முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
இஸ்லாமிய வங்கி : துவக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கோரிக்கைஅனுமதி அளிக்க ரிசர்வ் வங்கி கடும் தயக்கம் (நமது சிறப்பு நிருபர்)


வட்டி என்ற வார்த்தையே இல்லாமல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவில் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், இதற்கு அனுமதி அளிப்பதில் ரிசர்வ் வங்கி தயக்கம் காட்டி வருகிறது.

முஸ்லிம் மக்கள் பணத்தை முதலீடு செய்து வட்டி பெறுவதும், வட்டிக் கொடுத்து கடன் பெறுவதும் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் மக்களின் பணத்தை முதலீடு செய்வதில் வெளிப்படையான போக்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே வட்டி கொடுப்பது, வாங்குவது ஆகிய நடவடிக்கைகள் இல்லாமல் இஸ்லாமிய வங்கி ஒன்றை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் இருந்து வருகிறது. பிரிட்டனில் 2004ம் ஆண்டு "இஸ்லாமிக் பாங்க் ஆப் இந்தியா' என்ற வங்கி துவக்கப்பட்டது. பிரிட்டனின் ரிசர்வ் வங்கி இதற்கு அனுமதி வழங்கியது. இந்த வங்கிக்கு தற்போது எட்டு கிளைகள் உள்ளன. துவக்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு சேவை அளித்து வந்த இந்த வங்கி தற்போது பிற மதத்தை சேர்ந்த மக்களுக்கும் சேவை அளிக்க தொடங்கியுள்ளது.


மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சில ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியா சென்று இருந்தார். வளைகுடா நாடுகளை சேர்ந்த நிதி இந்தியாவுக்கு அதிகளவில் வர வேண்டும் என்றால் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனை அப்போது அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய 2005ம் ஆண்டு ஜூலையில் ஆனந்த் சர்மா தலைமையில் ரிசர்வ் வங்கியில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இஸ்லாமிய வங்கி துவக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக வலுத்து வருகிறது. ராஜ்யசபா துணை தலைவர் ரகுமான் கான் தலைமையில் ஒரு குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது தொடர்பாக ஒரு மனுவையும் அளித்துள்ளனர். மலேசியாவில் இது போன்ற ஒரு வங்கி அமைப்பு செயல் பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றார் போல் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு முஸ்லிம் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம் மக்கள் ஹஜ் பயணம் மேற் கொள்ள அரசு சார்பில் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக மலேசியாவை போல் இந்தியாவிலும் இஸ்லாமிய வங்கியை துவக்கினால், அதில் கிடைக்கும் தொகையை கொண்டு முஸ்லிம் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வர். அரசு செலவினமும் குறையும் என்று ரகுமான் கான் தெரிவித்துள்ளார். பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய வங்கி அமைப்பு போன்ற ஒன்றை துவக்கி வருகின்றன.

ஆனால், இந்த திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் ஒப்புதல் வழங்க தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. நாட்டின் வங்கி சட்டம் மற்றும் பிற சட்டங்களில் மாற்றம் செய்யப் பட்டால் தான் இஸ்லாமிய வங்கி துவக்க அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
http://www.dinamalar.com/2007jan28/general_ind2.asp
துபை சர்வதேச மாரத்தான் போட்டியில் ETA-ஜீனத் நிறுவன ஊழியர் பங்கேற்பு பதக்கம் பெற்றார்


துபையில் கடந்த 12.01.2007 அன்று ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் ஆதரவில் மாரத்தான் ஓட்டம் ( 42.195 கி மீ ) நடைபெற்றது. இப்போட்டியில் துபை ETA ஜீனத் குரூப் ஆப் கம்பெனியில் பணிபுரிந்து வரும் காயல்பட்டினம் இளைஞர் யு. அஹமது சுலைமான் ( வயது 30 ) கலந்து கொண்டு 42.195 கிலோ மீட்டர் தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் கடந்து பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் பெற்றார்.

இம்மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் உள்பட 2700 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை கடந்த ஏழு இந்தியர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பி ஏ பொருளாதாரம் பயின்றார். பள்ளியில் பயிலும் போதே மாநில அளவிலான கால்பந்து அணியில் இடம் பெற்றார். இது மட்டுமல்லாது பள்ளி மற்றும் கல்லூரி அளவில் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார்.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட ETA ஜீனத் நிறுவனம் உதவியது. விரைவில் நடைபெற இருக்கும் ராசல் கைமா மாரத்தான் போட்டியிலும் பங்கேற்க இருக்கிறார்.

தொடர்ந்து தனக்கு இப்போட்டிகளில் கலந்து கொள்ள உதவி கிடைப்பின் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று சாதனை படைக்க உதவியாய் இருக்கும் என்கிறார் அஹமது சுலைமான்.

இந்திய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து வரும் அஹமது சுலைமானை நாமும் உற்சாகப்படுத்தி இதுபோல் இன்னும் பல போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துவோம். இவரது மின்னஞ்சல் முகவரி : ad_sulaiman4000@yahoo.com
 
சென்னையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய இலக்கியக் கழகம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஏழாம் மாநாட்டை எதிர்வரும் மே மாதம் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

இம்மாநாட்டில் பல்வேறுதுறைகளில் ஆய்வரங்கம் நிகழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு மலரும் தயாராகிறது. அதற்காக கதை, கவிதை, கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இஸ்லாமிய இலக்கியத்தில் முனைவர், ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்டம் பெற்றோர்க்கு பாராட்டு அளிக்கப்படும். பட்டம் பெற்றோர் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிப்பைச் செய்தோரைப் பற்றிய விவரங்களைத தரும் 'யார் எவர்?' நூலும் தயாராகிறது. இந்நூலில் இடம் பெற விரும்பும் இலக்கிய அன்பர்கள், தங்கள் பெயர், பிறந்த நாள், ஊர், கல்வி, பணி, ஆக்கங்கள் ஆகிய விவரங்களோடு, புகைப்டத்தையும் அனுப்ப வேண்டுகிறோம்.

தொடர்பு முகவரி

முனைவர் ஹ.மு. நத்தர்சா

(துணைப் பொதுச்செயலாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்)

தமிழ்த்துறை, புதுக்கல்லூரி,

இராயப்பேட்டை - சென்னை 600 014

அலைபேசி - 944176646

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com