- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஹுஸைன் முபாரக் ஒபாமா!

வஅலைக்குமஸ்ஸலாம், ஹுஸைன் முபாரக் ஒபாமா!

கெய்ரோவில் பல்கலைக்கழக வளாகத்தில் உலக முஸ்லிம்களுக்கு நீங்கள் நிகழ்த்திய உரையில் கூறிய சலாத்துக்கு எங்களது பதிலை ஏற்றுக் கொள்ளுங்கள்!

இந்த பதிலைச் சொல்வதற்கு முன் நாங்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உரையை நேரடி ஒளிபரப்பில் கேட்டது மட்டுமல்லாமல், திரும்பவும் இருமுறை கேட்டு,  முழுமையான உரையை எழுத்தில் படித்து, அவ்வுரையின் சாதக பாதகங்களை அலசிய தேர்ந்த ஆய்வாளர்களின் கருத்துக்களை கவனமாக ஆய்ந்து, இந்த பதிலை உங்களுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

…. இப்படி இயல்பான ஆனால் கண்டிப்பான தொனியில் அமைந்த உங்கள் உரை பல வகையில் உலக மக்களை ஈர்த்தது …. நாங்களும் ஈர்க்கப் பட்டோம்.

எந்த அராஜகமும் ஒரு முடிவுக்கு வரவேண்டும்; வந்தே ஆக வேண்டும்; வந்தே தீரும்!அதுதான் இறை நியதி !

அதனைச் செய்து முடிக்க தக்க தருணத்தில் ஒருவரை அல்லாஹ் அனுப்புவான் !அவர் அதனைச் செய்து முடிப்பார்!

அப்படித்தான் இந்த உலகத்தின் அனைத்து வரலாற்றுப் பதிவுகளும் அறைந்து கூறுகின்றன.

அந்த வரலாற்று நாயகர் நீங்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை; குறிப்பாக உங்களது இந்த உரையைக் கேட்டபிறகு! அதற்குக் காரணம், நீங்களே கூறியபடி, மூன்று கண்டங்களில் இஸ்லாத்தைப் பார்த்த – நுகர்ந்த அனுபவமுடையவர் நீங்கள். அதிலும் உங்கள் ரத்தத்தில் ஒருபகுதி எங்களோடு நேரடியாகவே தொடர்புடையதுதானே?

இருந்தாலும், உங்களைப் பொறுத்தவரை ‘நான் ஒரு கிறித்துவன்” என்று உரையில் ஓங்கி உரைத்து விட்டீர்கள்; அதனால் ஒன்றும் வருத்தமில்லை எங்களுக்கு!

அது அல்லாஹ்வின் இப்போதைய நாட்டம்!

அது தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம் இல்லையா?

நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – ஜூலை 2009