அமீரகப் பிரமுகர் வக்ப் செய்த மதரஸா திறப்பு விழா


அமீரகத்தில் உள்ள கிளீனிங் கம்பெனிகளுள் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது பவர் கிளீனிங் கம்பெனி. இதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் ஜனாப் ஒய் டி ஜாஹிர் ஹ¤சைன்.

இராமநாதபுரம் ஜில்லா வழுதூரைச் சேர்ந்த ஜனாப் ஜாஹிஹ் ஹ¤சைன் வக்ப் செய்த கொழும்பு ஆலிம் நினைவு பெண்கள் மதரஸா திறப்பு விழா 05.02.2006 ஞாயிற்றுக்கிழமை காலை வழுதூரில் சிறப்புற நடைபெற்றது.

வழுதூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வி எஸ் எம் அமானுல்லாஹ் விழாவிற்கு தலைமை வகித்தார். ரஹிமுல்லாஹ், அன்சாரி மரைக்காயர், துல்கருணை, முஹம்மது அலி மற்றும் எம் ஜமால் முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

வழுதூர் ஜும்ஆ பள்ளி இமாம் மெளலவி எம் திவான் முஹம்மது ஆலிம் ஹமீதி இறைவசனங்களை ஓதினார். பெண்கள் மதரஸாவை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஏ அன்வர் ராஜா எம் ஏ திறந்து வைத்தார்.

முன்னாள் எம்பி எம் ஏ காதர், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அல்ஹாஜ் எம் எஸ் ஏ ஷாஜஹான், மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மெளலவி G M ஷாகுல் ஹமீது , நாகப்பட்டிணம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ முஹம்மது தாவூது அன்வாரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் ஓ எம் அப்துல் காதிர் பாகவி சிறப்புரை நிகழ்த்தினார்.

வழுதூர் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் ஏ கமால் முஸ்தபா நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை மெளலவி எம் அப்துல் குத்தூஸ் மன்பஈ தொகுத்து வழங்கினார்.

 தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com