- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கார்கரேயின் உயிர்த்தியாகம் வீணா?

2008-ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார் கள். 150 பேர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலின் பின்னணியில் சங்பரிவார் சதிகள் இருந்ததாக ஹேமந்த் கார்கரேயின் தலைமையி லான மகாராஷ்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப்படை கண்டுபிடித்தது. ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்யாசிங் உட்பட 11 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கார்கரே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் போது மிகவும் சந்தேகத்துக்குரிய முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பதவி, அவருக்கு முன் அப்பதவியில் இருந்த அதிகாரிக்கே வழங்கப் பட்டது.

சதிகாரர்கள் தண்டனைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு எதிராக தீவிரவாத குற்றத்தடுப்புச் சட்டத் தின் கீழ் இந்த வழக்கு நடத்தப்பட வேண்டியதில்லை என நாசிக் தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை ஒரு சாதாரண வழக்காக வழக்கமான நீதிமன்றத்திலே இந்த வழக்கினை நடத்துமாறும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாசிக் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் கடுமையான தண்டனை பெறவேண்டிய பயங்கர வாதிகள் சாதாரண குற்றவாளிகள் போல் கருதப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 பேரும் ஜாமீனில் வெளிவரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் மகாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் ஆரி·ப் நசீம்கான் இந்த வழக்கு திசைமாறிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை வெளியிட்டிருந்தார். கர்னல் புரோஹித், போன்ஸ்லா ஆயுதப் பயிற்சிக் கூடத்தில் 500 இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த தகவல் என்னாவாயிற்று? என்றும் கேட்டிருந்தார்.

இந்த நேரத்தில் நாசிக் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது!

கடுமையான குற்றவாளிகள் – அவர்கள் எந்தத் தரப்பினர் என்றாலும் எந்த தயவு தாட்சண்யமுமின்றி தண்டிக்கப்பட வேண்டும்; தப்பிக்க விடக்கூடாது என்று நடுநிலைப் பார்வையாளர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள்.

அதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – செப்டம்பர் 2009