- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

பயணித்துத்தான் பார்க்கலாமே! கவிதை

படகுகள் காத்திருக்கின்றன [1]
கரையோர கனவுகளை
கலைத்து விட்டு
பயணத்தை துவக்கு முன்
பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன
கரை சேர்க்கும்
கடமையுடன்
அசைந்து அசைந்து உனை
அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன
ஒருவேளை உன் துயர் தீரலாம்
ஒருக்கால் உன் பாரம் குறையலாம்
ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம்
ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.
மற்றபடி படகுகள்
மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால்
பயணித்துத்தான் பார்க்கலாமே!

நன்றி: கற்றலும் கேட்டலும்