- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை

சீர்மிகு சித்தார்கோட்டை என்ற, பெயர் பெற்ற நமது ஊரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?
எத்தனயோ தலை சிறந்த  பஞ்சாயத்து தலைவர்களை தந்துள்ளது இந்த சித்தார்கோட்டை. நாம் தேர்ந்தெடுத்து நிறுத்தும் வேட்பாளரை பக்கத்து கிராமத்தினர் மதித்து வாக்களித்தனர். அவர்கள் ஜாதி, மத, இன வேறுவாடு காட்டாமல் பணி செய்தனர்.
எப்போது நான்கு வேட்பாளர்களை நிறுத்தினோமோ அப்போதே நமது ஒற்றுமையையும் வெற்றியையும் தொலைத்தோம்.
வேற்றுமையை கலைந்து ஒருவருக்கு வழிவிட்டிருக்கலாம். நம் ஊரில், ஆளுமைத்திரனும்,நிர்வாகத்திறமையும் உள்ள பலர் இருந்தும் இந்த முறை ஒரு நபர்கூட வர முடியாத பரிதாப நிலை! அதற்காக சிலரோ அல்லது பலரோ முயற்சி செய்திருக்க வேண்டும்! நடந்தது நடந்து விட்டது. இது ஒரு கசப்பான பாடம்.

இதற்கு என்ன காரணம், நாம் என்றோ தொலைத்துவிட்ட நம்முடைய ஒற்றுமை. இந்த இனிய வேளையில் நம்மை நாமே புலர் நிர்மாணம் செய்து கொள்வது சாலச் சிறந்தது.
  • நடந்து முடிந்த தேர்தல் தோல்வியில் ஒருவருக்கொருவர் குற்றம் காணாமல் ஒற்றுமையை மட்டும் ஏற்படுத்துவது.
  • விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை இனிமேலாவது அதிகரிக்கச் செய்வது
  • கட்சி சாராது ஊரின் நன்மை மட்டும் கருதி அதிக அக்கரை செலுத்துவது.
  • ஒரு சிறிய பிரச்சனையான கறி விலை நிர்ணயம் செய்வதில் காட்டும் ஆர்வத்தில் சிறு பங்காவது அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பெறுவதில் காட்டி இருக்கிறோமா என்று இந்த நல்ல வேளையில் நமக்கு நாமே கேள்வி எழுப்பிக் கொள்வோம்.
  • எங்க ஊர் பிரசிடெண்டு உள்ளூர் ஆளூ இல்லீங்க பாய் என்று வெளி நாட்டில் வாழும் எங்களைப் போன்றோர் மற்ற ஊர்வாசிகளிடம் சொல்ல உள்ளூர வேதனைப்படுகிறோம்.
இப்பதிவின் முடிவில் கடமையாற்றி சென்ற பழைய பஞ்சாயத்து தலைவர்களை நினைவில் கொள்வோம்.

  1. மர்ஹூம் கமாலுதீன் அவர்கள்
  2. மர்ஹூம் சபீக்குர்ரஹ்மான் அவர்கள்
  3. ஜனாபா கரீமா பேகம் அவர்கள்
  4. ஜனாப் அப்துல் கனி அவர்கள்

அதே நேரத்தில் சித்தார்கோட்டை பஞ்சயாத்து தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருககும்  திரு.சுந்தரம் அவர்களை வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளோம்.

புதிய தலைவரை நாம் முறையாக அனுகி ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஒத்துழைப்பு கொடுப்போம்!

கிருபையாளனாம் வல்ல அல்லாஹ் நம்மில் ஒற்றுமையை என்றும் அதிகரிக்கச் செய்வானாக.

கொட்டும் முரசு

மீண்டும் முழங்கும்