- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து வாழ்கிறோம். ஸஹாபாக்களின் வாழ்க்கை நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். உலகத்தை துச்சமாக மதித்தார்கள். அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாம் இந்த உலகை அதிகமாக நேசிக்கின்றோம் – மறுமையை மறக்கின்றோம். அல்லாஹ் நமக்கு இட்ட கட்டளைகளை மறந்து தொழில் தான் தன்னை உயர்த்தும் என்று தொழுகையை மறந்து தொழிலின் பின்னால் ஓடுகிறோம். அடுத்த காரணம் குர்ஆன் ஹதீசை உதறி தள்ளி விட்டு தன் மனோஇச்சையைப் பின்பற்றுவதாகும். மேலும் விவரம் அறிய ஷேக் M.I.M ஜிபான் ஸஹவி மதனி அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்.