Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,092 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2

kiraiபிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தன. இவர்கள் உடல் சிறப்பாக இயங்கியது. பழைய விஷயங்களைக்கூட இவர்கள் சரியாக ஞாபகப்படுத்தி சொன்னார்கள்.

ஆனால் பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் அநியாயத்திற்கு மறதிக்கு பெயர் போனவர்களாக இருந்தார்கள். பல விஷயங்கள் இவர்களது ஞாபகத்திற்கு வரவில்லை. வீட்டைச் சரியாகப் பூட்டினோமோ? என்று பஸ்ஸில் ஏறிய பிறகு சந்தேகத்துடன் பயணிப்பார்கள். மனக்குழப்பம் தெளிவின்மையும் இவர்களிடம் அதிகம்.

பிரிட்டீஷ் விஞ்ஞானிகளால் பி வைட்டமின்களுக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்பு என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.

மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு தடையின்றி நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் படு சுறுசுறுப்பாக இயங்கும்.

கோழி சூப்பால் நன்மை உண்டா ?

ஜலதோஷ நேரத்தில் கோழி சூப் ஆட்டுக்கால் சூப் அல்லது சிறிய துண்டு கோழி இறைச்சி சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இது உண்மையா? அறிவியல் ரீதியாக உண்மை. இவைகளில் உள்ள துத்தநாக உப்பு நன்மை செய்கிறது.

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யலாமா?

உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளை விட நல்ல வெயிட்டான குழந்தைகளைப் பெறுகின்றனர். உடற்பயிற்சியினால் வாரத்திற்கு 2000 கலோரி எரிக்கப்படுகிறது. இந்தப் பெண்கள் பிரசவ தேதி குறிப்பிட்ட தினத்தன்றே சிரமம் இன்றி எளிதாகக் குழந்தையை பிரசவித்தும் விடுகின்றனர். குழந்தையும் படு ஆரோக்கியமாக உள்ளது. மிக்ஸிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இது பற்றிய ஆய்வில் தீவிரமாக இப்போது இறங்கியுள்ளது. புது மணப்பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

சாப்பிடலாம். ஆனால் அரிசி உருளைக்கிழங்கு ரொட்டி போன்றவை என்றால் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பழங்கள் சாப்பிடும் போது தயிர் ஐஸ்கிரீம் இனிப்பு சர்பத் முதலியன சேர்த்து சாப்பிடக்கூடாது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இதனால் முழுமையான மாவுச்சத்து உணவுப் பட்டியலில் பழங்களைச் சேர்க்கவில்லை.

வண்ணங்களின் நிற வேறுபாடு தெரியாதவர்கள் இரவில் சரியாக நிறங்களைக் கண்டு உணருகிறார்கள். யுனிவர்சிட்டி ஆப் குரோனின்ஜென் இதைக் கண்டறிந்துள்ளது. இந்த டச்சு பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியல் துறை நிற வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளமுடியாத 326 மாணவர்களை இருட்டில் பரிசோதித்து இந்த மாணவர்கள் இருட்டான சூழ்நிலையில் பச்சைஇ சிவப்புஇ நீலம் போன்ற நிறமுள்ள பொருட்களை சரியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆரம்ப காலத்திலும் இதே போல நிறக்குருடு மக்கள் இருட்டில் தான் சரியான உணவு எது என்பதைத் தேடி எடுத்து (தட்டிலிருந்து) சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனைத் தவிர்ப்பது நல்லதா?

1. இரத்தக் கொதிப்பைக் குறைக்கிறது. 2. கொழுப்புப் பொருட்கள் இரத்தக் குழாய்களில் தங்கி இருந்தால் ஆக்ஸிஜன் செல்லத்தடை. எனவே குருதிக் குழாய்களில் உள்ள இது போன்ற டெபாஸிட்டுகளை நீக்கி ரிப்பேர் செய்கிறது. 3. இரத்தம் உறைவதை தடுக்கிறது. 4. கல்லீரல் அதிகம் கொழுப்பு உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. 5. கெடுதல் செய்யும் கொலாஸ்டிரலை குறைத்துவிடுகிறது. எனவே அசைவ உணவுக்காரர்கள் மற்ற அசைவ உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு மீனைச் சேர்த்துக் கொள்வது நல்லது.