- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

அல்லாஹ்வின் உன்மையான அடியார்கள்

அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ்வின் அடிமைகள் பற்றி அல்புர்கான் 63 முதல் 76 வரை கூறியுள்ளான். அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்த அணைத்துமே அவனுக்கு கட்டுபட்டவைகள் – அடிமைகள். நபிகளார் அவர்களும் தன்னை அளவுக்கு மேல் புகழாதீர்கள் – ஈஸா அலை அவர்களைப் புகழ்ந்தது போன்ற செய்யாதீர்கள்” என்றார்கள். அவல்லாஹ் மட்டும் தான் நமது எஜமானன். அவன் ரஹ்மான் – அளவற்ற அருளாளன். ரஹ்மானின் அடியார்கள் என்பவர்கள் இந்த உலகில் பணிவுடன் வாழ வேண்டும். – அதாவது பெருமையில்லாமல் – அகம்பாவம் இன்றி வாழ்வார்கள். மேலும் அல்லாஹ் தனது திருமறையில் தன் அடியார்கள் பற்றி ”அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள். அல்குர்ஆன் – (28:55) மேலும் அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள். என்றும் அல்லாஹ் கூறுகிறான். இரவு தொழுகை – வணக்கம் என்பது முஃமின்களுக்கு மிகவும் அவசியமானதாகும். மேலும் விவரம் அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.