- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை! (நோனி)

மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை

மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து noni_2532490g [1]சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.

தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் கிராக்கி அதிகம்.

noni [2]தமிழகத்தின் வறண்ட பாலை யாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி எனும் கிராமத்தில், மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, கடந்த 6 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறார் விவசாயி சந்தவழியான்.

அவர் ‘நோனி’ பற்றி ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியது:

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு, எங்கள் குடும்பத்தினர் பரம்பரை வைத்தியர்களாக இருந்துள்ளனர். அதனால் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரங்கள், தாவரங்களைப் பற்றிய அறிவு பாரம்பரியமாக இருந்துவந்தாலும் நான் சித்த மருத்துவர் ஆகாமல் சென்னை நியூ காலேஜில் இன்டர்மீடியட் படித்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல ஊர்களுக்குச் சென்று பணிபுரிந்தேன்.

இந்தியாவில் மறு அறிமுகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நோனியை மறு அறிமுகம் செய்தபோது மஞ்சனத்தி மர வகையைச் சார்ந்த வெண்நுணாவான நோனியின் மீது ஈர்ப்பு உண்டானது. அதன்பின்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் மூலம் நோனி பழக்கன்றுகளை 2008-ல் இறக்குமதி செய்து, தற்போது திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி கிராமத்தில் ஐந்தரை ஏக்கரில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வளர்த்து வருகிறேன்.

நோனி ஜூஸ்

noni syrup [3]நடவு செய்த ஒரே ஆண்டில் நோனி காய்ப்புக்கு வந்து விடும். நான்கு ஆண்டு வயது கொண்ட ஒரு மரத்தில் 40 கிலோ முதல் 80 கிலோ வரையிலும் ஆண்டுக்கு பதினொரு மாதங்கள் விளைச்சல் எடுக்கலாம். இதில் சுமார் 10 லிட்டர் வரையிலும் நோனி ஜூஸ் எடுக்கலாம். ஒரு மரம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலும் பலன் தரும்..

மரங்களில் இருந்து பறித்த நோனி பழங்களை ஐந்து மணி நேரத்துக்குள் பெரிய டிரம்களில் போட்டு, அதிகபட்சம் 22 நாட்கள் வரையிலும் இருட்டறையில் வைக்க வேண்டும். பின்னர், கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து மூன்றுமுறை வடிகட்டினால் களி மாதிரி வரும். இதனை இரண்டு வாரங்கள் கழித்து ஜூஸ் ஆகப் பயன்படுத்தலாம்

தற்போது மருந்துக்கடைகளில் நோனி ஜூஸ் ஒரு லிட்டர் ரூ. 1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள மோகத்தால் நாம் பாரம்பரிய மருத்துவ அறிவை இழந்து தவிக்கிறோம். நோனியின் பழம், வேர், இலைகள் என அனைத்தும் எதிர்மருந்தாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் சுரக்க நோனிப் பழச்சாறு சிறந்த மருந்தாகப் பயன்படக் கூடியது.

மிகச் சிறந்த பணப்பயிர்

ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் கடற்கரை ஓரங்களில் நோனி மரங்களை பயிரிடுகின்றனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்துக்கு மிகச் சிறந்த பணப்பயிராக நோனிப்பழ சாகுபடி இருக்கும். மேலும் ஒவ்வொருவரும், தமது வீட்டுத் தோட்டத்திலும் நோனி மரங்களை வளர்த்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தை மீட்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

“நோனி’ பழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த, கோவையை சேர்ந்த, தோட்டக்கலைத் துறையினர் முன்னாள் தலைவர், ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவை தாயகமாக கொண்ட, “மொரின்டா சிட்ரி போலியா’ மரத்தின் பழம் தான் நோனி. நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர் சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன.
பழச்சாறு, செல்களின் துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும் படி செய்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், உடல் இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கும். உடலில், செரோடோனின், எண்டார்பின் என்னும் நல்ல ரசாயனத்தை போதியளவு சுரக்க செய்து, தக்க வைப்பதால், மன அழுத்தம் இருந்தாலும் உணரச் செய்வதில்லை.

மாறி வரும் உணவுப் பழக்கம், சூழல் ஆகியவற்றால், 40 ஆண்டுகளுக்கு முன், மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில், தற்போது, 60 சதவீதம் தான் உள்ளதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பழச்சாறு, ஆரோக்கியமற்ற செல்களை, ஆரோக்கியமாக மாற்றுகிறது.

நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி உள்ளது. அதனால் தான், நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி, நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால், எந்த மருந்தும் பயன் தராது.

அவ்வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. தவிர, உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு மருந்தாகவும், சிறந்த வலி நிவாரணியாகவும், இப்பழச்சாறு பயன்படுகிறது. இவ்வளவு சிறப்புகள் இருப்பினும், பொதுமக்களிடையே போதியளவு சென்றடையாத நிலையில், இதன் முக்கியத்துவத்தை உணர்த்த, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையில், ஆராய்ச்சி மேற்கொண்டு வரும், தோட்டக்கலைத் துறையின் முன்னாள் முதல்வர் மற்றும் பேராசிரியர் பொன்னுசாமி கூறியதாவது:

நோனி பழம், துரியன் பழத்தை போன்று, துர்நாற்றத்தை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இது, பொதுமக்களிடையே முறையாக சென்று சேர வேண்டும் என்பதை கருதி, பல ஆண்டுகளுக்கு முன், சென்னையில், “உலக நோனி ஆராய்ச்சி மையம்’ துவக்கப்பட்டது. இதில், இந்தியளவில் தலைசிறந்த விஞ்ஞானிகள், தோட்டக்கலைத் துறையில் பெயர் பெற்றவர்கள் இடம் பெற்று, நோனி பழம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பலனாக, நோனி பழச்சாற்றோடு, கொய்யா, நெல்லி, ஆரஞ்சு ஆகியவற்றின் ஏதாவது ஒரு சாற்றை கலந்து, துர்நாற்றம் வீசாதவாறு பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் முறையை ஊக்குவித்து வருகின்றனர். தவிர, பல்பொடி, இனிப்பு பண்டங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. நோனி ஆராய்ச்சியில், வளர்ப்பு முறை, உரம், உற்பத்தி அதிகரிப்பு, விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மருத்துவத் துறையை சார்ந்த விஞ்ஞானிகளும், மருத்துவத் துறையில் இதை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்த பார்வையை விசாலப்படுத்தியுள்ளனர்.
இதன் பயனை, பொதுமக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பது தான், ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். வரும் சில ஆண்டுகளில் நிச்சயம் அது நிறைவேறும்.
இவ்வாறு, பொன்னுசாமி கூறினார்.

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் என்று பொருள்.

அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்
நோனி பழத்தில் உள்ளன. இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில் உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.

நோனி பழம், செல் சவ்வுகளின் மீது நச்சுப் பொருட்கள் படியும்போது, செல் சவ்வுகளில் உள்ள துளைகள் அடைபட்டுப் போகினறன. அதனால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச்சத்துகள் செல்லுக்குள் போகமுடிவதில்லை. நாம் உடம்பு சரியில்லாதபோது, டாக்டரிடம் போகிறோம். சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான பலன் அளிப்பதில்லை. காரணம், மருந்துகள் செல்லுக்குள் செல்வதில்லை.

நோனி பழச்சாறு, செல்களின் துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.

நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.

வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப்நோனி பயன்கள்

போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.

நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. 1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.

நோனி பழச்சாறு auto immune நோய் ஏற்பட்டுவிடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்குகிறது. நம்மைத் தினமும் நோய்க்கிருமிகள் தாக்கினாலும், நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. நம்முடைய உடம்பை, ஒரு ரசாயன உற்பத்திசாலை என்று சொல்லலாம்.

நாம் பேசும்போதும், நடக்கும்போதும், கேட்கும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பொருள் மற்றொரு பொருளாய் ரசாயன மாற்றம் பெறுகிறது. நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான Nitric Oxide என்னும் வாயு, மாலிக்யூலை நம் உடல் உற்பத்தி செய்கிறது. நோனி பழச்சாறு நம் உடலில் போதுமான Nitric Oxide உற்பத்தியாவதற்கு உதவுகிறது. நம் உடம்பில் ரசாயன மாற்றங்கள் சரியாக நிகழும்போது நம் உடல்

நோனி பழரசம் 

ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் நோனி பழச்சாற்றை உட்கொள்ளும்போது, பழச்சாற்றில் இருக்கும் proxeronine நம் உடம்பில் இருக்கும் Proxeronase உடன் சேர்ந்து, Xeronine உருவாகிறது. இது, புரோட்டீன் செல்களை செம்மையாக வேலை செய்ய உதவுகிறது.

நோனி பழச்சாறு ஆரோக்கியமான செல்களை ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்ற செல்களை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. அந்த வகையில் நோனி பழச்சாறு, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கும் பலனளிக்கிறது.

நோனி பழச்சாறு சக்திவாய்ந்த adopt gin ஆக செயல்படுகிறது. Adopt gin என்பது, உடல் இயக்கத்தை சீராக வைக்கும் ஒரு பொருள். நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி இருக்கிறது. அதனால்தான் நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால் எந்த மருந்தும் நல்ல பலனைத்தராது. நோனி பழச்சாறு, இந்த தானாகவே குணமாகும் சக்தினை வலுப்படுத்துகிறது. அந்த வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. நோனிப்பழச்சாறு ஜீரண சக்தியைப் பெருக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது.