- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்Tamil_News_large_1390984 [1]டோ படையினர், இரவும், பகலும் சிறப்பாக பணியாற்றி, கைக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என, மொத்தம், 500 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் சேவையை சக போலீசாரும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.

கனமழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. தாம்பரம், முடிச்சூர், வரதராஜ புரம், மணிமங்கலம் பி.டி.சி., குடியிருப்பு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், கவுல்பஜார், அனகாபுத்துார், பொழிச்சலுார், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

நான்கு குழுக்கள் : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தோரையும், வீடுகளில் முடங்கி தவித்தோரையும், படகு மற்றும்ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.இந்த மீட்பு பணியில், தமிழக காவல்துறையின், மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ படையினரின் பணி, தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மிக சிறப்பாக இருந்தது.

அக்குழுவினர், நான்கு குழுக்களாக பிரிந்து, தாம்பரம் கன்னடபாளையம், மீஞ்சூர், பள்ளிக்கரணை, மணிமங்கலம் பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர்.ஒவ்வொரு குழுவிலும், 20 கமாண்டோக்கள் பணியாற்றி வருகிறனர். அவர்கள் அனைவரும், மீட்பு பணிக்காக கடந்த, 16ம் தேதி இரவு, வரவழைக்கப்பட்டனர். தாம்பரம் கன்னடபாளையத்தில் எஸ்.ஐ., கதிரேசன் தலைமலையிலான, 20 பேர் கொண்ட குழுவினர், 16ம் தேதி இரவு முதல் அடுத்த நாள் இரவு வரை இடைவிடாமல், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பணியின் போது, பல சிக்கல்களை சந்தித்து, தங்கள் உயிரை பணையம் வைத்து, அந்த மீட்பு குழுவினர், 500 பேரை பத்திரமாக படகு மூலம் மீட்டுள்ளனர்.

மீட்பு பணி குறித்து, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியதாவது: கடந்த, 19ம் தேதி (19-11-2015), இரவு நான்கு அதிநவீன படகுகள், இரண்டு ரப்பர் படகுகள் என, மொத்தம் ஆறு படகுகளை கொண்டு வந்தோம். அன்று இரவு முதல் மறுநாள் இரவு வரை இடைவிடாமல் மீட்பு பணியில் ஈடுபட்டோம். குடியிருப்புகளுக்குள் பெரிய படகை எடுத்து சென்றபோது, சில தெருக்கள் குறுகலாக இருந்ததாலும், மரங்கள் விழுந்து கிடந்ததாலும், கேபிள், மின் கம்பிகள் அறுந்து கிடந்ததாலும் செல்ல முடியவில்லை.

அதுபோன்ற இடங்களில் மிக சிரமப்பட்டு, உள்ளே நுழைந்து, பொதுமக்களை மீட்டோம். ஒரு வீட்டில், முதல் மாடி வரை தண்ணீர் தேங்கியிருந்தது. இரண்டாவது மாடியில், எட்டு மாத கைக்குழந்தையை வைத்து கொண்டு, பெற்றோர் தவித்துத் கொண்டிருந்தனர்.

கர்ப்பிணியின் அலறல் : அந்த வீட்டிற்குள்ளேயே படகை எடுத்து சென்று, கட்டடத்தில் ஏறி குழந்தையும், பெற்றோரையும் மீட்டோம். அதேபோல், இரவு 11:30 மணிக்கு எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. அந்த வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பத்திரமாக மீட்டு வந்தோம். சில நேரங்களில் எங்கள் படகுகள் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது.

அப்போதும், சுதாரித்து கொண்டு, எங்கள் உயிரை பற்றி கூட நினைக்காமல், மீட்பு பணியில் ஈடுபட்டோம்.வெள்ளத்தில் சிக்கி தவித்தோரை, நாங்கள் நெருங்கிய போது, எங்களை பார்த்தவுடன், அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்பட்டதை உணர்ந்தோம். அப்போது அவர்களை, பத்திரமாக மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. வெளியே மீட்டு வந்தபோது, எங்கள் பணியை நினைத்து பெருமைப்பட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.