- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

எஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை

“ஈ அடிச்சான் காப்பி’ என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. “இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது’ என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, வரும் மார்ச் மாதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, பாட வாரியாக கேள்வித் தாள், “புளூ பிரின்ட்’டை, பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. பாடப் புத்தகங்களைத் தயாரித்த ஆசிரியர் குழுவே, இந்த கேள்வித் தாள்களையும் வடிவமைத்துள்ளது.சி.பி.எஸ்.இ., கேள்வித் தாள்களில், மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் அதிகம் இருக்கும். நேரடியான கேள்விகள், குறைந்த அளவே இருக்கும். அதேபோல், பத்தாம் வகுப்பு கேள்வித் தாள்களை வடிவமைத்துள்ளனர்.இந்த புதிய கேள்வித் தாள் அடிப்படையிலேயே, தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. அறிவியல், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

“புளூ பிரின்ட்’கள், மாநிலம் முழுவதும், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து, ஆசிரியர்கள் கருத்துக் கூறவும், பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நாகராஜ முருகன், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி குப்புசாமி ஆகியோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, இந்த வாரத்திற்குள் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, அறிக்கையை சமர்ப்பிக்க, இரு மாவட்ட அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில், தேவையான மாற்றங்களைச் செய்து, “புளூ பிரின்ட்’டை, துறை இறுதி செய்ய உள்ளது.

மாற்றங்கள் என்னென்ன?கேள்வித் தாள் அமைப்பு குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது:

ஆங்கிலம்:

அறிவியல் :

கணிதம்:

தமிழ்:

சமூக அறிவியல் கேள்வித் தாள், நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு “அல்வா’ :”இனிமேல், மாணவர்கள், “பிட்’ அடிப்பதற்கே வழியிருக்காது’ என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:வழக்கமாக, விரிவாக விடை அளிக்கும் வகையிலான கேள்விகள் தான், அதிகம் இடம்பெறும். அதனால், எந்தக் கேள்வி வரும் என்பதை, ஓரளவு யூகித்து, அதற்கான விடைகளை எடுத்துச்சென்று, தேர்வில் “பிட்’ அடிப்பர். ஆனால், புதிய கேள்வித் தாள் அமைப்பு, மிக நுட்பமாக, கேள்விகள் எந்த மூலையில் இருந்து வரும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அதனால், “பிட்’டும் அடிக்க முடியாது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இணையத்தில் “புளூ பிரின்ட்’ : பாட வாரியான, “புளூ பிரின்ட்’ விரைவில், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. எனவே, பகுதி வாரியாக கேட்கப்படும் கேள்விகள் மாதிரிகளை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆசிரியர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணி கூறும்போது, “சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். 6,7,8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககத்தின் சார்பிலும், 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்ககம் மற்றும் ஆசிரியர் கல்வி இயக்ககம் ஆகிய இரு துறைகள் சேர்ந்தும் பயிற்சி அளிக்கும். இதற்கான திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வகுத்து வருகின்றன’ என்றார்.

நன்றி: ஏ.சங்கரன் –  தினமலர்