேக் முஹம்மத் பின்
ராஷித் அல் மக்தூம்.
புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள
www.sheikhmohammed.co.ae எனும்
இணையத்தளம் இளைய தலைமுறையினரை பெருமளவு
கவர்ந்துள்ளது.
இவ்விணையத்தளத்தில் ஷேக் முஹம்மத் அவர்கள்
கலந்து கொண்ட செய்திகள்,
சிறப்புக்குறிப்புகள், வரலாறு, கவிதை,
படிப்பு, விருதுகள், வரலாறு, சுற்றுலா, ஊடகம்,
வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள்
காணப்படுகின்றன.
இணையத்தளத்தை பார்வையிடுவோர் தங்களது
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஷேக் முஹம்மத் சிறந்த ஆட்சியாளராக
மட்டுமல்லாது ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவரது
கவிதைகளும் இவ்விணையத்தளத்தில் காணப்படுகின்றன |
முந்தைய பகுதிகள்
|