بسم الله الرحمن الرحيم

KAYAL WELFARE ASSOCIATION
(A Dedicated House of Charity for the People of Kayalpatnam)

Jeddah,Makkah,Madinah,Yanbu,Tabuk & Taif  House Of operation: Jeddah,Saudi Arabia
Web site: http://www.geocities.com/kwajeddah E-mail: kwajeddah@hotmail.com

காயல் நற்பனி மன்றத்தின் 8வது பொதுக்குழு கூட்டம் நோன்புப்பெருநாள் சந்திப்பு கூட்டமும் ஒன்று சேர்ந்து 11 நவம்பர் 2005, ஷரபியாவில் ரிலாக்ஸ் ஹோட்டலில் மாலை 5.00 மணியளவில் துவங்கியது. அதில் அநேகமான காயல்நகர மக்கள் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்டத்தின் போது எல்லோராலும் ஏகோபித்த கருத்துக்கள்படி எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன:-

  1. நமதூர் பகுதி மக்களுக்கு சுகாதாரத்துடன் கூடிய மருத்துவ சேவையாற்ற துவக்கப்பட்டு செயலாற்றி வரும் கே.எம்.டி. மருத்துவமணை பணிகள் சிறக்க நமது மன்றம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. அதன் மக்கள் பணிகள் மேலும் வலுப்படுத்திடும் நோக்கில் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப நிர்வாகிகள் செயலாற்ற வேண்டுமென கே.எம்.டி. நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு மக்கள் பிரதிநிதிகளுடன் அடிக்கடி கலந்தாலோசனை நடத்திடவும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது. மேலும் கே.எம்.டி. மருத்துவமணையில் மகப்பேறு நிபுனர் (DGO) நிரந்தரமாக நியமித்திட இக்கூட்டம் வேண்டிக்கொள்கின்றது.
     

  2. கே.எம்.டி. மருத்துவ சேவை மேலும் சிறப்போடு நடந்திட நமது மன்றத்தின் சார்பில் உறுப்பினர்களிடம் மற்றும் சமுதாய புரவலர்களிடம் நன்கொடை பெற்று இம்மருத்துவமணையில் பெரிய அளவிலான திட்டம் ஒன்றிர்க்கு உதவி செய்வதென முடிவுசெய்யப்பட்டது. இம்மெகா திட்டம் முழு வெற்றி பெற உறுப்பினர்கள் தாராளமாக நன்கொடை வழங்க இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. இத்திட்டதிற்கான பணிகளாற்றிட ஒருங்கிணைப்புக்குழு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அமைப்பாளர் : பிரபு. ஜெய்லானி, உறுப்பினர்கள்: மக்கா-ஒய்.எம். சாலிஹ், மதினா-கே.எம்.ஐ. மூஸா நெய்னா, யான்பு-பொறியாளர் நெய்னா முஹம்மது, ஜித்தா-எம்.எம். மொகுதூம், தபூக்- நளீர். இத்திட்டத்தில் மன்றத்தின் நிர்வாகிகள் Ex-Officio உறுப்பினர்களாக செயல்படுவர். இத்திட்டப்பணிகளை 5மாத காலத்திற்குள் முடிக்க முற்சிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
     

  3. நமதூரில் பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திடும் மாணவ-மாணவியரின் நிலைமையை ஊரின் பொதுநல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுடன் நமது மன்றத்தின் சார்பில் கருத்தாய்வு நடத்த வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது. அக்கருத்தாய்வின் அடிப்படையில் KAYAL LITERACY VISION -2010  என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தி இதன் மூலம் 2010 வருடத்திற்குள் ஊரில் அனைவரும் எழுத-படிக்க தெரிந்தவர்களாக, உயர் கல்வி பயின்றவர்களாக்க நாம் முயற்சி செய்வதென்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆரம்பப்பணிகள்;; புத்தாண்டு 2006-துவக்கத்தில் ஊரில் மேற்கொள்ள மன்றத்தின் செயலாளர். கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கருக்கு இக்கூட்டம் அனுமதி வழங்குகின்றது.
     

  4. துளிர் சிறப்புப்பள்ளியிலன் வளர்ச்சிப் பணிகளுக்கு நம்மன்றத்தின் சார்பாக செய்யப்பபட்ட சிறிய முயற்சி மிகப்பெரும் வெற்றி அடைந்ததற்கு காரணமாய் இருந்த நம்மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
     

  5. நமது தாயகம் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிமகள்; அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியவர்களாக வாழந்து வருகின்றனர், அனைத்து மக்களும் சமநிலையடைந்து உரிமைபெற்று வாழ்ந்தால் சனநாயகத்தின் நெறிமுறைகள் பேனப்படுவதை உலகரிய செய்யமுடியும். இந்திய திருநாட்டின் முஸ்லிம் சிறுபான்மையினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும், தொழிற்கல்வி நியைங்களிலும் உறிய முறையில் இட ஒதுக்கீடு செய்தளித்து சமூக நீதியை நிலைநிறுத்துவதற்க்கு மத்திய-மாநில அரசுகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அனுப்ப வலியுறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
     

www.Chittarkottai.com