- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இபாதத் என்றால் என்ன? வீடியோ

நாம் படைக்கப்பட்டதே அவனை வணங்குவதற்கு, எனவே வணக்கம் என்றால் என்ன? என்பதை உரிய முறையில் விளங்குவோம். நாம் ஒவ்வொரு தொழுகையிலும் உன்னையே வணங்கிறோம் – உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று ஓதுகின்றோம்.  அப்பொழுது அல்லாஹ்.. இது தான் எனக்கும் எனது அடியானுக்கு  உள்ள உறவாகும் என்று பதில் கூறுகிறான். ஆக இறைவன் நம்மைப் படைத்தவன்  நாம் அவனது அடிமை.

இபாதத் என்பது நேசம், ஆதரவு, பயம் ஆகிய மூன்று அம்சம் இருக்க வேண்டும். வேண்டா வெறுப்போடு செய்யப்படும் எந்த செயல்களும் இபாததத் – வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படாது. வணக்கம் என்றால் தொழுகை, நோன்பு போன்றன மட்டுமல்ல.. மாறாக வேண்டுதல், நேர்ச்சை, அறுத்துப் பலியிடல் போன்றனவும் இபாதத் என்ற வணக்கம் தான். அதே போன்று வாழ்வில் நாம் செய்யும் அணைத்து காரியங்களும் அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்தில் நபிகளார் (ஸல்) கூறிய முறைப்படி செய்தால் எல்லாமே இபாதத் ஆகிவிடும். ஆக நாம் மரணிக்கும் வரை இறைவனை வணங்க வேண்டும். அந்த வணக்கத்தில் உளத்தூய்மை இருக்க வேண்டும்.. மேலும் விவரம் அறிய…

உரையாற்றுபவர்: அஸ்கர் ஸீலானி