- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

அல்லாஹ் மனிதனை சிந்திக்கச் சொல்கிறான். எவன் சிந்தித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றானோ அவனைத் தான் விரும்புகிறான். காரணம் இவன் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை பயந்து வாழ்வான் – அவனது சட்ட திட்டங்களை முழுமையாக மதித்து நடப்பான். குருட்டுத்தனமாக அல்லாஹ்வை நம்புகிறவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை. அல்லாஹ்விடம் ”நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் எனது மனது திருப்தியடைய .. இறந்தவர்களை நீ எப்படி உயிர் கொடுக்கின்றாய் என்பதை எனக்க காட்டு” என்று இபுறாஹிம் அலை அவர்கள் கேட்டதை அல்குர்ஆனில் பாராட்டிக் கூறுகிறான் . அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் நாலு பறவைகளை துண்டு துண்டாக வெட்டி கலவையாக நாலு மலைகளில் வைக்கப்பட்டதை உயிர்பித்துக் காண்பித்தான். 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனில் நமமை சிந்திக்க வைக்க பல அற்புத விசயங்களைத் தந்துள்ளான். இதில் ஒன்று தான் கருவியலாகும். விந்தனுவிலிருந்து கரு முட்டை எவ்வாறு உருவாகுகிறது என்ற விவரத்தைப் பார்க்கலாம். கனடாவைச் சேர்ந்த கருவியல் அறிஞர் கீத் மூர் அல்குர்ஆன் எவ்வாறு நவீன கருவியல் கருத்துடன் ஒன்றுபடுவதை பல உதாரணங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டார். மேலும் இது பற்றி அறிய ஷேக் ஆதில் ஹசன் அவர்களது இந்த வீடியைப் பார்க்கவும்.