- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்- 14-02-2011

[1]உலகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்(என்.யு.எஸ்) ஒன்று.

சில முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்த பல்கலையானது, உலகளவில் 35 இடத்திற்குள்ளும், ஆசிய அளவில் 5 இடத்திற்குள்ளும் வருகிறது. இந்த பல்கலை, இளநிலை பட்டங்களுக்கு பலவிதப் படிப்புகளை வழங்குகிறது.

இந்த பல்கலைக்கழகம் வரும் 2011-2012 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய தரநிலையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான சர்வதேச நிலையிலான உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்கள் www.nus.edu.sg [2] என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கவும்.

ஒருவேளை நீங்கள் இந்த வருடம்தான் 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவேண்டுமெனில், இதற்கு முன்பு நீங்கள் எழுதிய சமீபத்திய தேர்வின் மதிப்பெண்களை சமர்ப்பித்து, பின்னர் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வை எழுதியவுடன் அந்த மதிப்பெண்களை சமர்ப்பிக்கவும்.

தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 31 ஆம் தேதி விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள். 

நன்றி: கல்விமலர்