- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken

pepperchicken [1]பெப்பர் சிக்கன் மிகவும் பிரபலமானது அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனி சிறப்பு வாய்ந்தது. . செட்டிநாடு சமையலில் இந்த பெப்பர் சிக்கன் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

செட்டிநாடு சமையல் முறையில்,  சிக்கனை சமைக்கும் பக்குவம் மிகவும் வித்தியசமாக இருக்கும்.

நாம் பொதுவாக சிக்கனை சமைக்கும் பொழுது, இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம், தக்காளியினை போட்டு சிறிது நேரம்  வதக்கிய பிறகு சிக்கனை அதில் சேர்த்து நன்றாக பிரட்டி வேகவிடுவோம்.

ஆனால் செட்டிநாடு செய்முறையில், இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம் + தக்காளி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் உள்ள தண்ணீர் தன்மை வற்றிய எண்ணெய் வெளிவரும் சமயம் ,தான் சிக்கனை சேர்த்து 5- 8 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

இதனுடைய சுவையே அதில் தான் இருக்கின்றது.  இந்த பெப்பர் சிக்கனிற்கு, பெரிய துண்டுகளிற்கு பதிலாக சிறிய சிறிய சிக்கன் துண்டுகளில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

இத்துடன் சாதம், சாம்பார், ரசம், சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வாங்க..இந்த பெப்பர் சிக்கனின் செய்முறையினை பார்ப்போம்…

சமைக்க தேவைப்படும் நேரம் :25 – 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சிக்கன் – 1/2 கிலோ
§  வெங்காயம்  – 2
§  தக்காளி – 2
§  இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
தாளிக்க :
§  எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§  சோம்பு – 1 தே.கரண்டி
§  கருவேப்பில்லை – 5 இலை

 சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§  தனியா தூள் – 1 தே.கரண்டி
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 2 தே.கரண்டி

கடைசியில் சேர்க்க வேண்டியவை :
§  மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
§  கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

நன்றி: என் சமையல் அறையில்