- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், க்வாட்ரில்லியன், யின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303 ஸைஃபர் போடவேண்டும்). 

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில் கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல் வார்த்தை தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது. 

வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே, கோடிக்கு மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். எப்படி ? 

1000 கோடி = 1 ராடியா
10,000 கோடி = 1 கல்மாடி
1,00,000 கோடி = 1 ராசா 

ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க் கண்டவாறு குறிப்பிடலாம்: 

இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம். நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011


 

நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும், உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது: 

இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது: 

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை “ஜீரோ’? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.

இப்னு ஹம்துன் – http://www.ezuthovian.blogspot.com