- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பூகோளத்திற்கு நாடி பரிசோதனை

மனிதனின் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? என்பதை அறிய பல்வேறு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதயம் நன்றாக உள்ளதா? என்பதை அறிய இ.சி.ஜி மற்றும் மூளை மற்றும் பிற நரம்புகள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை அறிய இ.ஈ.ஜி மற்றும் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மனிதனுக்கு பல் வேறு பரிசோதனைகள் செய்யப்படுவது போல பூமிக்கும் அதன் `நாடி’த்துடிப்பு பற்றிய பரிசோதனை செய்யமுடியும்.

[1]குளிர், கோடை, மழை காலம் இவைகளை பற்றி முன் அறிவிப்பு, மலேரியா தாக்கக்கூடிய இடம்-காலம், வைரஸ் நோய் பரவுவதற்கு சாத்தியமாகும் காரணிகள் போன்றவை பற்றி முன்பே அறிய முடியும். இந்த பணிக்காக மின் மற்றும் மின்னணு பொறியியல் வல்லுனர்கள் நிறுவனம் (IEEE) ஒரு நூதன கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனம் 60 நாடுகளின் கூட்டமைப்பில், ஆதரவில் உலகளாவிய புவி கண்காணிப்பு வலையமைப்பை நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் எல்லா வகையான மாற்றங்களையும் ஓரிடத்திலேயே அறிந்து கொள்ள முடியும். GEOSS (Global Earth observation System of Systems) என்ற உலக புவி கண்காணிப்பு அமைப்பு உலகெங்கிலும் நிலவும் சீதோஷ்ணநிலை, தட்பவெப்ப நிலை, இயற்கை சீற்றங்களைப் பற்றிய முன்னறிவிப்பு போன்ற பற்பல தரவுகளை திரட்டுகிறது. இதற்காக ஆயிரக் கணக்கான செயற்கை கோள்கள், உணரிகள் (Sensors) மழை மானிகள், வானிலைக் கருவிகள், மிதவைகள் போன்ற கருவிகளின் உதவியுடன் நிலம், கடல் மற்றும் வான் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இத்திட்டத்திற்கு அனைத்து பெரிய தொழிற்மயமாக்கப்பட்ட நாடுகளின் ஆதரவு பெற்றிருக்கிறது.
IEEE மூத்த உறுப்பினர் ஜே பியர்ல்மேன் என்பவர் புவி தகவல் திரட்டு குழுவிற்கு (CEO-Committee on Earth observation) தலைமை ஏற்றிருக்கிறார். இத்தகைய அமைப்பின் மூலம் விரைவான முன் எச்சரிக்கை நடவடிக்கை கள், தகவல் பரிமாற்றங்கள் பெறப்படுகின்றன.

அறையில் நடக்கும் காட்சியை கண்டறியும் ரகசிய ராடார்

[2]விஞ்ஞான புரட்சியில் ராடாரின் பங்கு இன்றியமையாதது. தொலைக்காட்சி, தகவல் ஒலிபரப்பு சாதனங்கள், தொலை பேசி, செல்போன், ராணுவம் இவைகளிலெல்லாம் ராடார். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம் (Cambridge Consultants) ஒன்று பிரிஸம் 200  என்ற ஒரு நூதன ராடாரை கண்டுபிடித்துள்ளனர். இதனுடைய வேலை சுவற்றிற்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடித்து கொடுக்கும். அங்கு நடப்பதை அப்படியே படம் பிடித்துக்காட்டும். வீடியோ செயலியின் மூலம் இயங்கும் இக்கருவியை ஒரு தாங்கியில் 2 மீட்டர் இடைவெளியில் ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு முன் வைத்தால் போதும். அல்ட்ரா ராடார் கதிர்களை கட்டிடத்தின் சுவற்றினூடே அனுப்பும். 400 மி.மீட்டர் பருமன் கொண்ட சுவரானாலும் அதனுள் ஊடுருவி சென்று சுவற்றுக்கப்பால் 15 மீட்டர் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக திரைக்கு கொண்டுவரும். நீங்கள் ஒரு கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நபரையும் இக்கருவி மூலம் தெளிவாக பார்க்கலாம். அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இது 2 மணி நேரம் தாங்கக்கூடிய லித்தியம்-அயன் பாட்டரி மூலம் இயங்குகிறது. இதன் விலை இங்கிலாந்து பவுண்டில் 30 ஆயிரம். நம்ம ஊர் ரூபாயில் சுமார் 23 லட்சம். காம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி நிறுவனம்  இதே நுட்பத்தை பயன்படுத்தி கார்களுக்கான விபத்தை தடுக்கும் ராடாரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

கார் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி

[3]மனித வெடிகுண்டுகளைப் போல கார் வெடிகுண்டுகள் தற்போது பிரபல மாகிவிட்டன என்று சொல்லலாம். நவீன தொழில்நுட்பத்தை தீவிரவாதத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உதாரணமாக ஈராக் இதற்கு முன்னணியில் இருக்கிறது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வசதிகள் இருந்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடுகின்றன. 2001 ஜனவரியில் கலிபோர்னியா கேப்பிட்டல் கட்டிடத்தை வெடிகுண்டுடன் தாக்கியது பால் வினியோகம் செய்கிற டிரக். அதில் அக்கட்டிடம் சேதமடைந் தது. அதுவே எரிபொருள் எண்ணெய் டிரக்காக இருந்தால் அதனுடைய சேதம் அதிகமாக இருந்திருக்கும். கலிபோர்னியாவின் அப்போதைய கவர்னர் கிரே டேவிஸ் இம்மாதிரியான தாக்குதல்களை தடுப்பதற்காக தனிக்குழுவை அமைத்தார்.
கஹஞுசுக்ஙூஷக் ககூஞீக்ஙுச்சுக் சஹஞ்கூச்ஙூஹஙீ கஹஸச்சுஹஞ்ச்சுட் என்ற தேசிய ஆராய்ச்சிக்கழகம் இவ்வகை வெடிகுண்டு வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது.

மூன்று தலைமுறைகளாக இந்த கருவி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதிரியான காற்று பாதுகாப்புத் தடைகளை (Air safety Brake)  பயன்படுத்தி வெடிகுண்டுடன் தாக்க வரும் வாகனத்தை தடுக்க முடியும். உதாரணமாக நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரி முன்னே செல்லும் வாகனத்தை கண்கணித்துக் கொண்டே செல்லும்போது எதுவும் தாக்கக்கூடிய அசம்பாவிதம் நடப்பதற்கு முயற்சித்தால் தன்னுடைய நவீன தொழில்நுட்ப ரிமோட் கண்ட்ரோல் மூலம் ட்ரக்கின் காற்றுத் தடையை செயல்படுத்த ஆரம்பித்து விடுவார். இதன்மூலம் பேராபத்துகள், பேரழிவுகள் தடுக்கப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே இதைவிட அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்கள். RF Device் என்றழைக்கப்படும் ரேடியோ அலை கதிர்களை (Radio Frequency Signal) மூலம் இம்மாதிரி யான தாக்குதல்களை தடுக்கலாம். அதாவது இம்முறையில் முக்கிய கட்டிடங்களான தொழிற்சாலைகள், விமான நிலையம், இராணுவ கட்டிடங்கள், [4]அரசுக் கட்டிடங்கள், துறைமுகங்களில் ஆண்டெனாவை நிறுவி இதன்மூலம் ரேடியோ அலை கதிர்களை அந்த இடங்களில் பரவச் செய்யப்படும். இதன்மூலம் ஏதாவது முன்பின் தெரியாத அனுமதியின்றி திடீரென்று நுழையும் வாகனங்கள் இந்த அலையின் மூலம் நிறுத்தப்படும். இக்கருவியின் விலை அமெரிக்க டாலர் 800 ஆகும் என்று ககூஞீக்ஙுச்சுக் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் மெக்கெல்லன் கூறுகிறார்.

எம்.ஜே.எம். இக்பால், துபாய்.