- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இதயமே நீ நலமா…?

[1]இதயம் என்ற சொல்லுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதால், நமது உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நமக்கு தெரியத்தான் செய்கிறது.

மனிதன் தாய் வயிற்றில் கருக்கொள்ளும் சில வாரங்களிலே இதய துடிப்பு மூலம், `இதோ நான் உருவாகிவிட்டேன்’ என்று உயிரின் தொடக்கத்தை உருவாக்கி, மரணம் வரை நமக்காக துடித்துக்கொண்டே இருக்கும் அந்த இனிய இதயத்தை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோமா?

பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், `நேற்று ராத்திரிதான் என்னோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு காலையிலே அவர் செத்து போயிட்டார்ன்னு தகவல் வந்தது. என்னால நம்பவே முடியலேப்பா… ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம்..’ என்ற உரையாடலை தெருவுக்கு தெரு அடிக்கடி கேட்க முடிகிறது.

ஹார்ட் அட்டாக் இருதலைக்கொள்ளி போன்றது. எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் சத்தமின்றி சாகடித்து விடவும் செய்யும். `நெஞ்சு வலிக்கிறது… இதோ அளவில்லாமல் வியர்க்கிறது.. என்னென்னு சொல்லத் தெரியலை ஆனா என்னென்னவோ பண்ணுது…’ என்று சொல்லும் அளவுக்கு அறிகுறிகளை தந்து உஷார் படுத்தி, சாகடித்து விடவும் முயற்சிக்கும். அதனால், `அப்படியும் நடக்கலாம். இப்படியும் நடக்கலாம்.. எப்படியும் நடக்கலாம்’ என்று பயப்படுத்துகிறது, ஹார்ட் அட்டாக்!

குடும்பத்தின் தலைவன் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பணக்கஷ்டத்தில், துக்கத்தில், சோகத்தில் தடுமாறி அப்படியே கவிழ்ந்துபோன குடும்பங்களும் உண்டு. ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இதயத்தை பரிசோதித்து (மருத்துவமுறையில்) நலம் விசாரித்து, ஹார்ட் அட்டாக் வரும் முன்பே அதை கண்டறிந்து, பராமரித்தாலே போதும், இதயம் நன்றாக இயங்கும்.

அறிகுறி தெரிந்த உடனே அடுத்து என்ன செய்யவேண்டும்?

மேற்கண்ட அறிகுறிகளில் எது இருந்தாலும், அலட்சியம் செய்யக்கூடாது. உடனே டாக்டரை அணுகவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார்கள். அதில் சீரற்ற நிலை இருந்தால், அடுத்தகட்ட பரிசோதனைகளை தொடர வேண்டும். சிலருக்கு நுரையீரல் தொடர்புடைய வலி இருந்தாலும், இதயப் பகுதியில் வலிக்கும். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் இருக்கும். ஆனால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்காது. அதனால் அவசரப்பட்டு மருந்து சாப்பிட்டுவிடக் கூடாது. ஈ.சி.ஜி. தொடக்க பரிசோதனை முறைகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே 100 சதவீத திருப்தியான பரிசோதனை முறையில்லை.

அடுத்தகட்டமாக Trop-T என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு சிறிய பேண்ட்டேஜ் துண்டுபோன்றிருக்கும். அதில் ஒரு சொட்டுக்கும் குறைவான அளவில் ரத்தத்தை எடுத்து வைத்து பரிசோதிக்க வேண்டும். ஒரு கோடு விழுந்தால் அவருக்கு இதய பாதிப்பு இல்லை என்றும், இரு கோடுகள் விழுந்தால் பாதிப்பு ஏற்பட்டிருப் பதாகவும் உணரலாம்.

ஒருவரின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துவிட்ட பின்பு, அந்த பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்தால்தான் அதற்கு தக்கபடி முழுமையான சிகிச்சையை திட்டமிட்டு அளிக்க இயலும். பாதிப்பின் அளவை கண்டறிவதற்கு ஆஞ்சியோ முறை உதவும்.

தொடையில் இருக்கும் முக்கிய ரத்தக் குழாய் வழியாக குழாயை விட்டு, இதயப்பகுதிக்கு ரத்தம் கொடுக்கும் குழாய் அருகில் கொண்டு சென்று `ஹூக்’ செய்து, அழுத்தம் கொடுத்து அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இது ஒருசில பாதிப்புகம் கொண்ட பழைய பரிசோதனை முறையாகும்.

அதற்கு மாற்றாக இருக்கும் நவீன பரிசோதனை முறை `64 சிலைஸ் சி.டி. கொரோனரி ஆஞ்சியோகிராம்’ எனப்படுகிறது. ஐந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த பிரமாண்ட ஆஞ்சியோ ஸ்கேன் கருவி, ஒருவரின் இதயப் பகுதியை 64 விதமாக துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. நவீன கம்யூட்டர்களில் அதைப் பார்த்து எந்த பகுதியில், எந்த அளவில் அடைப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம்.

சாப்பிட்டு 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு இந்த பரிசோதனைக்கு வரவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பார்கள். அவரது இதயத் துடிப்பு 80-க்கு கீழ் இருக்கவேண்டும். இதயம் கண் இமைக்கும் நேரத்தில் விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், இதயத்தை இந்த கருவி படமெடுக்கும். அதனால் இதயம் அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தால், எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகவே இதயம் வேகமாக துடித்தால், இந்த பரிசோதனையின்போது அருகில் இருக்கும் இதயநோய் நிபுணர் துடிப்பை கட்டுப்படுத்த மருந்து கொடுப்பார்.

இதய துடிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கருவியில் படுக்கவைக்கப்படுவார். அப்போது கையில் `காண்ட்ராஸ்ட் இன்செக்ஷன்’ அதற்குரிய கருவி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து இதயப் பகுதிக்கு செல்லும்போது 5 வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஸ்கேன் கருவி, சர்ரென்று வேலை செய்து, படம் பிடித்து, கம்ப்யூட்டர் திரைகளில் துல்லியமாக எங்கெங்கு அடைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும்.

நமது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய பணியை மூன்று ரத்தக் குழாய்கம் மேற்கொள்கின்றன. அதில் ஒன்றிலோ, இரண்டிலோ அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவைகளில் ஷிåமீஸீå வைப்பார்கள். மூன்றும் அடைத்திருந்தால் உடனடியாக `பைபாஸ்’ ஆபரேஷன் செய்வார்கள். அதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

மாரடைப்புக்கு காரணமான இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுடிக்க மட்டுமே இந்த ஆஞ்சியோகிராம் சி.டி.ஸ்கேன் கருவி பயன்படும் என்பதில்லை. ஏற்கனவே ஸ்டென்ட் இணைத்தவர்களுக்கு அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும், பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு அந்த பகுதியின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இந்த ஸ்கேன் பரிசோதனை உதவும்.

இன்று மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம் போன்றவைகளால் 30 வயதுவாக்கிலே இளைஞர்களுக்கு இதயநோய் ஏற்படுகிறது. வந்த பின்பு அதை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் போராடுவதைவிட வரும்முன்பே இந்த நவீன சி.டி.ஸ்கேன் மூலம் இதயத்தை பரிசோதித்துக் கொம்வது நல்லது.

நாம் தாய் வயிற்றில் கருவாகி, உருவாகும்போதே துடிக்க ஆரம்பித்து, நாம் பிறந்து, வளர்ந்து உயிர்வாழும் கடைசி வினாடி வரை இடைவிடாது துடித்து நம்மை இயக்கும் இதயத்தை துவண்டு விடாமல் பார்த்துக்கொம்ள வேண்டியது நம் கடமை. இதயத்தின் ஆரோக்கியமே இல்லத்தின் ஆரோக்கியம்.

– டாக்டர் ஆர். இம்மானுவேல் M.D.(R.D), சென்னை – 14.

எந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில், யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்?

 இப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கம் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

அறிகுறிகளை வெளிப்படுத்தியும் மாரடைப்பு வரலாம்.

மாரடைப்புக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

போன்று பல அறிகுறிகம் உள்ளன.

நன்றி: தினத் தந்தி