- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஆரோக்கியத்துக்கு காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

mushroom-briyani [1]அரைக்க

தாளிக்க

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களில்  இஞ்சி, பூண்டு தவிர மீதமுள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் வறுத்து, இஞ்சி, பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக  நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காளானை மஞ்சள்தூள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளவும். குக்கரில்  நெய் மற்றும்  எண்ணெய்  ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,புதினா ஆகியவற்றை முதலில் போடவும்.

பின்னர்  வெங்காயத்தை  சேர்த்து  பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு காளானை சேர்த்து வதக்கி, மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.

காளானில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக வற்றி, காளான் சுருங்கும் வரை வேக விடவும். அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

காளான் முக்கால் பக்கம்  வெந்த பின்னர், அரிசியை அதில் சேர்த்து, மசாலாவோடு  சேருமாறு நன்கு கலக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் (2  கப் தண்ணீர்) ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி, குக்கர்  மூடியை மூடி விடவும்.   ஒரு விசில் முடிந்து, இரண்டாவது விசில் வர இருக்கும்போது தீயை  அணைத்து விடவும்.

நன்றி: தமிழ்007.காம்