- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

நபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்!

நபி ஸல் அவர்களின் வாழ்க்கை என்பது நமக்கு படிப்பினையாகும். அவர்களின் சரித்திரத்தை அரபியில் ஸீரா என்று வேறுபடுத்தப்படுகிறது. மற்றவைகள் தாரீஹ் என்று அழைக்கப்படுகிறது. ஷேக் மன்சூர் மதனி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த மூன்று இரவுகளை நமக்கு படிப்பினையாகத் தருகிறார்கள. ஒன்று யூதர்கள் நிறைந்திருந்த கைபர் போரின் போது உள்ள நிகழ்வாகும். முதல் நாள் அபூபக்கர் ரழி அவர்கள் தலையில் வெற்றி பெறவில்லை. இரண்டாம் நாள் உமர் ரழி அவர்கள் தலைமையிலும் வெற்றி பெறவில்லை. அந்த இரவு நபிகளார் கூறினார்கள். நாளை ஒருவரை அனுப்புவேன் அவர் அல்லாஹ், ரசூல் அவர்களை விரும்புவார். அவரை அல்லாஹ்வும் ரசூலும் விரும்புவார்கள். அவர் வெற்றி பெறுவார்.” என்றார்கள். இரண்டாவது இரவு கந்தக் என்றும் அஹ்ஜாப் என்றும் அழைக்கப்படும் அகழ் போரின் போது ஹூதைபியா ரழி அவர்களுடன் நடந்த சம்பவமாகும். இந்த போருக்காக மட்டும் தான் அல்குர்ஆனில் தனி அத்தியாயம் உள்ளது. முஸ்லிம்களை முழுமையாக அழித்து விட முஷ்ரிக்கள் அணைவர்களும் ஒன்று கூடி போர் ஏற்பாடு செய்தார்கள். அகழி தோண்டப்பட்டது. ஒரு இரவு குடுங்குளிர், கடும் காற்று மற்றும் அடுத்த பக்கம் எதிரிகள். அந்த நேரத்தில் நபிகளார் அவர்கள் ”எதிர் பக்கத்தில் சென்று உளவு பார்க்க” ஹூதைபா ரழி அவர்களை தேர்ந்தெடுத்து சுவர்கத்து நன்மாரயம் கூறினார்கள். மேலும் விபரங்களையும் மூன்றாவது நிகழ்ச்சியையும் அறிய வீடியோவை கிளிக் செய்யவும்…