|
ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக கண்காட்சி |
|

அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகராய் விளங்கி வரும் ஷார்ஜாவில் சர்வதேச
புத்தகக் கண்காட்சி எக்ஸ்போ செண்டரில் கடந்த டிசம்பர் 06 ந்தேதி முதல்
15 ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் உலகெங்கிலும் உள்ள சர்வதேச புத்தக நிறுவனங்கள் பல பங்கேற்றன.
இதில் ஆங்கிலம், அரபி, தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு
மொழிகளில் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து கேரளாவைச்
சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றிருப்பது அவர்களது புத்தகம்
வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய புத்தக நிறுவனம் கேரளாவைச் சேர்ந்த
இஸ்லாமிக் பப்ளிஷிங் நிறுவனத்துடன் இணைந்து பங்கேற்றதன் மூலம் தமிழ்
நூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

மேலைநாட்டு புத்தக நிறுவனங்கள் இக்கண்காட்சியை சரியான முறையில்
பயன்படுத்தி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )