- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

வெளி நாட்டு கைக்குட்டை

  வத்திய மேனியும்
நெற்றியில் வியர்வையுமாக
இங்கே நான்!

கருகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் நான்
விடுகதையாய்!!

கூழோ! கஞ்சியோ!
குடிக்கும் போது நீ வேண்டும்;
என எத்தனை முறை சொன்னாலும் நீ;
மூட்டை முடிச்சுடன்
மூட்டைப் பூச்சிகளுடந்தான்
இங்கே நான்!!

பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே – என
காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்;
முகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி!!

பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நீ மட்டுமே!!
விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வளைக்குடாவிற்கு!!

சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன் என்றாலும்;
உள் அர்தத்தை
உன்னைத் தவிர யாரும் புரிந்துக் கொள்ளமுடியாது!!

வழிந்தோடும்
உன் கண்ணீரை
என் கரம் கொண்டு துடைக்கத்தான் ஆசை;
ஆனால்
அனுப்ப முடிந்தது
வெளி நாட்டு கைக்குட்டை மட்டுமே!!!

 யாசர் அரஃபாத்