- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை

ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் வருமான வரி வசூல் செய்யப்படும். இது, நடப்பு நிதியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் ( ரிட்டர்ன்) செய்ய வேண்டியதில்லை. இந்த திட்டப்படி, மாதம் சம்பளம் பெறுவோர் பயனடைவர். இதன்படி, கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை , நடப்பாண்டில் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. சம்பளதாரர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் வருமான வரி செலுத்துவதற்காக அளிக்கும் படிவமே (பார்ம் 16) ரிட்டர்னாக எடுத்து கொள்ளப்படும். மேலும், கூடுதலாக வருமான வரி பிடித்தம் செய்திருந்தால், அதை திரும்ப பெறுவதற்காக (ரீபண்ட்) வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். மேலும், வட்டி போன்ற இதர வருவாய் ஏதும் இருந்தால், அதையும் பார்ம் 16ல் தெரிவித்து , வரியை பிடித்தம் செய்ய தங்களது நிறுவனத்திடம் கூறலாம். இந்த புதிய முறை மூலம், மாத சம்பளதாரர்கள், 85 லட்சம் பேர் பயன் பெறுவர். ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாயை தாண்டுபவர்கள், வழக்கம் போல வருமான வரி கணக்கு (ரிட்டர்ன்)தாக்கல் செய்ய வேண்டும். இது பற்றி அறிவிப்பு, இம்மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு சுதிர் சந்திரா கூறினார்.

நன்றி: தினமலர்