Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2017
S M T W T F S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 449 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹாஜி சீ. தஸ்தகீர் அவர்கள் வபாத்!

12985497_10153705837258772_2780771964482131622_nசீயன்னா தானா அல்லது  எஸ் டி என்று அழைக்கப்படும் சித்தார் கோட்டை முகமதியா பள்ளிகளின் தலைவரும் கொடை வள்ளல் அல்ஹாஜ் தஸ்தகீர் அவர்கள் ஏப்ரல் 12ந் தேதி  மாலை வபாத்தாகி விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்) எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்!

அவர்கள் சித்தார்கோட்டை மற்றுமன்றி இராமநாதபுரம் மாவட்டம் முழுமையாக அவர்களது கொடையின் மூலம் ஓரளவு பெயர் பெற்றவர்கள். சித்தார்கோட்டையில் பள்ளி வாசல்,மதரஸா,  பள்ளிக்கூடம் மற்றும் உள்ள காரியங்களில் பண உதவி தேவைப்படும் போது அவர்களின் பங்கு எப்போதும் கணிசமானதாகவே இருந்துள்ளது. அது தவிர சித்தார் கோட்டையின் வளர்ச்சிக்கு பல வகைகளிலும் பாடுவட்டு வந்தார்கள்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர்கள் தனது சொந்த உழைப்பின் மூலம் உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.  அவர்களை விட இளையவர்கள் பலர்  முதுமையின் காரணமாக வீட்டில் முடங்கி விட்டனர். ஓடி ஆடி எல்லா நிலைகளிலும் உழைத்து வந்ததால் நல்ல உடல் நிலையுடனே வாழ்ந்தார்கள். மாஷா அல்லாஹ் இவர்களோ வாழ்வின் கடைசி வரை ஊருக்காக பாடுபட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியைக் கொடுப்பானாக!

அவர்களை இழந்து கவலையில் இருக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொருமையைத் தருவானாக!