- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ராமநாதபுரம் மாவட்டத்தை மீட்போம்

ஒளியிலே தெரிவது, வேதனையா…

இயற்கை எரிவாயு மூலம்மின்சாரம் தயாரிக்கும் மின்நிலையங்கள் இருந்தும் ராமநாதபுரத்துக்கு என்ன பிரயோஜனம்? அதே மூன்று மணி நேர மின்தடையை வியர்வை குளியலுடன் ஏற்றுக்கொள்ளும் அவலநிலை. “பொதுமக்கள் நீங்கள் எக்கேடு கெட்டு போங்கள், எங்களால் முடிந்தவரை மின்சாரத்தை வீணடிப்போம்,’ எனப்புறப்பட்டுள்ள அரசு அதிகாரிகளின் செயல் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

ஆறு மணிக்கு மேல் தெருவிளக்குகளை போட வேண்டும் என்பது சிறுகுழந்தைக்கு கூட தெரியும். இங்கோ ஆறு மணிக்கு முன் விளக்கை போடுவதும், ஆறு மணிக்கு பின் விளக்கை அணைப்பதும் என எல்லாம் தலைகீழ் தான்.

எதிலுமே ஒரு பொறுப்பில்லாத செயல் ராமநாதபுரத்துக்கு மட்டும் பொதுவானதான ரகசியம் புரியவில்லை. அசட்டை என்பதா, அலுப்பு என்பதா, அறிவு(!)என்பதா, என, நமக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், மாற்றத்துக்கு மட்டும் விடையை காணோம்.

வீணாக எரியும் விளக்குகளில் வருவது வெளிச்சமல்ல, மின்வெட்டால் பாதிக்கப்பட்டோரின் வயிற்றெரிச்சலின் ஜூவாலை தான் அது என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

Bharathi Nagar [1]
 

நம்புங்க சார், இந்தியா ஒளிர்கிறது… – ராமநாதபுரம் பாரதி நகர் ,மாலை 4மணி

[2]

ரோட்டோர கடைக்காரர்கள் வாழ்வில் “ஒளி’ ஏற்றுகிறார்களாம்… – பரமக்குடி பஸ் ஸ்டாண்ட், மாலை 5.30 மணி.

[3]

என்னை பார் அழுகை வரும்… – பரமக்குடி பாரதிநகர்,மாலை 5.40மணி.

[4]

நகர் பகுதியில் எரியும் போது, இங்கு மட்டும் எரியாமலிருந்தால் எப்படி “சமத்துவம்’ கிடைக்கும்? – வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம், காலை 8.30 மணி
நன்றி: தினமலர்