- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

தரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்

தரமான வாழ்க்கை நடத்துவதில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது. என ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 37 நாடுகளில் முதலிடத்தில் தாய்லாந்து முதலிடத்திலும் பஹ்ரைன் 2 வது இடத்திலும் , சீனா 3வது இடத்திலும் கேமன் தீவுகள் 4 வது இடத்திலும் , ஆஸ்திரேலியா 5 வது இடத்திலும் சி்ங்கப்பூர் 6வது இடத்திலும் மற்றும் தைவான் 8 வது இடத்திலும் ஸ்பெயின் 9வது இடத்திலும் மற்றும் பிரேசில் 10வது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

வளர்ந்துவரும் சமூக வெப்பகுதி:

ஆசியாவில் ஒரு சமூக வெப்பகுதி பெருகி வருகிறது. வாழ்க்தை தரத்தை உயர்த்த இலக்காக கொண்டு முன்னணிவகிக்க தன்னை தயார் செய்து வருகின்றன ஆசிய நாடுகள். என ஹச்.எஸ்.பி.சி., தலைவர் டீன் பிளாக்பர்ன் தெரிவித்துள்ளார்.இத்துடன் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவி்ல் மக்கள்,சமூக வாழ்க்கையை நன்கு உணர்ந்து அனுபவித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளில் குறைவு.வெப்ப மற்றும் உணவு மற்றும் கலாச்சாரம் இம்மூன்றும் நாடுகளுக்கிடையே முக்கிய பங்கு வகிக்கிறது.

பொருளாதார கண்ணோட்டம்:

பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சம்பாதிக்கும் திறன் , செலவு, வருமானம் மற்றும் திருப்தி போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது இந்த பட்டியலில் முதலிடத்தில் சுவிச்சர்லாந்து , 2வது இடத்தில் சீனா மற்றும் 3வது இடத்தில் கத்தார் இடம் பெறுகிறது.

குழந்தைகள் கல்வி,வளர்ப்பு:

குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தையும் , பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் , பெல்ஜியம் 6வது இடத்தையும் மற்றும் ஸ்பெயின் 9வது இடத்தையும் பெறுகிறது எச்எஸ்பிசி ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது

நன்றி: தினமலர்