Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2006
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,863 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொலை தொடர்பு கண்காணிப்பு

இன்றைய நவீன அறிவியல் ஆளுமை ஆட்கொண்ட உலகில் “தூரம்” என்ற வார்த்தை அகராதிகளில் காணாமல் போய் கொண்டிருக்கிறது. தூரம் என்பது வெகுதூரமாக இருந்து இப்பொழுது நம் கைக்குள் கொண்டு வந்ததற்கு தொலைத்தொடர்பு மிக உன்னத பங்கு வகிக்கிறது. ஒரு திரைப் படத்தில் நடிகரை இரட்டை வேடத்தில் காட்டுவார்கள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் இப்பொழுது நிஜமாகப் போகிறது. “தொலை தோற்றம்” எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம்.

நீங்கள் இனிமேல் நியூயார்க்கில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் கலந்து கொள்ளலாம். என்ன நம்பமுடியவில்லையா? வீட்டில் இருந்துகொண்டே கணிணி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன் அங்கு நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய ஒரு கருத்தரங்கில் வீட்டிற்கு வெளியில் செல்லாமல் உங்களைக் கொண்டு நடைபெறும் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தும் இந்த அறிவியல் படைப்பை பற்றிய விளக்கங்களை காணத்தயாராகுவோம்!

நாசாவின் ரோபோனாட் திட்டத்தில் தொலைத்தோற்ற முறையில் தலைக்கவச திரைகள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்ட கையுறைகள் மூலம் இயக்கங்களை கை மற்றும் தலைகளின் இயக்கங்கள் மூலம் சமிக்ஞை அனுப்பப்படுகிறது. தொலை தூரத்தில் இருக்கும் ரோபோட் அப்படியே இவர் செய்யும் இயக்கங்கள், பணியை அப்படியே செய்யும்.

ஆராய்ச்சியாளர்கள் தொலைத்தோற்ற முறையை கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு முறையில் கண்டுபிடித்து வருகிறார்கள். தொலைதொடர்பு முறையை பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து கொண்டே வேறொரு இடத்தை கண்காணிக்கலாம், அங்குள்ள நிலைமையை கையாளலாம் மற்றும் கட்டளைகளை நாம் நினைத்த வண்ணம் அப்படியே பிறப்பிக்கலாம். இதற்காகவே பிரத்தியேகமாக காதுகளில் மாட்டிக்கொள்ளும் விதமாக ஹெட்போன், நம்முடைய அசைவுகள் மற்றும் சமிக்ஞைகளை விளக்குவதற்காக கம்ப்யூட்டருடன் தொடர்பு செய்யப்பட்ட கையுறை மற்றும் தொடு உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் காட்சி திரைகள் கணினி மற்றும் நுண்கணினி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

மேலும் தொலைத் தோற்ற முறைக்கு முக்கியமான தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளான நுண்ணோக்கிகள், தொடு உணரிக் கருவிகள், உணரிகள் அதிநவீன நுண் செயலிகளைக் கொண்ட கட்டுப்பாடு மற்றும் சமிக்ஞை செயலிகள் மற்றும் இதர தொலை மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் தேவைப்படுகின்றன. தரவு பரிமாற்றம் வீதத்தைப் பொருத்து வீடியோ காட்சிகளின் தரவுகள் இறுக்கம் செய்யப்பட்டு பின்பு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

ராணுவத்தில் பணிபுரியும் ரோபோட்டிற்கு தொலைத் தோற்ற முறையில் அங்குள்ள நிலைமைகளை கண்காணித்து அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப கட்டளைகளை அல்லது அதனை நாம் விரும்பியவாறு இயக்கலாம். நாம் கொடுக்கும் சமிக்ஞைகள் மூலம் அங்குள்ள ரோபோட்டும் அதற்கேற்றவாறு செயல்படும்.

இதற்கு கணிணி, நுண் கணிணி, ஹெட்செட், கையுறை மற்றும் தொடு உணரிகள் தேவைப்படுகின்றன. ராணுவத்தில் போரில் அங்குள்ள நிலைமையை கையாள்வதற்கு நேரடியாக மனிதன் ஈடுபடும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை இந்த தொலைதொடர்பு முறையால் தவிர்க்கப்படுகிறது. இம்முறையின் மூலம் அங்குள்ள நிலைமையை தொலைத் தொடர்பு முறையில் கண்காணித்து உடனடியாக சமிக்ஞைகள் மற்றும் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

போர் எல்லைகளில் எதிரிகள் ஊடுருவல் மற்றும் பதட்டமான சூழ்நிலைகளில் தொலைத்தோற்ற முறையில் முறியடிக்கலாம். இம்மாதிரியான பதட்டமான சூழ்நிலைகளில் உடனடி பதிலடி மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொலைத்தோற்ற முறையில் நேரடியாகக் களத்தில் இருப்பது போலவே நாம் அங்குள்ள சூழ்நிலைகளைக் கையாள முடியும். ரோபோட் உணரிகள் மூலம் பதட்டமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு எங்கோ தொலைவில் இருக்கின்ற தொலைதோற்றக் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இக்கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர் மூலம் பதட்டமான சூழ்நிலைகளை ஹெட்செட், கம்ப்யூட்டர் மற்றும் தொலைத் திரை மூலம் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகளை சமிக்ஞைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் முறியடிக்கப்படுகிறது.

இதன்மூலம் களத்தில் நேரடியாக இல்லாமலேயே அங்குள்ள நிலைமையை நேரடியாக இருந்தால் எப்படி சமாளிக்க முடியுமோ அதேமாதிரி இத்தொலை கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டே சமாளிக்க முடியும்.

மருத்துவத்துறையில் தொலைத்தோற்ற முறை மிகவும் இன்றியமையாததாகிறது. எங்கோ வேறு நாட்டிலோ அல்லது தொலைவில் இருக்கின்ற நோயாளியின் உடல்நிலையை அறிந்து அதற்கேற்ப மற்றொரு இடத்தில் இருக்கும் மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடிகிறது.

நோயாளியின் தன்மையை ரோபோட் உணரி மூலம் வரைபடங்கள் மற்றும் முப்பரிமான படங்கள் மூலம் அறிந்து அதற்கேற்ப மற்றொரு தொலைவில் இருக்கின்ற மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம். உதாரணமாக கோயம்புத்தூரில் இருக்கும் நோயாளியின் தன்மையை சென்னையில் இருக்கும் மருத்துவர் தொலைத்தோற்ற முறையில் அறிந்து இவர் கொடுக்கும் சமிக்ஞைகள், இயக்கங்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

மருத்துவர் சென்னையில் இருந்துகொண்டே ரோபோட் உணரி மூலம் நோயாளியின் சிகிச்சைக் கொடுக்கப்படவேண்டிய உறுப்புகளின் வரைபடம்  மற்றும் 3D பரிமாணப் படங்களைப் பெற்று அதற்கேற்ப சமிக்ஞைகள் மற்றும் இயக்கங்கள் மூலம் அங்குள்ள ரோபோட் அதற்கான சிகிச்சையைக் கொடுக்கும். மருத்துவர் இவர் பெற்றுள்ள படத்தில் எந்த இடத்தில் எந்த செயலை செய்கிறாரோ அதை அப்படியே அங்குள்ள ரோபோட் அப்படியே செயல்படுத்தும்.

அதேபோலவே அறுவை சிகிச்சை நடைபெறும் ஒரு இடத்திற்கு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து மருத்துவர்கள் வரவேண்டிய கட்டாயம் இருக்கும். பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டி இருக்கும். இவ்வாறு ஒரே இடத்தில் ஒன்று சேரமுடியாத மருத்துவர்கள் குழு தொலைத்தோற்ற முறையில் தங்களது ஆலோசனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இது மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.

அறிவியல் முன்னேற்றம் நாம் இதுவரை கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவிற்கு போய்க்கொண்டிருக்கின்றது. கற்பனையில் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் முடியாது. இப்படியுமா? இப்படியும் செய்யமுடியுமா? என்று மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யபடக்கூடிய அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி சென்றுக் கொண்டிருக்கின்றது.

கற்பனையில் நாம் ஒரு இடத்தில் இருப்பதுபோல் நினைப்பதை தொலைத்தோற்றம் (Telepresense) முறை நிஜமாக்கிவிட்டது. இனி பாராளுமன்றத்திற்கு செல்லாமலேயே அங்குள்ள நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் பங்கெடுக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை இம்முறையில் கூட பார்வையிடலாம் (இம்முறையின் மூலமாவது தொகுதி பக்கம் எட்டிப்பார்ப்பார்களா?). எங்கோ நடக்கும் கருத்தரங்கிற்கு உங்கள் இடத்தில் இருந்துகொண்டே ஆஜராகலாம். தொலைக்காட்சிகளில் பார்க்கும் சக்திமான், மைடியர் பூதம் போலவே தொலைத்தோற்ற முறை வந்துவிட்டது என்று சொல்லலாம்.

(அதிசயம் தொடரும்)

எம். ஜே. எம். இக்பால், துபாய்.