Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,413 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொடுத்துப் பெறுங்கள்!

விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது!  உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.

புதியதாக சந்திக்கும் இரு நபர்களிடையோ, அல்லது ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பமாக இருக்கும் சமயத்திலோ அல்லது ஒரு அலுவலகம் அல்லது நபரை சந்திக்க செல்லும் இடத்திலோ நம்மைப்பற்றி நாமே எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்!

எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் நபர்களுக்கு முதலில் விஷ் பண்ணுங்கள்.  (அங்கு இருப்பவரின் வயதைப்பற்றி கவலைப்படாதீர்கள்).. அறைக்கு உள்ளே போக வேண்டுமெனில் (அறைக் கதவு திறந்திருந்தாலும்)  அனுமதி கேட்டபின்பு உள்ளே செல்லுங்கள்.  உங்கள் பெயரை இனிஷியலுடன் திருத்தமாச் சொல்லுங்கள்.  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைக்கூறிய பின்பு நீங்கள் பார்க்க வேண்டிய நபரைப்பற்றி விசாரியுங்கள் அல்லது உங்களுக்கு தேவையான தகவல்களை “கோரிக்கை”யாக தெரிவியுங்கள்.  அத்தகவல்கள் எதற்காக தேவைப்படுகின்றன என்பதையும் தெரிவித்துவிடுங்கள்.

மேற்படி தகவல்கள் நீங்கள் யார்?  எதற்காக வந்துள்ளீர்கள்? என்பதற்கு போதுமானதாக இருக்கும்.

சில அலவலகங்களில் இதை எழுதிக் கேட்பார்கள்.  எப்போதும் சில வெள்ளைத்தாள்கள் உங்கள் பாக்கெட்டில் இருக்கட்டும். கேட்டதை புரியுமாறு சுருக்கமாக எழுதிக் கொடுங்கள்.

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய தகவல்கள் தர தாமதித்தாலோ, அங்கு அசட்டையான சூழ்நிலை நிலவினாலோ மீண்டும் ஒருமுறை அங்கிருப்பவரிடம் உங்களுக்கு அது தேவைப்படும் காரணத்தைக் கூறுங்கள். அவசியமேற்பட்டால் அலுவலமாக இருப்பின் உயரதிகாரியை பார்க்க வேண்டுமா?  என்பதையும் அவரிடமே கேளுங்கள்.  “வேண்டாம், பிறகு வாருங்கள் என்று கூறினாலும் சரி, நீங்க அங்க போனாலும் இந்த சீட்டுக்குதான் திரும்பி வரணும்” என்று கூறினாலும் சரி, “சரிங்க சார் வெயிட் பண்றேன்ணு” சொல்லுங்க.

எந்தக் காரணத்துக்காகவும் நீங்கள் காத்திருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் எரிச்சலைக் காட்டிவிடாதீர்கள். இதனால் நீங்கள் பெற வேண்டிய தகவல்கள் மேலும் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

சிலருக்கு தங்களைப்பற்றி தாங்களே எப்படி சொல்லிக் கொள்வது என்பது சங்கோஜமாக இருக்கும்.

இன்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கும், வேலை தேடிப்போகும் இடத்தில் உங்களைப் பற்றி நீங்கள் கூறவேண்டியது கட்டாயமானதாகும்.

முதலாளி அல்லது நேர்முகம் நடத்துவோர் உங்கள் சான்றிதழ்களைப பார்த்துக் கொண்டே, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்.

“அதுதான் சர்டிபிகேட்லியே இருக்கே!” என்று நீங்கள் நினைக்கக்கூடாது.  உங்களோடு சகஜமாக  பேசத் துவங்குவதற்கு உங்கள் பெயரைக் கேட்பது உதவும்.  உதாரணமாக தியேட்டரில் இடைவேளையின்போது திடீரென சந்திக்கும் நண்பனை எங்க பிக்சருக்கு வந்திங்களான்னு கேட்பது போலத்தான், உங்கள் பெயரை அவர் கேட்பார்.

இவ்விஷயங்களில் புதிதாக இருப்பவர்களுக்கு சில டிப்ஸ்:

1 ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்பு நின்று உங்கள் பெயரை இன்ஷியலுடன் புன்சிரிப்புடன் உச்சரித்துப் பழகுங்கள் (வெட்கப்படாதீர்கள். கூச்சம் குறையும்)

2. உங்கள் பெயரை சில முறையேனும் (தனியாக) சத்தம்போட்டு சொல்லிப்பாருங்கள்.

3. இண்டர்வியூ செல்வதற்கு முன்பு (நண்பர்களிடம்) உங்களைப் பற்றி அறிமுகம் செய்து பழகுங்கள்.  (அன்று நண்பர்களுக்கு டீ, வடை நீங்கள் சப்ளை செய்துவிடுங்கள்).

4. தனியாக நாற்காலியில் அமர்ந்து, நின்று கொண்டு பல முறை பயிற்சி செய்து பாருங்கள்.

5. உங்களை32ப்பற்றி எழுதி வைத்து படித்துப் பாருங்கள்.

6. அலுவலக நிமித்தம் சென்றால் சரிசமமான பதவியில் இருப்பவராக இருந்தால் அங்கிருப்பவரிடம் (ஜென்டில் ஹேண்ட் ஷேக்) கைகுலுக்கலாம்.

உங்களைப் பற்றி சிறப்பாக தகவல் “கொடுங்கள்” உங்களுக்கு வேண்டியதை தாராளமாக “பெறுங்கள்”.

மணவழகன் ஜே