- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

தனிமையில் இறைவனை அஞ்சி செயல்படல் – Video

வணக்கசாலிகள், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள், இபாதத்தாரிகள் என்றெல்லாம் நாம் சிலரைக் கூறுகின்றோம். இதன் அடிப்படை நாம் வெளியிலே காணும் அவர்களின் செயல்பாடுகள் தான். ஆனால் உண்மையில் இறையச்சம் உடையவர்கள் யார் எனில்.. எல்லா நிலையிலும் குறிப்பாக மனிதர்கள் யாருமே பார்க்காத நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சி செயல்படுபவன்  ஆகும்.

காரணம் மனிதன் பொது இடங்களில் பாவங்களைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற வெட்கம், தன குடும்ப அல்லது சுயகவுரவம் போன்றனவாகும். இதனால் தான் வெளியே நல்ல மனிதர்களாக வாழும் சிலர் வீடுகளில் – தனிமையில் கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையில் நாம் உண்மையான இறையச்சம் கொண்டிருந்தால் – அல்லாஹ் இருஉலகிலும் நமது வாழ்க்கையை சீராக்கி வைப்பான். தனிக் கவணம் செலுத்துவான். அவன் பொறுப்பேற்பேன். அல்லாஹ் இத்தகையவர்களுக்கு காட்டிய அருட்கொடைகள் ஏராளம். .. மேலும் விவரம் அறிய…

ஜும்ஆ குத்பா பேருரை
வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா
நாள் : 13-12-2013 வெள்ளிக்கிழமை
இடம் : ஜுபைல் போர்ட் கேம்ப்