- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சித்தார்கோட்டை ஓர் அறிமுகம்

புகழ்பெற்ற சரித்திர நாயகர்களையும் வள்ளல் பெருமக்ளளையும் சாதனைச் சிற்பிகளையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம் மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்றூர் தான் சித்தார்கோட்டை. இது சிற்றூராகக் காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களையும் வள்ளல் பெருமக்களையும், அறிவார்ந்த எழுத்தாளர்களையும் சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார்கோட்டை. [1]

சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. சித்தார்கோட்டை பஞ்யாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.

சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளனர்

Online Google Map



View Larger Map [2]


[3]