- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நுழைவாயில் – ஹிமானா

[1]

சித்தார்ர் கோட்டை வலைத் தளத்தின் மூலம் உங்களைச் சந்திப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. காரணம்:

எத்தனையோ பத்திரிக்கைகளில் கடந்த 20 ஆன்டுகளாக தொடர்ந்து எழுதி வந்தாலும், இதில் எழுதுவதில் எனக்குள்ள தனி மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை.

புகழனைத்தும் இறைவனுக்கே!

பத்திரிகை படிக்கும் வாசகர்களுக்கும், வலைத்தளங்களில்  படிக்கும் வாசகர்களுக்கும் நிறைய வித்தியாசம் உன்டு. நீங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிக்கிடப்பவர்கள். வேகமான இந்த உலகத்தின் ஓட்டத்தோடு விரைந்து ஒடிக்கொன்டிருப்பவர்கள். பெரும் பகுதியினர் குடும்பங்களைப் பிரிந்து வாழும் “சபுராளிகள்” .வேலைச் சுமையின் அழுத்தம் ஒரு புறம் – கிடைக்கும் ஓய்வு நேரத்தின் நெருக்கடியை ஆக்கிரமித்துக் கொள்ள எத்தனையோ கவனச் சிதறல்கள்! ஈர்ப்புகள்!

இருந்தும் அறிவுத் தேடலின் உந்துதலில் வலைப் பக்கங்களைத் தேடுகிறீர்கள்.. அது அசாதாரனமான விசயம்! உங்களில் பலரது வாழ்வியல் தளங்களை- களங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உங்களோடு உண்டிருக்கிறேன். உறங்கியிருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சௌதி அரபியா என அரபு நாடுகளில் பரவலாகப் பயனித்து உங்களோடு உறவாடியிருக்கிறேன். குறிப்பாக, 1994 தொடங்கி, தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற நாடுகள் பலவற்றுக்கும் சென்று, பல்வேறு மட்டங்களில் வாழும் உங்களது வாழ்வியல் பிரச்சினைகளை ஆய்வு செய்து சமுதாயத்திடம் சமர்ப்பித்திருக்கிறேன்.

2002-இல் “புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முஸ்லிம்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங்க் நாடுகளில் நான் ஆற்றிய உரைகளின் பிண்ணனியில் இப்பொது நர்கீஸில் வெளி வந்து கொண்டிருக்கும் “வெப்ப மூச்சுகள்”  தொடர்கதை 38 அத்தியாயங்கலளத் தான்டிச் சென்று கொன்டிருக்கிறது.

அதனால், உங்களது தாபங்கள், தவிப்புகள், அதற்குள்ளும் சமுதாய அக்கறையோடும், அறிவுத்தேடலோடும் நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் தனித் தன்மையை நான் நன்கு அறிவேன். உங்கள் தேவை என்ன என்பதையும் அதிகமாகவே தெரிந்து வைத்துள்ளவன்.

எனவே உங்கள் நேரத்தை நான் வீணடிக்க மாட்டேன். இறையருளால் இன்னும் சில நாட்களில் தொடங்கி, அடிக்கடி நாம் இந்தப் பகுதியில் இனி சந்திப்போம்.

புத்தாண்டு, பொங்கல், ஈத் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஹிமானா சையத்