முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

 

 

2 சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்: கலாம் உருக்கம்


புதுதில்லி, ஜூலை 20: ""உன்னதமான 5 ஆண்டுகளை கழித்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து 25-ம் தேதி வெளியேறுகிறேன். எனக்கு உடைமை என இருப்பது 2 சூட்கேஸ்கள். அந்த 2 சிறிய சூட்கேஸ்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறுவேன்'' என்று வியாழக்கிழமை கூறியுள்ளார் அப்துல் கலாம்.

இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய கலாம், 2 சூட்கேஸ்களுடன் எனக்குச் சொந்தமான ஏராளமான புத்தகங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் (75) கலந்து கொள்ளும் கடைசிப் பொதுநிகழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் தனது ஆலோசனைகளை வழங்கத் தவறவில்லை.

""உள்நோக்கத்துடன் வழங்கப்படும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; குடும்பங்களை ஒழுக்க மதிப்பீடுகளுடனும், நல்ல குணங்களுடனும் உருவாக்குங்கள்'' என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார் கலாம்.

எந்தப் பரிசுப் பொருள்களையும் ஏற்கக் கூடாது என தனது தந்தை கற்றுக் கொடுத்துள்ளதை குறிப்பிட்ட கலாம், முந்தைய நாள்கூட நன்கு பரிச்சயமான இருவர் பரிசாகத் தந்த 2 பேனாக்களை வருத்தத்துடன் திருப்பிக் கொடுத்துவிட்டதை வியாழக்கிழமை குறிப்பிட்டார்.

"மனுஸ்மிருதி' என்ற பழமையான இந்து நூலின்படி, பரிசுப் பொருள்களை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் எனக் குறிப்பிட்டார் கலாம்.

பாரிசில் பாரதியார் 125வது ஆண்டு விழா:

பங்கேற்குமாறு கருணாநிதிக்கு அழைப்பு பாரிஸ்: பாரதியார் 125வது ஆண்டு விழா பாரிஸ் நகரில் நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, இதற்கான அழைப்பை இந்திய ஒருங்கிணைப்பாளர் பாரிஸ் ஜமால் வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்குமாறு இந்திய அமைச்சர்கள், புதுச்சேரி முதல்வர், தமிழக அமைச்சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழாவை ஒட்டி பிரான்ஸ் மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழாக் குழு ப.தசரதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துணைத் தலைவராக ஆனந்தன், செயலாளராக பாரிஸ் பார்த்தசாரதி, துணைச் செயலாளராக அண்ணாமலை பாஸ்கர், பொருளாளராக ஐ.பாண்டுரங்கன், துணைப் பொருளாளர்களாக பாலகிருஷ்ணன், சி.கோகுலன், மக்கள் தொடர்பு பொறுப்பாளர்களாக கே.பாரதிதாசன், முத்துக்குமரன், இந்திய ஒருங்கிணைப்பாளராக பாரிஸ் ஜமால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விழாவின்போது வெளியிடப்பட இருக்கும் மலரில் வெளியிடுவதற்காக பாரதியாரைப் பற்றிய கவிதை, கதை, கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத் தொகை, கேடயம், சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் பங்கேற்க விரும்புவோர், பாரதியார் படைத்துள்ள கவிதை, கட்டுரை, கதைகளில் உள்ள கருத்துக்ளை மையமாக கொண்டு கவிதை, கட்டுரை, கதைகளைச் சொந்தமாக எழுதி அனுப்ப வேண்டும். பாரதியார் வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக எழுத வேண்டாம்.

தமிழ், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் படைப்புகளை அனுப்பலாம். கவிதைகள் 20 முதல் 40 வரிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபு கவிதை மற்றும் புதுக் கவிதைகளை அனுப்பலாம். கட்டுரைகள் ஏ4 அளவில் கையெழுத்து நகல் 10 பக்கங்களுக்கு மிகாமலும் தட்டச்சு நகல் 6 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தாளின் ஒரு பக்கத்தில்தான் எழுத வேண்டும். படைப்புகளை தபால் அஞ்சல் அல்லது மின் அஞ்சல் (இமெயில்) வழியாக அனுப்பலாம். படைப்புகளுக்கு முதல்பரிசாக 3 ஆயிரம் ரூபாய், சான்றிதழ், கேடயம்; 2வது பரிசாக 2 ஆயிரம் ரூபாய், சான்றிதழ், கேடயம்; 3வது பரிசாக ஆயிரம் ரூபாய், சான்றிதழ், கேடயம்; ஊக்கப்பரிசுகளாக 5 பேருக்கு தலா 500 ரூபாய், சான்றிதழ், கேடயம் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற விரும்புவபர்கள் தங்கள் படைப்புகளை 15807க்குள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பிரான்ஸ் முகவரி:

B.Dassaradane, Hall/A, 35 Rue Savier, 92240 Malakoff, France. e-mail: dassaradan@orange.fr  and bharathidasan@free.fr 
 

இந்திய முகவரி:

பாரிஸ் ஜமால், 4, முதல் தெரு, டீச்சர்ஸ் காலனி, வேட்டுவன்கேணி, சென்னை 600 041, தமிழ்நாடு.
e-mail: pairsjamal@vsnl.com  )

மாணவனுக்கு உதவி


கீழக்கரை : கீழக்கரை ஏர்வாடி அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழை மாணவன் முகம்மது முபாரக். அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவரது படிப்புக்கான முழு செலவையும் பல அறக்கட்டளைகள் ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளன.

துபாயில் நூல் வெளியீட்டு விழா


துபாய் ETA அஸ்கான் சமுதாயக்கூடத்தில் 04.07.2007 புதன்கிழமை மாலை டாக்டர் தைக்கா ஷ¤ஐபு ஆலிம் அவர்களால் தொகுக்கப்பட்ட அரிய துஆக்கள் நிறைந்த அற்புத பொக்கிஷமான 'அல்முன்ஜியாத்' நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


நூல் வெளியீட்டு விழாவிற்கு ETA அஸ்கான் குழுமங்களின் இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் எம் ரஹ்மான் தலைமை வகித்தார். துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், 'பிரவாஸி பாரதிய சம்மன்' எனும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சிறப்பு விருதைப் பெற்ற ETA அஸ்கான் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யிது எம் ஸலாஹ¤த்தீன் 'அல்முன்ஜியாத்' நூலை வெளியிட முதல் பிரதியை அல்ஹாஜ் நூருல் ஹக் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஸ்கை குரூப் இயக்குநர் செய்யிது அப்துல் காதிர், ஆலிம் செல்வர் அஹ்மது ஷம்சுதீன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் தைக்கா ஷ¤ஐபு ஆலிம் இந்தியாவின் தலைசிறந்த அரபி மொழி அறிஞர் எனும் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முஹம்மது மஃரூப் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்த்தினார். துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

கீழக்கரைபெண்கள் கல்லூரி பேரவை நிர்வாகிகள் தேர்வு


கீழக்கரை : கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி பேரவை தலைவராக ஷகீன் சுலைகா, உதவித் தலைவராக காதிரா முஸ்பிகா, பொது செயலாளராக பெனாசிர், இணை செயலாளராக சித்தி, ஜூனைதா நஸ்ரின், விளையாட்டு துறை செயலாளராக சிராஜூன் முனிரா, என்.எஸ்.எஸ். ,செயலாளராக சசிரேகா, ரோட்ராக்ட் செயலராக சாஜிதாபீவி, சிஐடி செயலாளராக ரசூல் பீவி, இளைஞர் நலத்துறை செயலராக சிந்துஜா, போக்குவரத்து துறை செயலாளராக விஜயலட்சுமி, வழிகாட்டி செயலராக ஹபீபத்து நிஸ்மியா, வேலை வாய்ப்புத் துறை செயலாளராக ஆயிஷா நாச்சியா, உணவக சூப்பர்வைசராக மஞ்சுளா மற்றும் டியூட்டர்களாக ரகுமத்து ராஜாத்தி, செல்வநாயகி, பாத்திமா, ஒருங்கிணைப்பாளராக ஜானகி, வார்டனாக முதல்வர் சித்தி சுமையா தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசியா மதச்சார்பற்ற நாடு அல்ல': துணைப் பிரதமர்


கோலாலம்பூர், ஜூலை 17: மலேசியா மதச்சார்பற்ற நாடு அல்ல, இஸ்லாமிய நாடு என அந்நாட்டு துணைப் பிரதமர் நஜீப் ரசாக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாமிய நிறுவனம் சார்பில் "ஒருங்கிணைந்த உலகில் இஸ்லாமிய நாடுகளின் பங்கு' என்ற சர்வதேச மாநாடு செவ்வாய்க்கிழமை துவங்கியது.

இரண்டு நாள்கள் நடக்கும் இம் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசிய துணைப் பிரதமர் நஜீப் ரசாக் செய்தியாளர்களிடம் கூறியது:

மலேசிய நாடு மதச்சார்பின்மை கொள்கையுடன் இணைந்திருக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படை கருத்துக்களின் படிதான் வழி நடத்தப்படுகிறது.

மலேசியா இஸ்லாமிய நாடு. இது எங்கள் நாட்டு அரசியல் சாசனத்தில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடு என்பதற்காக நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மதிக்க மாட்டோம் என்பது பொருள் அல்ல.

முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும், நாட்டில் தங்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் உடையவர்களாக இருப்பார்கள்.

மதச்சார்பின்மை என்பது, இஸ்லாமிய கொள்கைகளை ஒதுக்கி வைப்பது என்கிறது மேற்கத்திய வரைமுறை. நாங்கள் அந்த நிலையில் இல்லை. இஸ்லாமிய கொள்கையுடன் தான் உள்ளோம் என்றார் அவர்.

மாநாட்டில் மலேசிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அகமது சார்ஜி அப்துல் ஹமிது, இயக்குநர் டாக்டர் செய்யது அலி தாபீக் அல்-அட்டாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

அமீரகத்தில் இந்திய முட்டைகள் இறக்குமதிக்கான தடை நீக்கம்


ஐக்கிய அரபு அமீரகம் ( United Arab Emirates ) பறவைக் காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய முட்டைகள் உள்ளிட்ட சில நாடுகளின் முட்டைகளை இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது.

தற்பொழுது உலக விலங்கின நல அமைப்பு இந்திய முட்டைகளால் எவ்வித பாதிப்பும் இல்லை என சான்று வழங்கியதன் காரணமாக அமீரக சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்த்துறை அமைச்சர் டாக்டர் முஹம்மது சயீத் அல் கிண்டி இந்திய முட்டைகள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டுள்ளார்.
 

Indian missions to have 24-hr helpline for maids

DUBAI - In a bid to tackle the issues of expatriate women, especially the housemaids employed in the Gulf countries, Indian Government proposes will set up a 24-hour helpline in all its embassies and consulates in the region, a top official from the Ministry of Overseas Indian Affairs (MOIA) disclosed yesterday.

The move follows an increase in number of complaints from Indian women working in the region about alleged exploitation and ill-treatment by the employers.

Speaking to Khaleej Times from the Indian capital over telephone, Nirmal Singh, secretary of MOIA said the ministry was currently finalising the details of the new facility which is expected to be launched on September 1. "We are looking into all the related spects now. The number will be operational 24 hours in all our embassies in Gulf States and preparations are underway," Singh said. Meanwhile, Venu Rajamony, Consul-General of India in Dubai, said the consulate had not received any official letters in this regard so far.

"We already have a hot-line working 24 hours. An Indian national can call on 050- 9433111 to avail himself or herself of any help. Whenever we receive complaints on this number, an official from the consulate contacts the person and helps him/her iron out the problem," said Rajamony.
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com