- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

வெற்றி வந்து குவியும்

மனதை உங்கள் கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும் – ஒவ்வொரு
தினமும் “பயிற்ச்சி” செய்து செய்து
வெற்றி கொள்ள வேண்டும்!

தீமை செய்யும் பகைவன் எங்கோ
தூரத்தில் இல்லை – மனதில்
சேரும் “குழப்பச் சிந்தை” வழியில்
நேரும் பகையில் தொல்லை!

யாரும் நமக்குச் செய்யும் கேட்டை
தடுத்து நிறுத்த முடியும் – மனம்
போகும் பாதை” தெரிந்து கொண்டால்
வெற்றி வந்து குவியும்!

உலகில் மனிதர் வெற்றி கொண்டால்
உழைப்பு மட்டும் இல்லை – ஓடும்
மனதைப் பிடித்து “அடக்கி வைத்த
முயற்ச்சி தந்த எல்லை!

இருக்கும் அறிவில் தெளிவு பெறுதல்
ஞானம்” என்று சொல்ல – மனிதன்
சறுக்கும் நிலையை தெரிந்து கொண்ட
வானம் சென்று வெல்வார்!

கவிஞர் “நம்பிக்கை” நாகராஜன்

நன்றி:தன்னம்பிக்கை [1]