- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது?

எந்த விழாக்களானாலும் பார்ட்டியானாலும் சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர் பானங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை. இந்த வண்ன திரவங்களால் உடலுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக அவற்றுள் அடங்கியுள்ள நச்சுப் பொருட்கள் உடலுக்கு கேடு செய்கின்றன என்ற விழிப்புணர்வாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பற்கள் பாதிப்பு அடைகின்றன: பொதுவாக எல்லா குளிர் பானங்களும் அமிலச்சுவையுடன் இருக்கின்றன.இதில் கலந்துள்ள அமிலங்கள் பற்களின் எனாமலைப் பதம் பார்த்து கரைத்து விடுகின்றன.மேலும் அதிலுள்ள சர்க்கரை சத்து பற்களைத் தாக்கும் பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது.

பல பிராண்டட் குளிர் பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நச்சுப்பொருள் எச்சம் உள்ளது என்று 2003-ல் அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. இது செவிடன் காதில் சங்காய் அலட்சியப் படுத்தப்பட்டு இன்றும் நாகரீகமான பானமாகவே பொதுவாக கருதப்பட்டு பயன் படுகிறது. இதன் கெடுதல் தன்மை ஒரு புறம் இருக்கட்டும் இத்தகைய பானங்களில் எந்த வித ஊட்டச்சத்தும் இல்லை என்பதே உண்மை. ஒருகரண்டி சர்க்கரைக்கு சமமான சர்க்கரை சத்தும் தண்ணீரும் உடலுக்கு தேவைப்படாத சில ரசாயனமும் தான் அதில் உள்ளது. தேவைக்கு அதிகமான சர்க்கரை சத்து் இரத்தத்தில் கொலெஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். பின்னர், நீரிழிவு, இரத்த அழுத்தம் , இதய நோய், பக்க வாதம் எல்லாம் இதன் செல்லப்பிள்ளைகள். மாற்றாக டயட் குளிர்பானங்கள் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. அதில் சர்கரைக்கு பதில் aspartame என்ற செயற்கை இனிப்பூட்டி ரசாயனம் சேர்கப்படுகிறது. இது கலோரி தருவதல்ல ஆனாலும் இது தாகத்தை தணிக்காது. பசியும் தாகத்தையும் அதிகரிக்க செய்யும். மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி, மந்தம் மற்றும் மறதியை இந்த செயற்கை இனிப்பூட்டி உருவாக்கும்.

தாகம் ஏற்பட்டல் உடனே தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். ஜூஸ் அதற்கு தீர்வாகாது.
[1]பாக்கெட்டுகளில் அடைத்து வரும் பழச்சாறுகள் பலதும் உண்மையில் பழச்சாறுகள் அல்ல. சர்க்கரை, தண்ணீர், அராபிக் கம் எனப்படும் கோந்து மற்றும் சில ரசாயன வண்ணங்களும் எஸ்சென்சும் தான். பல சாஃப்ட் ட்ரிங்க் பொடிகளும் ஆபத்தான வெறும் ரசாயனக்கலவைகளே.

இந்தக் குளிர் பானங்கள் நெடு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்ஸாயிக் அமிலமே பயன்படுத்தப்படுகிறது. இது ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர் டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம்சேர்ந்த சல்பர்டையாக்ஸைடே காரணம்.

பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப் பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.

இத்தகைய ஊக்க பானங்களை மதுவுடன் சேர்த்து அருந்துவது உடலுக்கு மிக்வும் கேடு செய்யும். ஏனெனில் இவை தற்காலிகமாக மூளையை தூண்டுகின்றன. ஆனால் மது மூளையை மந்தப்ப்படுத்துகிறது. இந்த முரணபட்ட தன்மையால் மனிதனின் நரம்பு மண்டல கட்டுபாடு சீர்குலைகிறது. மயக்கம் வாந்தி, இதயத் துடிப்பில் சீரின்மை உண்டாகிறது.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் Tartrazine என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், கடுமையான ஜலதோஷம், கண்கள் சிவப்பாக மாறுதல், பார்வைக் குறைபாடு, நரம்புக்கோளாறு ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.இது ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்றுநோய் போன்றவற்றை உருவாக்ககூடும்.

ஸாஃப்ட் டிரிங்க் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.
ஐஸ்க்ரீமில் உள்ள carboxymethylcellulose எலிகளிடம் செய்த சோதனையில் 80% புற்று நோய் உரு்வாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, மோர், லெமன்ஜூஸ், காரட் ஜூஸ், இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். அதுவே நல்லது.

சுத்தமான தண்ணீர் என்ற பிரமையை உருவாக்கி வரும் மினரல் வாட்டர்களிலும் எந்த விதமான சத்துப்பொருளும் இல்லை பதிலுக்கு ரசாயனங்களே சேர்க்கபடுகிறது. தொழிற்சாலை கழிவுகள் ஆற்று நீரில் கலந்து பல இடங்களில் இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரே விஷமாகிக் கிடக்கிறது். இதை தான் குளோரின் கலந்து பல நகராட்சிகளில் குடிநீராக வினியோகிக்கிறார்கள். பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான குடிநீரையும் பல ரசாயனசோதனைக்கு உட்படுத்தி நல்ல குடி நீராக மாற்றி உபயோகப் படுத்துவதே நல்லது.

நன்றி: தமிழ்குருவி