கோட்டகுப்பம் துபை ஜமாஅத் மாதாந்திர கூட்டம் கடந்த
16.12.2005 வெள்ளிக்கிழமை மாலை தலைவர் மெளலவி
வி. ஏ முஹம்மது யஹ்யா மன்பஈ தலைமையில்
துபை ஈமான் அலுவலகத்தில் நடைபெற்றது. செயலாளர்
ஒய். ரஹ்மத்துல்லாஹ் உறுப்பினர்கள்
அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மெளலவி வி ஏ முஹம்மது யஹ்யா மன்பஈ
குர்பானி பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி குர்பானி
கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். மேலும்
அமீரகத்தில் வாழ்ந்து வரும் கோட்டக்குப்பம் ஜமாஅத்தார்கள் ஜமாஅத்தின்
செயல்பாடுகள் சிறப்புற அமைந்து வருவதற்கு ஒத்துழைப்பு கொடுத்து
வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் மேலும் சிறப்படைய தொடர்ந்து
ஆதரவளிக்க கேட்டுக் கொண்டார். மேலும் சமீபத்தில் பெய்த மழையால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோட்டக்குப்பம்
ஃபைவ்
ஸ்டார் நற்பணி மன்றத்தின் ஒத்துழைப்போடு நூறு
குடும்பத்தினருக்கு உதவிகள் செய்ததை சுட்டிக்காட்டினார்.
கூட்டத்தில் விரைவில் வட்டியில்லா கடன்
திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது, கோட்டக்குப்பம் ரஹ்மத்
நகர் பகுதி ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு நிதி
உதவி அளித்தல், ஜமாஅத் சார்பில் விரைவில் கட்டப்பட இருக்கும்
‘மஸ்ஜிதே மஹ்மூர்’ பள்ளியின் பணிகளை
துவங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்
முதற்கட்டமாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தற்காலிகமாக
கீற்று கொட்டகை அமைத்து தொழுகை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
துணைத்தலைவர் ஏ முஹம்மது இஸ்மாயில்
நன்றியுரை நிகழ்த்தினார். மெளலவி முஹம்மது யஹ்யா
துஆவிற்குப் பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )