- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

பாம்புக்கடியும் அதற்கான முதலுதவியும்

[1]பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் மனிதனையே கொல்லக்கூடிய அதன் விசம்தான். இந்த விசகடிக்கு சரியான சிகிச்சை, உரிய நேரத்தில் செய்தால் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் பாம்புக்கடியினால் வருடந்தோறும் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் அதே நிலைமையே காணப்படுகிறது. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுமிடத்து தேவையற்ற மரணங்ககையும், உபாதைகளையும் தவிர்க்கமுடியும்.

இலங்கையிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி இங்கு காணப்படுகின்ற அனைத்துப்பாம்புகளும் கொடிய விஷம் உள்ள பாம்புகள் என எண்ணுவது தவறானது. அவ்வாறு கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தேவையற்ற தவறான முதலுதவிகள் செய்யப்படுமிடத்து விஷம் உடலில் அகத்துறிஞ்சும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது.

உதாரணமாக, கடிபட்ட  இடத்தை கத்தியாலோ அல்லது ஏதாவது கூரான ஆயுதத்தாலோ வெட்டும் போது விஷமானது உடலில் அகத்துறிஞ்சும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் தோலில் காயத்தை ஏற்படுத்தும் ஏதாவது திராவகத்தாலோ கழுவும் போது absorption அதிகரிக்கப்படலாம்.

அத்துடன் அல்ககோல்(மது) உட்கொண்டாலோ அகத்துறிஞ்சல் வீதமானது அதிகரிக்கப்படும். எனவே முறைதவறிய முதலுதவிகளும் தேவையற்ற பழக்கவழக்கங்களும் உயிரிழப்புக்களை அதிகரிக்க காரணமாக அமைகின்றன.

உலகில் சுமார் 3500 வகை பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில்  250 வகை பாம்புகள்தான் விசத்தன்மையுள்ளவை. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் சுமார் 216 வகைப்பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 வகையான்வை விஷத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் 15,000-20,000 பேர் விசத்தால் இறக்கிறார்கள்.

விசப்பாம்புகளில் நம் நாட்டில் முக்கியமானது நல்லபாம்பு. இது படமெடுத்து ஆடும். இதன் படத்தில் இரண்டு கருப்பான கண் போன்ற அமைப்பு இருக்கும். கண் போன்ற அமைப்பில் சிறு தங்கநிற செதில்கள் காணப்படும். சில பாம்புகளில் ஒற்றைக்கண் கூட உண்டு. கருநாகத்தின் படத்தில் கண் இருக்காது.

இறந்த பாம்பில் படம் விரிந்து இருக்காது. இதற்கு அந்தக் கழுத்துப்பகுதி இணைப்புகள் இறுகி விடுவதே காரணம். நல்லபாம்பின் தாடையில் விசப்பற்கள் இரண்டு உண்டு. அதனருகில் ஒன்று அல்லது இரண்டு சிறு பற்கள் காணப்படலாம்.

ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait

நல்ல பாம்பின் விசக்கடி பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
நல்லபாம்பு விசமானது பொதுவாக நரம்புமண்டலத்தைத் தாக்கக்கூடிய விசமாகும்.

  1.  கடித்த 6-8 நிமிடத்தில் கடிவாயைச் சுற்றியுள்ள பகுதி சிவந்துவிடும்.
  2.  கடிவாயிலிருந்து இரத்தத்துடன் நீர் கசியும்.
  3.  30 நிமிடத்தில் கடிபட்ட நபருக்கு தூக்கம் வருதல், கால்கள் சுரணைக்குறைவு, நிற்க நடக்க இயலாமை ஆகியவை ஏற்படும்.
  4.  சிலருக்கு உமட்டல், வாந்தி வரலாம்.
  5.  நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் கால் தசைககள் செயலிழந்து போய்விடும். இதனால் நிற்க முடியாது.
  6.  கண் இமைகள் செயலிழந்து கண்ணைத் திறக்க முடியாது.
  7.  கடித்த அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்தில் எச்சில் அதிகம் ஊறும். வாந்தி, நாக்குத் தடித்தல், குரல்வளை தடித்து செயல் இழத்தல் ஆகியவை ஏற்பட்டுப் பேசவும், விழுங்கவும் இயலாது.
  8.  சுமார் இரண்டு மணி நேரத்தில் உடல் தசைகள் முழுவதும் செயலிழப்பதால் மூச்சு விடுதல் (Respiratory Paralysis) ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். கடிபட்டவர் சுய நினைவிலிருந்தாலும் பேசமுடியாது.
  9. அதன் பின் வலிப்பு வரலாம். நுரையீரல் செயலிழந்து மூச்சு நின்று விடும். பின் இதயத்துடிப்பும் நின்று போகும்.

மருந்துகள்:

விச முறிவு மருந்தை அனைத்து அரசு மருத்தவ மனைகளிலும் உள்ளது. இது நல்லபாம்பு மற்றும் அனைத்துவிதப் பாம்பு விசத்தையும் குணப்படுத்தும்.

நல்லபாம்புக் கடியால் இறப்பதற்கு முக்கிய காரணங்கள் :
1. அதிக அளவு விசத்தை பாம்பு கடித்து உடலுக்குள் செலுத்துதல்.

2. கடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லாமை, தகுந்த சிகிச்சை அளிக்காமை ஆகியவையே.

3. உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை அளித்து இன்னுயிர் காப்போம்.

பாம்பில் இருந்து நஞ்சு எப்படி பாய்கின்றது? அதில் என்ன உண்டு
பாம்பின் வாய்
நச்சுத் தன்மையான பாம்புகள் பெரிய நீண்ட இரு பற்களைக் தமது மேல் தாடையில் கொண்டுள்ளன. இப் பற்கள் நஞ்சை பாச்சுவதற்காக துவார்ங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் உடலிலன் ஆழமான பகுதிகளுக்கு நஞ்சு பாச்சப்படுகின்றது.

பாம்பு மனிதனைக் கடிக்கும்போது நஞ்சானது தோலிக்கு கீழான கொழுப்பு கலங்கள் கொண்ட பகுதிக்கும், தசைகளை கொண்ட பகுதிக்கும் பாச்சப்ப்டுகின்றது.

சில பாம்புகள் மனிதனிம் கண்களை நோக்கி விஷத்தை பாச்சவல்லன.

பாம்பின் விஷத்தில் என்ன உண்டு?
இதில் 20 க்கு மேற்பட்ட பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானவை புரத மூலக்கூறுகள்.

1. இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய புரதங்கள்

2. குருதிக் குளாய்களை பாதிப்படையச் செய்யும் பதார்த்தங்கள்

3. உடற்கலங்களை இறக்கச் செய்யும் பதார்த்தங்கள்

4. குருதிக் கலங்கள், தசைக் கலனங்கள் போன்றவறை அழிவடையச் செய்யும் பதார்த்தங்கள்

5. உடல் நரபு கணத்தாக்க கடத்தலை பாதிக்கும் பதார்த்தங்கள்

பாம்பு கடிக்கும் போது எவ்வளவு நஞ்சு பாசய்ச்சுகின்றது?

இது பல காரணிகளில் தங்கியுள்ளது

*  வேறுபட்ட இன பாம்புகள் வேறுபட்ட அளவில் விஷத்தை கக்குகின்றன

*  பாம்புக்கடி ஆழம்

*  கடிகளின் எண்ணிக்கை

*  பாம்பின் பருமன் (ஒரே இனத்தில் பெரிய பாம்புகள் கூடிய விஷத்தை பாய்ச்சுகின்றன)

பாம்புகள் கடிப்பது தமை பாதுகாத்துக் கொள்வதற்கே. அவைகளை சீண்டாமல் விட்டால் அவை ஒன்றும் செய்யாது.

பாம்பு கடிப்பதற்கான காரணங்கள் சில:

*  பாம்புகள் இரவு வேளைகளில் அல்லது புதர்களில் இருக்கும்போது வெறும் காலோ அல்லது பாதுகாப்பற்ற காலணிகளால் மிதிக்கப்படும் போது
*  பாம்புகளை கையாளும்போது
*  வீட்டிற்கு இரவில் இரைதேடிவரும் பாம்புகள் மீது படுக்கையில் இருக்கும்போது கை கால் படும் போது

யார் பொதுவாக பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர்?

*  வேட்டையாடுவோர்
*  விலங்குகளை பராமரிப்போர்
*  விவசாயிகள்
*  இறப்பர், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
*  மீன்பிடிப்போர்
*  பாம்புகளை கையாளுவோர்

பாம்புக் கடியில் இருந்து எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம்?

1. உள்ளூர் பாம்புகள் பற்றிய அறிவை வளர்த்தல் (அதாவது மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் என்னென்ன பாம்பு வகைகள் இருக்கின்றன?, அவை எந்தக்காலப்பகுதியில் என்ன நேரத்தில் அதிக நடமாட்டம் செய்கின்றன, எப்படிப்பட்ட இடத்தில் மறைந்து வாழ்கின்றன என்ற தகவல்களாகும்.)

* பாம்புகளின் வகைகள் (பாம்பைப்பற்றிய கல்வியறிவு மக்களுக்கு புகட்டப்பட வேண்டும்)

* பொதுவான வாழிடங்கள் (கல் குவியல்கள், விறகுகள், மரங்கள் குவித்து வைத்துள்ள இடங்கள்)

* இரைதேடும் காலம் பகல்/இரவு

* அதிகமாக வெளியே உலாவும் காலம்

2. அதிகமாக பம்புக்கடி ஏற்படும் சந்தற்பங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல்

* மழைக் காலத்திற்குப் பின்னர்

* வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது

* அறுவடைக் காலம்

* இரவு வேளை (இரவில் நடந்து செல்லும் போது போதியளவு வெளிச்சத்துடன்(Torch light) செல்வது விரும்பத்தக்கது)

3. இரவில் புதர்களுக்கருகில் நடக்கும்போது பாம்புக்கடியில் இருந்து தப்புவதற்காக பாதணிகள் மற்றும் நீள காற்சட்டைகளை குறிப்பாக இரவில் பாம்பு நடமாட்டம் உள்ள இடத்தில் செல்வதாயின் அணிந்து செல்வது

4. நிலத்தில் படுத்து உறங்குவதை தவித்தல்

5. இறந்த பாம்புகளை கவனமாக கையாளுதல்

6. வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் (வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் குறுகிய கால இடைவெளிகளில் தூய்மையாக்குவதன் மூலமும் பாம்புகள் வருவதை தவிர்க்க முடியும்)

முதலுதவி:
முதலுதவியின் நோக்கங்கள்

1. நஞ்சு குருதிக்குள் உள்ளெடுக்கப்பட்டு உடலெங்கும் பரவுவதை தடுத்தல்

2. மருத்துவ உதவியை நாடும்வரை பாம்பு கடித்தவரை பாதுகாத்தல்

3. பாம்பு கடியில்  உடனடியாக உடலில் ஏற்படும் அறிகுறிகளை தடுத்தல்

4. வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல ஒழுங்குகள் செய்தல்

தவிக்க வேண்டிய தவறான செயல்பாடுகள்

1. பாம்புக் கடி ஏற்பட்ட இடத்தை வெட்டி குருதியை வெளியேற்றுதல்

2. காயத்திலிருந்து விஷத்தை வாயால் உறுஞ்சி எடுத்தல்

3. கடிபட்ட இடத்தை இறுக்கி துணியால் கட்டுதல்

4. மின் அதிர்ச்சி வழங்கல்

5. இரசாயனப் பதார்த்தங்களை காயத்தில் பூசுதல்/விடுதல் அல்லது குளிர் கட்டிகளை காயத்தில் வைத்தல்
(இவை சில சமயங்க்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இவை கூடுதலக தீமையே விளைவிக்கின்றன.)

ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலுதவி முறைகள்:

1.  கடிபட்டவரின் பயத்தைப் போக்குதல். பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கலாம்

*  பெரும்பாலான் பாம்புகள் விஷமற்றவை

*  பாம்புக் கடி எல்லாவற்றிலும் விஷம் பாச்சப்படுவதில்லை

*  பாய்ச்சப்படும் நஞ்சு சில வேளைகளில் போதுமானதாக இருப்பதில்லை

*  இதற்கு எதிர் மருந்து வைத்தியசாலையில் உண்டு

2. கடிபட்ட பகுதியை அசையாமல் பாதுகாத்தல். ( அசைவு நஞ்சின் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும்)

3. பண்டேஜ் மூலம் காயப்பட்ட இடத்தை இறுக்கிக் கட்டல்
அதிக இறுக்கததை தவிர்க்க வேண்டும். இதை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கும்வரை கழற்றக் கூடாது (சில பாம்பு கடிகளுக்கு இவ்வாறு செவதால் அது கடிக்கப்பட்ட பகுதியில் கலங்களின் அழிவை தூண்டும்)

4. கடிபட்ட அங்கத்தில் நகைகள் அல்லது நூல்கள் கட்டப்பெற்றிந்தால் அவற்றை கழற்றுதல்

5. கடி காயத்தை சீண்டாமல் இருத்தல் (சீண்டுவதால் தொற்றுக்கள் அதிகரிப்பதுடன் நஞ்சின் அகத்துறிஞ்ச்சல்லும் அதிகரிக்கும்)

6. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல்
செல்லும்போது

*  உடனடியாக வைத்தியசாலையை நாடுவது முக்கியமாகும்.

*  கடிபட்ட அங்கத்தை கூடியளவு அசைக்காது பார்த்துக் கொள்ளல்
*  வாகனங்களை உபயோகித்தல் அல்லது நோயாளியை தூக்கொச் செல்லல்

*  அத்துடன் கடித்த பாம்பினை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது விரும்பத்தக்கது.