சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையித் இபுராஹிம் அவர்கள் ஹிமானா சையித் என்ற பெயரில் உலகத்தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார்கள். 1964ல் மறுமலர்ச்சி வார இதழ் மூலம் தொடங்கிய தமது இலக்கியப் பணி இன்று பல பத்திரிக்ககைளில் கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை என்று தொடர்ந்து செல்கின்றது.

அவர்கள் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 1000 கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். பல பல்கலைக்கழகங்களில் பலர் அவரது ஆக்கங்களில் எம்.பில் பட்டங்கள் பெற்றுள்ளனர்  அவர்களது ஆக்கங்களில் ருசி என்ற சிறுகதைத் தொகுப்பு கேரள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சன்முகவனம் இவர்களது நாவல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கோடுகள் கோலங்கள் என்ற நாவல் கேரள மேல்நிலைப் பள்ளி பாடநூலில் சேர்க்கப்பட்டள்ளது.

அவர்களது சிறுகதைகளை நமது தளத்தில் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ்  சிறிது சிறிதாக வெளியிட உள்ளோம்.


தொடுவானம் தொகுப்பு

  1. தொடுவானம்

  2. பந்தா

  3. இறை நாட்டம்

  4. வாழ்க்கையே விளையாட்டாய்...

  5. மருமகள் அமைவதெல்லாம்...

  6. பொய் முகங்கள்

  7. வலி

  8. உல்லாசப் பயணம்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

 
 

Chittarkottai.com